வடக்கு–கிழக்கு மாகாணங்களை இணைக்கமாட்டோம்.
மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களையும் வழங்கப்போவதில்லை. இதுதான், இந்த அரசாங்கத்தின் தெளிவான கொள்கை. இந்த விடயங்கள் தொடர்பில் எதிரணி வேட்பாளரின் நிலைப்பாடு என்ன என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வினா எழுப்பியிருக்கின்றார்.
அது மட்டுமல்லாமல், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் குறித்து பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேன என்ன கொள்கையைக் கொண்டிருக்கின்றார் என்றும் அமைச்சர் பீரிஸ் வினவியிருக்கின்றார். வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்கள், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் என்பன தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளோடும், அவர்கள் கோருகின்ற சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி என்ற விடயங்களோடும் நேரடியாகத் தொடர்புபட்ட விடயங்களாகும்.
இந்த விடயங்களில் எதிரணியினருடைய நிலைப்பாடு என்ன என்பதை சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த பொது வேட்பாளர் முன்வர வேண்டும் என்பதே அமைச்சர் பீரிஸின் கோரிக்கையாகும். தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் எதனையும் நாங்கள் அவர்களுக்கு வழங்க மாட்டோம்.
நீங்கள் அந்த உரிமைகளை அவர்களுக்கு வழங்கப் போகின்றீர்களா என்று மறைமுகமாக அமைச்சர் பீரிஸ் எதிரணியினரிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றார். சிங்களப் பேரினவாத அரசானது தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்கக் கூடாது. அவ்வாறு அரசியல் உரிமைகள் வழங்கப்படுமானால், அது சிங்கள மக்களையும் சிங்கள தேசத்தையும் காட்டிக் கொடுக்கின்ற கைங்கரியமாகும் என்பதை அமைச்சருடைய கூற்று தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் தீர்மானித்திருக்கின்றபோது, எதிரணியினர் அவர்களுடன் கூடி குலாவுகின்றார்கள். தமிழர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களுடன் ஒப்பந்தம் செய்வதற்குத் தயாராகின்றார்கள்.
ஆகவே, அவர்களை நீங்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்து, தமிழ் மக்களுடைய உரிமைகளை மறுக்கின்ற எமக்கு – எமது வேட்பாளராகிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே அமைச்சர் பீரிஸின் கோரிக்கையாகும். தமிழர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களில் எதிரணியினருடைய நிலைப்பாடு குறித்து அராசங்கத் தரப்பிலிருந்து அமைச்சர் பீரிஸ் எழுப்பியுள்ள கேள்விகளின் பின்னால் இன்னும் பல விடயங்கள் புதைந்து கிடக்கின்றன.
அரசாங்கத் தரப்பில் இருந்து இந்தக் கேள்விகள் எதிரணியினர் மீது பாய்ந்திருப்பதை ஒரு வகையில் சுவாரசியமான விடயமாகவும் நோக்கலாம். அதேநேரத்தில் இந்தக் கேள்விகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை நோக்கி - இலங்கைத் தமிழரசுக் கட்சியினரை நோக்கி எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விடயங்களில் அரசாங்கம் ஏற்கனவே தெளிவானதொரு நிலைப்பாட்டில் இருக்கும்போது, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகக் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ள எதிரணியினர் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் கேட்டறிந்திருக்கின்றார்களா? என்பதைத் தமிழ் மக்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இது முக்கியமானதொரு விடயமாகும். தமிழ் மக்களுக்கு ஏன் தெளிவுபடுத்த வேண்டும்? தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் என்பவற்றை முன்வைத்தே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்பது வழக்கம். ஆனால் இந்தத் - ஏழாவது ஜனாதிபதி தேர்தல் அந்த வரையறைக்கு அப்பாற்பட்டிருக்கின்றது. ஆட்சி மாற்றம் வேண்டுமா வேண்டாமா? என்ற கேள்விக்குப் பதிலளிக்கின்ற ஒரு தேர்தலாக இது அமைந்திருக்கின்றது.
