பக்கங்கள்

ஒவ்வொரு வாக்கையும் கவனமாக பயன்படுத்தவேண்டும்- உலக தமிழர் பேரவை

எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியன்று தமிழ் மக்கள் தமது ஒவ்வொரு வாக்கையும் கவனமாக பயன்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கழற்றிவிடப்பட்டது வேதனையளிக்கிறது- அலாஸ்டர் குக்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் பதவி பறிக்கப்பட்டு, உலகக்கிண்ண அணியிலும் இடம் கிடைக்காததால் அலாஸ்டர் குக் வேதனையில் இருக்கிறார்.

இலங்கையில் கட்சி மாறல் பிழையான வழியில் செல்கிறது

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி மாறல்கள் இரண்டு தரப்பிலும் இடம்பெற்று வருகின்றன.

1,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 1000க்கும் மேற்பட்டோர் அமெரிக்க வான்வழி தாக்குதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்சேகாவின் மறு உருவமே மைத்திரி


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் மறு உருவமே இம்முறை பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். 

அநுராதபுரத்தில் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட 15 பேர் மைத்திரிக்கு ஆதரவு

வட மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பி.பி.திஸாநாயக்க உள்ளிட்ட மாவட்டத்தின் பிரதேச சபை உறுப்பினர்கள் 13 பேர் இன்று (24) திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொது வேட்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன? பாகம்-18-காணொளி

மட்டக்களப்பில் சண்டைகள் நடைபெற்றுவந்த

கொடுத்த இன்பம் – சிறுகதை – தமிழ்க்கவி’


‘சாந்திக்கு வலி கண்டிட்டுதாம்’
‘ங…தாய்க்காறியும் இல்லையே…நேற்றுத்தானே ஏதோ செத்த வீடெண்டு போனா..’
‘ம்….பேரக்கிழவி நிக்குது போல…வாங்கவன் பாத்திட்டு வருவம்’
‘ எட என்னடா?….உனக்கு வெளிக்கிட்டா பள்ளிக்கூடம் போவன். ..கொஞ்சம் இரக்கா இவனைப் பள்ளிக்கூடம் அனுப்பிப்போட்டு வாறன்’ கமலம் பையனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் மும்முரத்தில் நின்றாள்.
‘அப்ப நீ பிறகு வா…நான்போய்ப்பாக்கிறன் என்ற வாறே சரசு வேகமாக நடையைக்கட்டினாள். சாந்தி இவளுக்கு மச்சாள் இவள் அவளுடைய அண்ணன் மனைவி. இப்போதுள்ள மாதிரி அண்ணி,சித்தி, எல்லாம் அப்போது கிடையாது . பத்மினி நடித்த சித்தி படம் வந்த காலத்தில்தான் இங்கேயும் சித்தி என்று அழைக்கும் பழக்கம் வந்தது.
‘இப்பத்தையில் பொண்டுகளுக்கு படங்களப் பாத்துப்பாத்து புது மோடியில யெல்லே குநட்டுகினம். ‘ஏன்ரீ…அண்ணன் பெண்டில் அண்ணியெண்டா தம்பி பெண்டில் தண்ணியே…? வள்ளிப் பெத்தா புறுபுறுக்கிறதுதான். அதென்னவோ சரசுவும் புது மோடியில் இறங்காமலும், மச்சாள் என்று கூப்பிடாமலும், சாந்தீ என்றே கூப்பிடுவாள் அவளும் இவளை சரசு என்றே அழைப்பாள். இருவரும் ஒரே வயதில் இருந்ததும் ஒரு காரணம் எனலாம்.
சாந்தி தன் இருகைகளையும் நாரிக்குக் கொடுத்து நிமிர்ந்து நின்றாள். பின் சற்று நேரத்தில் , வந்தவர்களுக்குப் பாய் எடுத்துப் போட்டாள் ‘இருங்கக்கா’.என்றாள் அப்படியே அடுப்பில் கொதித்தபடியிருந்த கேத்திலை இறக்கி வந்தவர்களுக்கு தேநீர் ஊற்றினாள்.
‘இருக்கட்டும் பிள்ளை ….வயித்துக்க என்னமாரிக்கிடக்கு’ எனறு கேட்டாள் செல்லம்மாக்கிழவி.
‘வயுத்துக்க ஒண்டுமில்லயணை நாரிக்கதான் புடுங்குதணை’ சரசு மெதுவாக செல்லம்மாக்கிழவியிடம் நெருங்கி ‘மெய்யேணை ..செல்லம்மாக்கா குறி கண்டிட்டுதோ எண்டு கேளணை?’ என்றாள்.
‘எடி ..தலைச்சன்பிள்ளைகாறிக்கு உதுகள் விளங்குமே… கேக்கிறன்’ என்றவள். சாந்தியை நெருங்கி மிக ரகசியமாக ‘.....?..’.என்றாள்
‘ அப்பிடியெண்டா..? ”சாந்தி மிரண்டவாறே கேட்டாள்.
‘ச்ச அரையுக்க ஏதும் சளிபோல தீட்டுப்போல ஏதும் படுதோ’
‘இல்லப் பெத்தா அப்பிடியொண்டுமில்ல’ ; சொல்லும் போதே அவள் வெட்கப்பட்டாள்.
‘ஙா….நேரங்கிடக்குப்போல’
சாந்தி தேநீரை ஊற்றி எட்டியெட்டி எல்லோருக்கும் வைத்தாள். அப்படியே வெற்றிலைத் தட்டத்தையும் நகர்த்தி வைத்தாள். காலையிலிருந்து வாழைத் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு மண்வெட்டியைக்கொண்டுவந்து முற்றத்தில் நின்ற மல்லிகைப்பந்தலின் கீழ் போட்டுவிட்டுத் திரும்பும்போது லேசா நாரிக்குள் வலித்தது.

