ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனேயே தாம் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
தாம் போட்டியிடுவது சந்திரிகாவுடனேயே. இது மங்கள – சந்திரிகா ஒற்றுமையாகும். என்னோடு போட்டியிடத் தகுதி வாய்ந்தவர் ரணில் என்றே நான் நினைக்கிறேன்' இதேவேளை, அமைச்சர்களால் அமைச்சரவை கூட்டத்தக்கு அனுப்பி வைக்கப்படும் பைல்கள் குறித்தே நான் அன்று கூறினேன். அமைச்சர்களால் அமைச்சரவைக்கு அனுப்பப்படும் பைல்கள் இருக்கின்றன. நான் அந்த பைல்கள் குறித்தே தெரிவித்திருந்தேன். கெபினட் பத்திரமொன்றை வெளியிட முடியாது தானே. ஆவை இரகசியமானவை ஆனால், நான் சொன்னதை ஊடகங்கள் மாறி விளங்கி வெளியிட்டன. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு இதைப்பற்றி விசாரித்திருந்தால் நான் விளக்கம் கொடுத்திருந்திருப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்