ஆட்சி மாற்றம் தேவை என்பதில், தமிழ் மக்களுக்கு மாற்று கருத்து எதுவும் இருக்க முடியாது. ஏனெனில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் கொள்கைகள் தமிழ் மக்களுடைய உடனடி தேவைகளை – அரசியல் தேவைகளை பூர்த்தி செய்யத்தக்கவையல்ல. யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகின்ற போதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம், மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரம் என்பன இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அத்துடன், யுத்தம் முடிந்துவிட்ட போதிலும், இராணுவத்தின் பிடியில் இருந்து அவர்கள் இன்னும் விடுபடவில்லை. மாறாக இராணுவத்தின் பிடிக்குள் நாளுக்கு நாள் அவர்கள் இறுகிச் செல்கின்ற போக்கையே இந்த அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது. இந்த அரசும், அதன் தலைவராகிய ஜனாதிபதியும் தமது சுய அரசியல் நலன்களுக்காகவே தமிழ் மக்களின் வாக்குகளைப் பயன்படுத்த முனைந்திருக்கின்றார்களே தவிர அவர்களுக்கு நிம்மதியான உரிமைகளுடன் கூடிய வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதற்கு முன்வரவே இல்லை.
முப்பது வருடங்களாகத் தொடர்ந்த ஒரு மோசமான யுத்தம் - சரியோ, பிழையோ ஒரு முடிவுக்கு வந்து நாட்டில் அமைதி ஏற்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிந்த பின்னராவது, தமது பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்்ஷவும், அவருடைய அரசாங்கமும் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவார்கள் என்று யுத்தப் பாதிப்புகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் முகம் கொடுத்த மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.
அரசியல் தீர்வை நோக்கி இந்த அரசாங்கம் இன்று செல்லும் நாளை செல்லும் என்று அவர்கள், கடந்த ஐந்தரை வருடங்களுக்கு மேலாக எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தார்களே தவிர, அவர்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு அரசாங்கம் உரிய முறையில் செயற்படவே இல்லை. தமிழ் மக்கள் தமது எதிர்பார்ப்புக்கள், அபிலாஷைகள், பிரச்சினைகள் என்பவற்றை பல்வேறு வழிகளின் ஊடாகவும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள்.
தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வரவேண்டும் என்பதை அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் வாக்களித்த முறைமையின் கீழ் அரசுக்கு அவர்கள் ஆழமாக உணர்த்தியிருந்தார்கள். இருந்த போதிலும், அரசாங்கம் அதனை கவனத்தில் எடுத்துச் செயற்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் தமக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படுத்துவதற்காகவே, கடந்த கால தேர்தல்களில் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து வந்துள்ளார்கள். இந்தத் தேர்தலிலும் அவர்கள் எதிர்த்து வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் தமது பிரதிநிதிகள் என சொல்லக்கூடிய எவரும் முக்கிய வேட்பாளராகப் போட்டியிடவில்லை.
பேரினவாத சிங்களக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே இந்தத் தேர்தலின் இரண்டு முக்கிய வேட்பாளர்களாகத் திகழ்கின்றார்கள். இந்த இருவரில் ஒருவர் குறித்து ஏற்கனவே தமிழ் மக்கள் ஒரு முடிவைக் கொண்டிருக்கின்றார்கள். ஆட்சி மாற்றம் ஒன்று தேவை என்பதற்காக மற்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதனால் ஏற்படப் போகின்ற மாற்றங்கள் அல்லது நன்மைகள் என்ன என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.
அந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரதும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரதும் கடமையல்லவா? இத்தகைய ஒரு நிலைமையில் தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் எதிரணியின் பொது வேட்பாளர் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார், எதிரணியினர் என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்கள்? என்பதைக் கண்டறிந்து தெளிவுபடுத்த வேண்டியது, தமிழ் மக்களின் தலைவர்களின் தலையாய கடமையாகும். அந்த பொறுப்பை அவர்கள் தட்டிக்கழிக்க முடியாது. அதேபோன்று அவர்கள் ஏனோதானோ என்று, இந்த விடயத்தில் நடந்து கொள்ளவும் முடியாது.