அப்படியே விடுவிடுக்கத் தொடங்கிவிட்டது. புயத்தில் மச்சாள் சரசுவுக்கு தெருவில்போன ராசுவைக்கூப்பிட்டு விசயஞ்சொல்லிவிட்டாள். சரசுவைத்தேடிப்போன சின்னவன் செல்லம்மாக்கிழவியிடமும் சொல்லிவிட்டுச்சென்றான் வயல் விளைந்துகிடந்தது இந்த நேரம் காவலை விலக்க முடியாது.அவன் கமத்துக்குப் புறப்பட்டான்.
சின்னவன் வீரகத்தியற்ற கடைக்குட்டி. ஊருக்க யார் கெட்டாலும் ஓடிப்போய் உதவி செய்வான். பீடி, சுருட்டு வெத்திலைபாக்கு எந்தப் பழக்கமும் இல்லை. ஏப்பவாவது கடுமையான வேலையென்றால் மட்டும் ஒரு காப்போத்தல்ல பாதி சாராயங் குடிப்பான். அதுவும் நாலாம் பேருக்கும் தெரியாது. நான் நீயென்று பெண் கொடுக்க போட்டி போட்டார்கள். ஆனால் அவனுக்கப்பிடித்தது சாந்தியைத்தான்.
அவனுக்கேத்தமாதிரி தோட்டத்தில பாடுபடவோ, கட்டுச் செட்டா சிக்கனமாக் குடும்பம் நடத்தவோ அவளை மிஞ்ச ஆளே கிடையாது என்னா…கட்டி மூண்டுவருசமாகிது .இப்பதான் வயிறு வாய்ச்சிருக்கு அதனாலோ என்னவோ ஊரே அவளை கவனமாகப் பார்த்தது.
வீரகத்தியார் வாறபோற நேரமெல்லாம் கடையில் தீன்பண்டங்களைக் கொண்டுவந்து மருமகளுக்கு கொடுக்கத்தவற மாட்டார். நல்ல வாரப்பாடு. ஏதோ அவள் வயிற்றிலுள்ள தன்பேரக் குழந்தைமீது அவ்வளவு பாசம் வைத்திருந்தார். ஒருதடவை சின்னவனுடைய சாதக ஓலையைக் கொண்டுபோய் பிராமணிச் சாத்திரியெட்டைக் கேட்டவராம் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கமோ எண்டு சாத்திர் சொன்னவராம் வாறவரியம் உனக்குப் பேரன் கையில இருப்பானென்று.
நாலைஞ்சு மாதமாயிருக்கயுக்க ஊர்மருத்துவிச்சி வந்து பாத்திட்டு காட்போட்டுக் குடுத்திருக்கிறா போய் கிளினிக்கில காட்டச்சொல்லி சொன்னவாவாம். சாந்தி சொன்னபடிக்கு வெளிக்கிட்டு சுகாதார ஆசுப்பத்திரிக்குப் போனவள் அவைபார்த்து நிறைய குளிசைகளும் கொடுத்து கவனமாப் பார்க்கச்சொல்லி ஆலோசனை கொடுத்தார்கள்.

அதுக்குப்பிறகு தோட்டவேலை அது இதெண்டு போக சேரங் கிடைக்கிறேல்ல அப்பிடியும் ஒருநாள் போனாள் அப்ப ஏழு மாசம் முடிஞ்சு எட்டுமாசம் துவங்குது. ‘ஏன் இவளநாள் வரயில்லை’ என்று சரியான பேச்சாம் அதற்குப்பிறகு சின்னவன் போகவேண்டாம் என்று கூறிவிட்டான்.இனி கொண்டுவந்த குளிசையளும் அப்பிடி தொண்டைக்க போட்டா கறள் நாத்தம். ‘உவ்வேக்’ சத்திவாறமாரிக்கிடக்கு என்று சாந்தி சொன்ன படியால் சின்னவனும் ‘பிறகேன் அதைப் போடுறாய் விடு என்று கூறிவிட்டான்
‘ஆட்டுப்பாலோ பசுப்பாலோ முட்டையோ கீரையோ மரக்கறியோ எல்லாம் கிடக்கு வடிவாச்சாப்பிட்டா காணாதே ‘ இது சின்னவனின் வாதம்.
‘அவளோடு; கிளினிக்குக்குப் போன கோமளாவும் மேரியும் பெத்துப்போட்டினமாம்.’செல்லம்மாக்கிழவி சொன்னாள்.
‘ஓமணை நானும் போய்ப் பாத்தனான்,’
‘ சுகமாப் பெத்துப்போட்டாளாமே’?
‘தையலாமெணை..’
‘எத்தின தையலாம்?’
‘ நாலு தையலெண்டாள்’
‘அந்தக்காலத்தில எவள பிள்ளையளப் பெத்திருக்குங்கள் ஆர்தைச்ச? ஆர்கிழிச்ச,?இப்பானெல்லோ உந்த நூதனங்கள். ‘செல்லம்மாக்கிழவிக்கு பதில்சொல்லாமல் எட்டி தட்டியில் ஒரு ஈர்க்குத் துண்டை முறித்து பல்லுக்குள் எதையோ துளாவ ஆரம்பித்தாள்.
‘என்னடி உது? என்று கேட்டவாறே வந்தகமலம் ‘என்னவாம் சாந்தி?’ ஏன்றாள்.
கிடுகால் வேய்ந்து அரைவாசிக்கு மண் சுவர் வைத்து மேலுக்கும் கிடுகுத்தட்டி கட்டிய அந்த சிறு வீட்டுக்கு இடையில் ஒரு கிடுகுத் தட்டி அதை இரண்டாகப் பிரித்திருந்தது. ஊள்வீடு. வெளிவீடாக. வேலி வீட்டின் கிழக்குமுலையில் அடுப்பு இரண்டு மண்ணாலானது இரண்டு பலகைப் பரண்கள் வளையில் கட்டித் தொங்கவிட்டிருந்தது.

