கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
இன்று நடைபெற்ற எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரிசாட் பதியுதின் பங்கேற்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பதியுதின் தெரிவித்துள்ளார். அமைச்சருடன் அண்மையில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றில் இணைந்து கொண்ட அமீர் அலியும் இந்த செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதற்காக அண்மையில் ஏ.எச்.எம்.அஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் ரிசாட்டுடன் எதிர்க்கட்சியில் இணைவு
7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் அமைச்சர் ரிசாட் பதியுதினுடன் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த உறுப்பினர்களே இவ்வாறு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
கொழும்பு மார்கஸ் வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.மதவாதத்தை தூண்டும் தரப்பினருக்கு அரசாங்கம் தண்டனை விதிப்பதில்லை. தண்டனை விதிக்குமாறு கோரினாலும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை.
முஸ்லிம் சமூகத்தின் நலன்களை கருத்திற்கொண்டே ஆளும் கட்சியிலிருந்து விலகிää மைத்திரிபாலவை ஆதரிக்கின்றோம்.மைத்திரிபால ஜனாதிபதியாக பதவி ஏற்றால் இணங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம் என ரிசாட் பதியுதின் தெரிவித்துள்ளார்.