என்ன நடக்கின்றது?
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் எதிரணியினருடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை அரச தரப்பினர் தொடர்ச்சியாக சுமத்தி வருகின்றார்கள்.
அத்தகைய ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளப்படவில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளு மன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா, வவுனியாவில் நடைபெற்ற அந்தக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிரணியினருடன் கூட்டமைப்பு எந்தவிதமான ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்று மறுத்துரைத்திருக்கின்றார்.
அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், அம்பாறையில் இடம்பெற்ற பிரதேச சபை மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது இரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளப்படவில்லை. அவ்வாறு ஒப்பந்தம் செய்து கொண்டதற்கான சாட்சியமிருந்தால் அதனை வெளியிடுமாறு ஜனாதிபதிக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
தமிழ் மக்களின் தலைவர்களாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். அந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரச தரப்பினர் புறந்தள்ளி நடக்கின்றபோது, வேறு தரப்பினருடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் தவறேதும் இருக்க முடியாது.
அவ்வாறு ஒப்பந்தங்கள் செய்யக் கூடாது என்று எவரும் அவர்களுக்கு உத்தரவிடவும் முடியாது. தலைவர்கள் தங்களை நம்பியிருக்கின்ற மக்களின் நன்மைகளுக்காகச் செயற்படும்போது, அதனைத் தவறிழைத்ததாக எவரும் கூறவும் முடியாது. அதேநேரத்தில், இத்தகைய செயற்பாடுகள் வேறு ஒரு தரப்பினரைப் பாதுகாப்பதற்காக, அல்லது அவர்களின் அரசியல் நலன்களை மேலோங்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அனுமதிக்கவும் முடியாது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரைப் பொறுத்தமட்டில், அவர்கள் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. அவ்வாறான செயற்பாடுகளில் அவர்கள் இதுவரையில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் இல்லை. எனவே, இந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் எடுக்கின்ற முடிவு தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு தரப்பைப் பாதிக்கும் என்பதற்காக அதனை வெளிப்படையாகக் கூற முடியாது என்று கூறுவதற்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்.
கூட்டமைப்பினர் எடுக்கின்ற அல்லது ஏற்கனவே எடுத்துள்ள முடிவின் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக நன்மைகள் கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம், உறுதிமொழி ஏதாவது இருக்குமேயானால், அதற்காக – தமிழ் மக்களின் நன்மை கருதி இரகசியம் காக்கலாம். அவ்வாறு எதுவும் இல்லையென்றால் கூட்டமைப்பினரின் முடிவு குறித்து இரகசியம் காப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையென்றே கூற வேண்டும்.
கூட்டமைப்பினரின் முடிவு குறித்து இரகசியம் காப்பதென்பது எவ்வளவு காலத்திற்கு சாத்தியமாகும் என்பதும் முக்கியமானது. ஏனெனில் வாக்களிப்பு தினத்திற்கு முன்னதாக எப்படியும் அதனை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். அந்த முடிவுக்கமைய, இன்னாருக்கே இன்ன தரப்பினருக்கே வாக்களிக்க வேண்டும் என்ற தமிழ் மக்களுக்கான அறிவித்தலை வெளியாருக்குத் தெரியாமல், இரகசியமாக, கூட்டமைப்பைத் தலைமையாகக் கொண்டுள்ள மக்களுக்கு மட்டும் தெரிவிக்க முடியும் என்று கூறுவதென்பது நகைப்புக்குரிய விடயமாகும்.