அதில் பொருட்கள் அடுக்கப்பட்டுக் கிடந்தது வீடு அடிக்கடி சாணிபோட்டு மெழுகியதில் வழுவழுவென்றிருந்தது அடுப்பில் கேற்றில் கிடந்தது வலியோடு வலியாக சமைத்து முடித்த சாந்தி சோற்றுப்பானையை ஒரு திருகணையிலும் இன்னொரு திருகணையில் கறிசிசட்டிகளை யம் அடுக்கினாள் கீழ் சட்டி சொதி. நடுச்சட்டி கீரைச்சுண்டல் மேற்சட்டி மரை வற்றலுடன் கத்தரிக்காய் போட்ட குழம்பு .சின்னவனுக்கான சாப்பாட்டைப் பொட்டு வீரகத்தியிடம் கொடுத்துவிட்டு செல்லம்மாக்கிழவிக்கும் சாப்பாடு பரிமாறினாள்.நீ முதல் சாப்பிடுபிள்ளை’ என்ற செல்லாம்மாவிடம்,
‘நாரி வரவரக் கடுமையாக் கொதிக்குதணை’ என்றாள் சாந்தி
‘பரவாயில்லைப்பிள்ளை வலிகூடினா சாப்பிட மாட்டாய் தஞ்சக்கேடாப்போம் எபபன் சாப்பிடு ‘என வற்புறுத்தி கொஞ்சம் சாப்பிட வைத்தாள். இவற்றையெல்லாம் அருகிலிருந்தே பார்த்த சரசு
‘மெய்யேணை சுணங்கும் போல என்னணை’ என்றாள்.இதைக் கேட்ட கமலமும் ,
‘பின்ன, எனக்கு மூத்தவள் பிறந்த நேரம் உப்பிடித்தான்….இரவே எனக்கு வலிக்கத்துவங்கிவிட்டுது நான் பல்லைக்கடிச்சுக்கொண்டு இவரட்டக்கூடச் சொல்லயில்லை. மளமளண்டு சமைச்சிட்டுக் குளிச்சன். பொழுதும் படுது….அப்பப்பா ….எனக்கு…நிக்கேலாமக்கிடக்கு….அதுக்குப்பிறகுதான் சின்னப்பிள்ளையக்காவக் கூப்பிடுங்கோ எண்டன்.’
அப்ப…. உவனை வீட்டிலயே பெத்தனி?’
‘பின்ன …இனி ஆஸ்பத்திரிக்குப் போவன்?’ என்றாள் இளக்காரமாக, தொடர்ந்து
‘:சுக் அங்கயும் போய் நாங்கதான் முக்கவேணும்….’
‘மெய்தான்…இனி தலைப்பிள்ளை, எதுக்கும் ஆஸ்பத்திரி பாதுகாப்புத்தானே…?’
‘சும்மா விடு …அவளவை ,வா…போ…எண்டுறதும்..அதட்டுறதும்…இனி வலியல் கத்தினா அடிக்கிறாளவையாம் …நான் முதலே சொல்லிப் போட்டன். ஆசுப்பத்திரிக்கு மாட்டனெண்டு….அவளவை எப்பனெண்டவுடன அறுத்துப்போடுவாளவை.’
சரசு எல்லாவற்றையும் கேட்டாலும் கமலத்தோடு உடன்படவில்லை
‘இக்கணம் வீட்டில பாக்க வெளிக்கிட்டு பிரச்சனையாப் போச்செண்டா…பிறகு ஆஸ்பத்திர்க்கு கொண்டு போகபேசுவாங்கள் அதுதான் பயம்’
சாந்தி மிரண்டவாறே இவர்கள் பேசுவதைக்கேட்டுக்கொண்டிருந்தாள். மெள்ள மெள்ள நாரி வலி உறைக்கத்தொடங்கினாலும் காட்டிக்கொள்ளவில்லை.
‘சரசு எப்பன் வெந்தயம் எடு . ‘என்றவாறே புது மண்சட்டி ஒன்றை எடுத்து அதைக்குழுவி அதில் வெந்தயம் ஒரு சிறங்கையைப்போட்டு செல்லம்மா ஒரு வெள்ளைப்பூட்டையும் உரித்து அதில் போட்டாள். ‘கமலம் உதில உந்த பின் வேலியில எட்டி ஒரு துண்டு பட்டை வெட்டிக்கொண்டுவா’ என்றாள் பட்டைவெட்டப் பொகேக்க வாய்பேசக் கூடாது என்பது பொதுவாக கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும்.
பட்டை (முருங்மை) வந்ததும் அதன் பொருக்கைச்சீவிவிட்டு அதையும் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றினாள். நன்கு அவிந்து வர அதை அகப்பையால் கடைந்துவிட்டு இறக்கி வடித்து ஒருகுடி கோப்பையில் வட்டு ‘சாந்தி வா மோனை இந்தா எப்பன் சூட்டோட கண்ணை மூடிக்கொண்டு மடமடண்டு குடிபாப்பம்’ நீட்டினாள்.
சாந்தி மறுப்பில்லாமல் வாங்கி மளமளவென்று குடித்துவிட்டு கோப்பையை நீட்டும்போது’உவ்வே ஏஏஎக்’ சத்திவருவது போலஇருந்தது. அவ்வளவு கசப்பு. முகத்தைக்கோணி அருவருத்தாள்.’
‘ம்….சூட்டுவலியெண்டா அடக்கிப்போடும். இல்லையெண்டா குத்தெழும்பீடும்.’ செல்லம்மா தனக்குள்பேசியவாறே கோப்பையைக் கழுவி வைத்தாள்.
குமலம் புறப்பட்டாள் ‘நான் போட்டு வாறனணை பிள்ளை ரியூசனால வந்திடுவாள்’ கமலம் எழுந்தபோது படலைக்குள் வேறுஇருவர் வருவது தெரிந்தது.
நாகமணியும் , ரஞ்சியும். படலைக்குள்ளேயே அவர்களை எதிர்கொண்ட கமலம்,’ நல்ல குத்தில்ல…’ என்று விட்டுப் போனாள்.
‘ணேய் சண்டி நோக்காடு போல ஏதும் குடுத்துப் பாத்தியே’ என்றாள் வந்த வரத்திலேயே கேட்டாள் நாகமணி.
‘இல்லை நீ வரட்டுமெண்டுதான் பாத்துக்கொண்டிருந்தனான். ‘ என்றாள் செல்லம்மாக்காள் கிண்டலாக.
‘கிளினிக் பேகேல்லயே’ என்றாள் ரஞ்சி..’
‘ போனனான்’ என்றாள் சாந்தி.
‘அப்ப காட்டில டேற் தந்திருப்பினமே எங்க காட்டப் பாப்பம்’? என்று கேட்டாள்.
சாந்தி கட்டி தொங்க விட்டிருந்த பையொன்றைத் துளாவி ஒரு காட்டை எடுத்துக்கொடுத்தாள் . அதை வாங்கி கவனமாகப் பார்த்த ரஞ்சி ‘இந்தா போட்டிருக்கே இருவத்தெட்டாம் திகதி. ம்…;;;இண்டைக்கு பதினெட்டுதானே…. நாள்கிடக்கு’ என்றரஞ்சி காட்டை திருப்பிக் கொடுத்தாள்.
‘போடி விசர், நிறைமாதப் பிள்ளைத்தாச்சியையும், மாரிமழையையும் நம்ப ஏலாது எப்ப எது நடக்குமெண்டு சொல்லேலாது .முந்தும்,பிந்தும் உதெல்லாஞ் சொல்லிக்கொண்டே’செல்லம்மாக் கிழவியின் அனுபவம் பேசியது.
சாந்திக்கு உயிர் பிரிவது போல வலி சுருட்டி எடுத்தது. தாங்கவும் முடியவில்லை உட்காரவும் முடியவில்லை .’ச்ச காச்சல் தடிமனேண்டாக்கூட வழுந்து படுத்திரலாம் இது படுக்கவும் விடாதாம். எழும்பித்திரியவும் விடாதாம்.’ முழங்கால்களில் கைகளையூன்றி குனிந்து நின்று பெருமூச்சு விட்டாள் ‘ஆ…தாங்கேலாமக்கிடக்கே’ அவளுடைய உணர்வுகள் கலங்கி உச்சந்தலை வரை நடுங்கியது
செல்லம்மா ‘ பிள்ளை நட கிணத்தடிக்கு ம்….குளிச்சிட்டு வா’ என்றாள் ரஞ்சி கூடப்போனாள்.’
குளிச்சிட்டு வந்த சாந்திக்கு சோற்றைப்போட்டு ஒரு மிளகுரசம்வைத்து ‘சாப்பிடுபிள்ளை’ என்ற செல்லம்மாவைவை நடுங்கும் கைகளால் இறுக்கிப்பிடித்த சாந்தி ‘வேண்டாமெணை ஏலாமக்கிடக்கு’
வெளியே குந்தியிருந்த வீரகத்திக்கும் கொஞ்சம் சோறு போட்டுக்கொடுத்தாள் செல்லம்மா
‘பிள்ளை சாப்பிடு பிறகு தஞ்சக்கேடாப்போம் எப்பனா சாப்பிடு பிள்ளைப்பெறவும் சத்து வேணுமே..ம்…பிடி’
கிராமத்துப்பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர் சிலர் பாசத்தோடும் சிலர் விடுப்புப் பார்க்கவுமாக வருவதை பேச்சிலறியக் கூடியதாக இருந்தது.
வயலை நம்பிய சீவியம் வெள்ளாமையும் நிறை சூலியாக நின்றது வயல். வீரகத்திக்கோவயதாகிவிட்டது. காவல் சின்னவன்தான் பார்த்தாக வேண்டும். காலையில் அவன்புறப்படும் போதே சாந்திக்கு ஒரு மாதிர்யாகத்தான் இருந்தது. ஆனால் அவன் மனம் வருந்துவானே என்று சொல்லவில்லை. மருமகளுக்கு வலிகண்ட நேரம் மகன்இல்லையே என்று வீரகத்தி ஓடிவந்தார்.
‘ பிள்ளை….குட்டியின்ர காருக்குச் சொல்லி விடவே?’
‘இல்ல மாமா வீட்டவிட்டிட்டு ஆஸ்பத்திரியில பொய் நிக்க இஞ்ச ஆடு, மாடு, கோழி, தோட்டமெல்லாம் அலாதில போயிரும் என்னைப்பாக்க அங்கயும் இஞ்சயும் அலையிறதில சரியாப்போம் …நீங்க ஒருக்கா சின்னப்பிள்ளையக்காவுக்குச் சொல்லி விடுங்கோ’

அவளுடைய மனத்துள் அறுக்கிறதும் தைக்கிறதும் தான் அநாதையா நிண்டு வலியில துடிக்கிறதும் தெரியுது ‘.அம்ம்ம்மாஆ…’.என்றவள் நிமிர குப்பென்று வேர்க்கிறது . ‘அது என்ன குளிரெண்டாலும்..அந்த நேரத்தக்கு வருமே ஒரு வேர்வை’ செல்லம்மாக்கா நாகமணியோடு பேசிக்கொண்டிருந்தா வந்தவர்கள் வலியில் துடிக்கும் அவளுக்கு முன்னால,; தத்தமது பிரசவ அனுபங்களைப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்.
‘நீங்க சொல்லுறீங்கள் கோமளாவுக்கு நல்ல அடியாம். வலியில கத்தைக்க என்ன தெரியும் பொத்து வாய அங்கால ஆம்பிள வாட்டெண்டு சொன்னாளாம் ஒருத்தி.’
‘இல்லாட்டி ஆம்பிளையளுக்கு ஒண்டும் தெரியாது’ பழிப்புக்காட்டினாள் ஒருத்தி
சாந்தி தட்டுத்தடுமாறி நடந்து ஃசுவாமிப் பலகையிலிருந்து விபூதியை எடுத்து நெற்றியிலிட்டுக்கொண்டாள். ‘எல்லாத்துக்கும் நீதான் வைரவா காப்பாத்து’ என்று வேண்டிக்கொண்டாள். அடிவயிற்றில் நெருப்பைக் கொழுத்திப்போட்டது போல வலி சுழன்றது’ அய்ய்ய்க்க்கஸ்ஸப்பா….’ குனிந்து முழங்கால்களைப் ;பிடித்துக்கொண்டாள் .
‘பிள்ளை குனிஞ்சு நில்லாத பிள்ளை மேலுக்கு ஏகிரும்’ நாகமணி தன் விற்பன்னத்தை தெரிவித்தாள்.
‘அவள்பாவி சும்மா இருக்கேல்ல பாடுபட்ட உடம்பு சுகமாப் பெத்துப்போடுவாள்.’என்றாள் இன்னொருத்தி. சாந்திக்கு அடுத்து வந்த வலி அவள் அறிவைச் சிதறடித்து உச்சந் தலைவரை பரவி கைகால்களை நடுங்க வைத்தது ‘ங்….க்க்க்…ஆ….ங்க்’ மனதை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும்.முனகலை அடக்க முடியவில்லை.
வீரகத்தி வெளியே ஓடினார். பெண்கள் அவளைப் படுக்க வைக்க முனைந்தனர். படுக்கத்தான் அவளும் விரும்பினாள் என்றாலும் அவளைப் படுக்க விடாமல் அடுத்தவலி வயிற்றையும் நாரியையும் சேர்த்து இறுக்கியது. துடித்து எழுந்தவள்.பாய்ந்து தட்டியைப் பிடித்தாள் .நிற்க முடியாமல் நெளிந்தாள்.
சின்னப்பிள்ளையக்கா வந்தபோது,வேர்த்து விறுவிறுத்தபடி நின்ற சாந்தி பயந்து அவளைக் கட்டிக்கொண்டாள். ‘அக்கா ஏலாதாம் ஏதோ அடைக்கிறமாதிரி கிடக்குது.’
‘சின்னப்பிள்ளை உள்ளுக்க ஆயத்தஞ்செஞ்சு கிடக்கு’ என்றாள்செல்லம்மாக்கிழவி. சின்னப்பிள்ளையக்கா அவளை விலக்கிக்கொண்டு ‘வீட்டுக்க போ பிள்ளை’ என்று சாந்தியை அனுப்பினாள். அவர்களை முந்திக்கொண்டு பாய்விரிக்க, இடம் ஒதுக்க என்று வந்திருந்த பெண்கள் உள்ளே நுளைந்தனர்.
சின்னப்பிள்ளையக்காவுக்கு நல்லா ஏறிட்டுது.
‘என்னடி இஞ்ச படமே.. காட்டப்போறன்…ங…அங் வெளியால போங்க எல்லாரும்’….என்றவள் திரும்பி, ‘ணேய் செல்லம்மாக்கா வாசலுக்க இரணை தேவையில்லாதவைய உள்ளுக்க விடாத’ என்றவள் சாந்தியை படுக்கவைத்தாள் முழங்கால்களை உயர்த்தி பாதங்களைக்குத்தி மல்லாந்தவளின் வயிற்றை நன்கு கவனித்துவிட்டு ஏனைய இடங்களையும் பார்த்தாள் . பின்னர் ‘மெல்ல எழும்புபிள்ள’ எனறாள்.