ஆனால், இதில் உள்ள முக்கிய விடயம் என்னவென்றால், கூட்டமைப்பின் தலைமை – குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தத் தேர்தலில் யாரை ஆதரிப்பது, யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். அந்த முடிவுக்கு அமைவாகவே உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களை அறிவதற்கான கூட்டங்கள் என்ற பெயரில் தமிழரசுக் கட்சியினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கூட்டங்களில் தலைவர்களினால் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்று அத்தகைய முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் கூறுகின்றார்கள். ‘பெயரளவிலேயே அவர்கள் எங்களிடம் கருத்துக்களைக் கேட்டார்கள். யாருக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோமோ, அந்தத் தரப்பினரிடம், அமெரிக்கா போன்ற வலிமை மிக்க நாட்டுப் பிரதிநிதியொருவரின் முன்னிலையில் உடன்பாடு ஒன்று எட்டப்பட வேண்டும்.
என்று நாங்கள் எங்களுடைய கருத்தைத் தெரிவித்திருந்தோம். ஆனால் அது குறித்து எமது தலைவர்கள் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. அதுபற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளவுமில்லை. மொத்தத்தில் இந்தச் சந்திப்பானது ஒரு கண்துடைப்பு சந்திப்பு என்று சொல்லத்தக்க வகையிலேயே அமைந்திருந்தது’ என்று அவர்கள் தெரிவித்தனர். அடிமட்டத் தலைவர்கள் என்று வர்ணிக்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்களினதும், மாகாண சபை உறுப்பினர்களினதும் இந்தக் கருத்தானது, கூட்டமைப்பின் முடிவு சரியான முடிவுதானா என்பதைச் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது.
தமிழ் மக்கள் விலைபோய்விடக் கூடாது இந்தத் தேர்தலில் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ள இரண்டு பகுதிகளில் ஒரு தரப்பையே தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டியிருக்கின்றது. அதனைவிட அவர்களுக்கு வேறு ஒரு தெரிவு கிடையாது. எனவே, ஆட்சி மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டில் உள்ள மக்களின் வாக்குகளை, அந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்தக்க – அதற்கு வழி சமைக்கத்தக்க வகையில் பயன்படுத்த வேண்டியது தலைவர்களின் கடமையாகும்.
அத்தகைய வழி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றதா என்பதே இப்போதைய கேள்வியாக, முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. எதிரணியில் இணைந்துள்ள கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் முக்கிய பங்கெடுத்திருந்தது என்று சொல்லப்படுகின்றது. இதற்கான முக்கிய சந்திப்புக்களில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கலந்து கொண்டிருந்தார் என்ற தகவலும் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
ஆனால், இப்போது கூட்டமைப்பின் முடிவு குறித்து மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நாட்டில் இல்லையென்பது பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கின்றது. அது குறித்த பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதிரணியினர் இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும், அவ்வாறு வெற்றிபெற்றதும், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்போம் என்றும் கூறியிருக்கின்றார்கள்.
அவர்களுடைய திட்டத்தின்படி அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் கூட்டமைப்பினருக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பி இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்ற தமிழ் மக்களுடைய வாக்குகளால் அமையப் போவதாகத் தெரிவிக்கப்படுகின்ற தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படப் போகின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
ஏனெனில், எதிரணியினருடனான சந்திப்புக்களில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், சிவில் ஆட்சி என்ற விடயங்கள் பற்றி மட்டுமே முக்கியமாகப் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன. மீள்குடியேற்றம் என்ற விடயத்தில் பல முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. அதேபோன்று, முழுமையான சிவில் ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்திலும் பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.
ஆனால், கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைகளில் வாடுகின்ற தமிழ் இளைஞர்கள், காணமல் போனவர்கள் உள்ளிட்ட விடயங்களும் அரசியல் தீர்வு பற்றிய விடயமும் பேச்சுக்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கசிந்திருக்கின்றன. எனவே, இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதில் கூட்டமைப்பினர் உறுதியாக இருக்கின்றனர்.
ஆனால் அவ்வாறு அளிக்கப்படுகின்ற வாக்குகள் அரியணையில் முகங்கள் மாறுவதற்காக பயன்படுத்தப்படப்போகின்றதா? அல்லது அதற்கும் அப்பால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படப் போகின்றதா ? என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது ஆனாலும் வாக்களிப்பது அவசியம்.