‘பயப்படாத ஓண்டும் பிரச்சனையில்லை வெளியால பாம்மா காத்தாட கொஞ்சம் நட…என்றுவிட்டு ‘வீரகத்தி…வீரகத்தி…என்று கூப்பிட்வாறே வெளியே வந்தாள் . அவரைத் தனியே கோஞ்சம் தள்ளிக்கொண்டு போய் அவரிடம …’.நேரங்கிடக்கு..அண்ணை இப்ப மூண்டு மணியிருக்குமே…பத்து பதினொரு மணி செல்லும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்போறியளோ’என்றாள். அப்போதுதான் அந்த இடத்துக்கு வந்த சாந்தி ‘வேண்டாமக்கா நீங்கள் பாத்துவிடுங்கோ புண்ணியங்கிடைக்கும்’ அவள்கண்கள் கலங்கியிருந்தன.
வெளியே வீட்டுக்குப்பின்புறமாக அடைத்திருந்த கிடுகுக் கூட்டுக்குள் சென்று சிறுநீர்கழித்தவிட்டு வந்தவள்.
‘அக்கா கக்கூசுக்கு வருது போகட்டே ‘ என்றாள். அயலில் உள்ள பற்றைக்காடுதான் அங்குள்ள மக்களின் கழிப்பிடமாக இருந்தது.
‘வேண்டாம், கொஞ்சம் பொறு என்ற சின்னப்பிள்ளையக்கா மல்லிகைப்பந்தலின் கீழ் இருந்த மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அந்த மூத்திரக்கூட்டக்குள் சென்று ஒரு சிறு கிடங்கை வெட்டினார். ‘அந்தக் கிடங்கில் மலங்கழித்து மூடலாம் தூரப்போகாதே:’ என்றார்
சாந்தி அடிக்கடி அதற்குள் போய் வந்தாலும் மலங்கழிக்கவில்லை . சின்னப்பிள்ளையக்கா கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டார். ‘ஆளுக்கு பிள்ளை கீழ இறங்கீற்றுது அதுதான் கக்கூசுக்குப் போகவேணும் போல கிடக்கு’ என்றாள் செல்லம்மாக்காவிடம்.
செல்லம்மாக்கிழவி வெற்றிலைத்தட்டத்தை தன் பக்கமாக இழுத்து இரண்டுமூன்று பாக்குப்பிளகைக் கையிலெடுத்து பாக்குரலில் போட்டு நச்நச்சென்று இடித்தது.சாந்தி இதைக்கவனித்து விட்டு
‘ணய் வெள்ளெணக்கூட வந்திருக்கிறாய் சாப்பிடணை பானைக்க சோறிருக்கு கறியும் கிடக்கு போட்டுத் தரயில்லயெண்டு குறைநினைக்காதை ஏலாமக் கிடக்கணை ம்… மாமாவும் சாப்பிட்டாரோதெரியா….’ வலியுடன் குனியவும் நிமிரவுமாகத் துடித்தாலும், வந்தவர்களைக் கவனிக்க முடியவில்லையே என்று வருந்தினாள்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் செல்லம்மா பாக்கைஇடித்த பின் வெற்றிலையை எடுத்த அதில் சுண்ணாம்பைத் தடவி மடித்து அதையும் உரலில் திணித்து இடித்தது வெற்றிலை செக்கச் செவேரெனச்சிவந்து குழையலாக வந்தபின் ஆட்காட்டிவிரலால் துளாவி இடது உள்ளங்கையில் கொட்டி பக்கென்று வாயில் போட்டுக்கொண்டது.
வீரகத்தி வெளியில் நின்றபடியே வீட்டுக்குள் கையை நீட்டி வாசலுக்கு நேரே கொழுவியிருந்த சிம்னி விளக்கை எடுத்துத்துடைத்து எண்ணைய்விட்டார்.மாலை மங்கத்தொடங்கமுன்பே வந்திருந்த பெண்கள் தத்தம் வீடுகளுக்கு செல்லவாரம்பித்தனர். சேல்லம்மாவும் சின்னப்பிள்ளையுமே வீட்டில் நின்றனர்.

வீரகத்தி மல்லிகைப்பந்தலின்கீழ் பொடப்பட்டிருந்த பரணில் சாய்ந்து கொண்டாலு அவரது மனமும் உதடும் குலதெய்வமான முத்தமாரியை வேண்டிக்கொண்டிருந்தது. ஆம்மாளாச்சி ஒரு விக்கினமுமில்லாம பெத்துப்போடோணும் தாயே நீதானம்மா எல்லாத்துக்கும். என்றவர் ஏதோ நினைவு வந்தவராக ஓடிப்போய் உரிக்காத தேங்காயொன்றை எடுத்து நேர்ந்து கூரையின்மேல் வைத்தார்.
வலியில் கண்கள் சொருகி உறக்கம் வந்தது சாந்திக்கு. ஒருகணம்தான் மறுபடிதுடித்து நிமிர்ந்தவள் ‘ம்….ங்;;க்;;;ஐயோ இனி ஏலாதணை நான் என்னால ஏலயில்லை…’ அழுதவாறே தானாகவே போய் படுக்கையில் சாய்ந்தாள். சின்னப்பிள்ளையக்கா சொல்லாமலே சேலையை கழற்றி உதறிக்கொண்டே துடித்தாள் முழங்கால்களை உயர்த்தி பாதத்தைக்குத்தி மல்லாந்து படுத்தவளை ;சின்ப்பிள்ளையக்கா குறியைப்பார்த்தார்

வெள்ளையாய் குமிழ்கட்டிவாசலுக்குமிக கிட்டவாக ஒரு இளநீர் வழுக்கைபோல பன்னீர்குடம் தெரிந்தது. ‘ம்…பயப்பிடாத இன்னம் கொஞ்ச நேரந்தான் குத்துவந்தா முக்கு’அவள் லேசாக முக்க ஆரம்பிக்கும்போதே மலவாசல் வழியாக சிறிதுசிறிதாக மலம் வெளித்தள்ளியது பழநதுணியைப் போட்டு அதைத் துடைத்து அபபுறமாகத் தள்ளினாள்சின்னப்பிள்ளையக்கா…
கைகளை உதறிக்கொண்ட தலையை உதறிஉதறி துடித்தாள் சாந்தி ‘முடியாது முடியாது’
‘ பிள்ளை ஏலும் இஞ்ச கையக்கொண்டா ‘என கையைப்பிடித்து கீழே கெண்டைக்காலுக்குக் கீழே குதிக்காலுக்கு மேலே ‘ பிடி இதில ‘ மௌ;ளத்தலையத் தூக்கி வயித்தப்பாத்து முக்கு’
சின்னப்பிள்ளையக்கா முட்டையாகத்தள்ளிய பன்னீரகுட வாயிலைத்தன் ஆட்காட்டி விரலால் தள்ள சளாரென உடைந்து வெளியே பீறிப் பாய்ந்தது சூதக நீர்;. அந்த வளவளப்பு அடங்குமுன் முக்கு என்றாள்செல்லம்மாவும் உரப்பினாள் முக்கு முக்கு என்றபோது…., வலி நின்றுவிட்டது.

‘சரிஞசு படு பிள்ளை’ என்றாள் சின்னப்பிள்ளையக்கா. செல்லம்மாக்கா சுடுதண்ணிய எரியவிடணை.இந்த கத்தரிக்கோலையும் திரிச்சநூலையும் தண்ணிக்க போட்டுவிடு’
சுhந்தி அமைதியாகப் படுத்திருந்தாள்.தண்ணியடுப்பை எரி;யவிட்ட செல்லம்மாக்கிழவிமீண்டும் வெற்றிலை இடிக்கத்தொடங்கியது.
நேரம் பத்துமணிக்க மேலயாகுது வீரகத்திக்கும் ஏதும் தண்ணிய வெந்நியக்குடு. புpள்ளைக்கும் எப்பன் தேத்தண்;ணியப்பாலக் கொண்டாணை களைச்சுப் போனாள்’ என்றஇ சின்னப்பிள்ளையக்கா வீரகத்தி மணிக்கூடு ஓழுங்குபண்ணினநீயே ‘ என்றுகேட்டாள்
‘ஓமக்கா போஸ்ற் மாஸ்டரட்ட மணிக்கூடு வாங்ககிக் கொணந்தனான்..இப்ப…பத்து அஞ்சுநிமிசம்’
திடீரெனத்துடித்தெழும்பிய சாந்து ங்க்ங்h…ம்…க்க்க்கா அய்யோஅய்யோ எனப்பாய்ந் சின்னப்பிள்ளையக்காவின் தோளில் படீர் படீரென அடித்தாள். மறுபடி அவளது கையை உர்ய இடத்தில்விட்டுப்’ பிடி’ என்றவள் ‘முக்கு’ என்று கூவினாள். ‘அக்க்க்காய்ய்ய்க்க்ம்ம்ம்க்க்க்’அவள்வீராவேசமாகத் தள்ள, தலை வாசலில் முட்ட மேற்புறமாக தலையை முன்நோக்கி நகர்த்த சுழி வெளியே குபீரெனத ;தள்ளியதும் ‘போதும் முக்காத’ நெற்றியிலும் பிடரியிலுமாக கையைவைத்து லேசாக இழுக்க களகளவென நீரும் தீட்டுமாக குழந்தை வெளியே வந்தது தான்.பெரிய குரலெடுத்து விர்ரா….விர்ரா…;கத்த வாரம்பித்தது களகளவெனத்தன்உடலிலிருந்து வெளியேறிய பாரம் அவள்கண்களுக்கு;தெரியாவிட்டாலும் வெதுவெதுப்பாக தொடைகளையும் பிட்டத்தையும் நனைத்த பத்துமாதம் அவள்சுமந்த நீர் அரைமயக்கநிலையை ஏற்படுத்தியது ஒரு இளைப்பாறல்போல கண்கள் சொருகின. ஏற்கெனவே கொதிநீரில் கிடந்த நூலையும் கத்தரிக்கோலையும்’செல்லம்மா கொடுக்க தொப்புள் கொடியை வெட்டி தாயையும்சேயையும் வேறாக்கினாள் சின்னப்பிள்ளையக்கா.
தலையணையை இழுத்துதலையைக் கீழே விட்டவள் ‘கொஞ்சம் தண்ணிபருக்கெணை’ செலலம்மா தண்ணீர் பருக்கவும் நஞ்சுக்கொடி வெளியேறவும் சரியாகவிருந்தது.
‘வீரகத்தி பத்து அம்பது .பேரன்பிறந்திருக்கிறான்.’
அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் குழந்தையையைத்தூக்கி வீரகத்திக்கும் சாந்திக்கும் காட்டினாள்.
‘இவர் வரேல்லயே’ சாந்தி கேட்டாள்;
‘.இல்லப்பிள்ள சொல்லி விட்டிருக்கு விடிய வந்திருவான்.’
வீரகத்தியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
காலையில் சின்னவன் வந்தபோது செல்லம்மாக்கிழவி கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தது. கால்களின் மேல் பிஞ்சுக் கை ககால்களை உதைத்தவண்ணம் சின்னவனுடைய பிரதியாக குழந்தை கிடந்தான்..அவனது கண்களில்ஆனந்தக்கண்ணீர். ஏட்டி சாந்தியைப்பார்த்தான்.அவள்சிரித்தபடி அவனை வரவேற்றாள்.
தான் அவளுக்கு கொடுத்துப் பெற்ற இன்பத்தை இப்படித் திரட்டித் தந்திருக்கிறாளே.என்ற வியப்பு அவனுக்கு.அதற்காக அவள் பட்ட துன்பமெதுவும் அவனுக்குத்தெரியாது. தெரியவே தெரியாது.

இலங்கை மீனவர்கள் விடுதலை

தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 30 பேர் இன்று விடுதலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான ஏற்பாடுகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவாதாக இலங்கை இந்திய மீனவ அமைப்பின் ஆலோசகர் எஸ் பி அந்தோனி முத்து தெரிவித்தார்.
மேலும் மீனவர்களுக்கு சொந்தமான படகுகளையும் விடுவிப்பதாக தமிழக அரசு அறிவிக்கவில்லை. இது சம்பந்தமாக இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன் முன்னோடியாக எதிர்வரும் 29ஆம் திகதி, இலங்கை இந்திய மீனவ அமைப்பின் தலைவர் தேவதாஸ் தலைமையிலான குழுவொன்று இலங்கை வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


வேலை செய்யாத அமைச்சர்களை தேடும் பொலிஸார்

அரசாங்கத்திடம் பணம் வாங்கிக்கொண்டு எதிர்க்கட்சிக்குள் செல்லாமலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமாலும் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கட்டளையிட்டுள்ளார்.


இவ்வாறு 46 தொகுதி அமைப்பாளர்கள் பற்றிய தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளனர்.அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சியில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவரையும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரையும் நியமிக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்கள், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சி செய்யும் அமைச்சர்கள் சம்பந்தமாக கடுமையான போக்கை கடைப்பிடிக்க போவதாகவும் அதற்கு தேவையான சகல கோப்புகளையும் தயார் செய்து வைத்து கொள்ளுமாறு ஜனாதிபதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தனிப்பட்ட ரீதியில் அறிவித்துள்ளார்.


ரிசாத் மைத்திரிக்கு ஆதரவு

கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.


இன்று நடைபெற்ற  எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரிசாட் பதியுதின் பங்கேற்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பதியுதின் தெரிவித்துள்ளார். அமைச்சருடன் அண்மையில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றில் இணைந்து கொண்ட அமீர் அலியும் இந்த செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதற்காக அண்மையில் ஏ.எச்.எம்.அஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் ரிசாட்டுடன் எதிர்க்கட்சியில் இணைவு

7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் அமைச்சர் ரிசாட் பதியுதினுடன் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த உறுப்பினர்களே இவ்வாறு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

கொழும்பு மார்கஸ் வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.மதவாதத்தை தூண்டும் தரப்பினருக்கு அரசாங்கம் தண்டனை விதிப்பதில்லை. தண்டனை விதிக்குமாறு கோரினாலும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை.

முஸ்லிம் சமூகத்தின் நலன்களை கருத்திற்கொண்டே ஆளும் கட்சியிலிருந்து விலகிää மைத்திரிபாலவை ஆதரிக்கின்றோம்.மைத்திரிபால ஜனாதிபதியாக பதவி ஏற்றால் இணங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம் என ரிசாட் பதியுதின் தெரிவித்துள்ளார்.

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் மேர்வின் சில்வா

களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  


 தற்காலிக அடிப்படையில் தாம் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.   களனி தொகுதியின் அமைப்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சாலித விஜேசூரிய கடமையாற்றுவார் என அவர் அறிவித்துள்ளார். 

 கிரிபத்கொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.   இந்த முறை ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக எந்தவொரு மேடையிலும் ஏறப்போவதில்லை. எனினும் தேர்தல் பிரசாரப் பணிகளை சிசிர ஜயகொடி மற்றும் பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரணவீர ஆகியோருடன் இணைந்து செயற்படுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தம்மிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.   

எனினும், இந்தக் கோரிக்கையை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதனால் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.   

ஹக்கீம் மைத்திரிக்கு ஆதரவு


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரளிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸில் இரு வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தது.   இந்த நிலையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 இதனடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரண்டு தரப்பினரின் பெரும்பான்மையானவர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை தெரிவு செய்ய ஹக்கீம் தீர்மானித்துள்ளார்.   இதன்படி தேர்தலில் மகிந்தவுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு அமைய, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பொது எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க ஹக்கீம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன -

சீனாவுடனான நட்புறவு தொடரும்-எதிரணியினர்

தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவை ஓரம்கட்டி

மகிந்த வெற்றிபெற்றால் பொருளாதாரத் தடை ஏற்படும்-விஜேதாச ராஜபக்ச

இலங்கைக்கு ஜெனிவாவில் எழுந்துள்ள நெருக்கடியை, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


“எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி, ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எழுப்பப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவும்.

மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் அதிபராகத் தெரிவு செய்யப்படுவது சிறிலங்காவின் நலன்களுக்கு விரோதமாக அமையும்.தேர்தலில் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்றால், நாடு அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.மகிந்தவின் ஆட்சிக்கு முடிவு கட்டப்படாமல் போனால், இலங்கை  மீது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம்.

இலங்க்கு எதிராகச் செயற்படும் அனைத்துலகச் சக்திகளை தோற்கடிக்க வேண்டுமாயின், புதிய அரசாங்கத்தினால் மட்டுமே அது முடியும்.அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்கா அதிபர்  மகிந்த ராஜபக்ச இழுத்துச் செல்லப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

போர் முடிந்த பின்னர், சிறிலங்கா அதிபரும், வெளிவிவகார அமைச்சரும் தான், பொறுப்புக்கூறல் குறித்து விசாரிக்க ஐ.நாவை அழைத்தனர் என்பதை அவர்கள் இப்போது மறந்து விட்டனர்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான கலந்துரையாடல் மார்ச் 25ல்

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் குழுவின் விசாரணை அறிக்கை, எதிர்வரும் 2015 மார்ச் 25ம் திகதியன்று கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த மார்ச் மாத அமர்வின் நிகழ்ச்சி நிரலின்படி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 28வது முறையான அமர்வு எதிர்வரும் மார்;ச் 2முதல் 27ஆம் திகதி வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.இதன்போது இலங்கையின் விடயம் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

2104ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி “இலங்கையின் நல்லிணக்கத்தையும்; பொறுப்புக்கூறலையும் மேம்;படுத்தல்” என்ற அடிப்படையில் சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை, ஆணையாளரை கேட்டுக்கொண்டது.இதன்படியே 28வது அமர்வில் இலங்கையின் விசாரணை தொடர்பாக அறிக்கை ஆராயப்படவுள்ளது.

கிழக்கில் தொடரும் அடைமழை! பலர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காணரமாக கல்குடாத் தொகுதியில் கோறளைப்பற்று வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை மற்றும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


29 இடைத்தங்கள் முகாம்களில் மூவாயிரத்தி அறுபத்திரெண்டு குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயாளர் பிரிவில் ஐந்து இடைத்தங்கள் முகாம்களில் தொன்நூற்றி ஒரு குடும்பங்களைச் சேர்ந்த இருநூற்றி நாற்பத்தொன்பது போர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தினால் மொத்தமாக ஆறாயிரத்தி எழுநூற்றி நாற்பத்தினாலு (6744) குடும்பங்களைச் சேர்ந்த இருபத்திரெண்டாயிரத்தி எழுநூற்றி ஐம்பத்தி மூன்று (22753) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ் தெரிவித்தார்.

இதேவேளை வாழைச்சேனை ஜூனியன்கொலனி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரான 49 வயதுடைய ஐயாத்துரை வசந்தி என்பவர் நேற்றிரவு தனது வீட்டு முற்றத்தில் உள்ள நீரில் விழுந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்து இடைத்தங்கள் முகாம்களில் நாநூற்றி என்பத்திமூன்று (483) குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்தி ஐநூற்றி தொன்னூற்றி ஆறு (2596) பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் வெள்ளத்தினால் ஏழாயிரத்தி இருநூற்றி தொன்னூற்றி ஆறு (7296) குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தையாயிரத்தி எழுபத்தைந்து (25075) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பதினேழு (17) இடைத்தங்கள் முகாம்களில் இரண்டாயிரத்தி முன்நூற்றி நாற்பத்தொன்பது (2349) குடும்பங்களைச் சேர்ந்த எட்டாயிரத்தி இருநூற்றி முப்பத்திநாலு (8234) பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஏழாயிரத்தி என்பத்தாறு குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தி நாலாயிரத்தி எந்நூற்றி அறுபத்தி மூன்று (24863) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு முகாம்களில் நூற்றி முப்பத்தொன்பது (139) குடும்பங்களைச் சேர்ந்த அறுநூற்றி இருபத்தைந்து பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் ஏழாயிரத்தி இருநூற்றி எழுபத்தாறு (7276) குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தாராயிரத்தி நாநூற்றி மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தெரிவித்தார்.

இதேவேளை வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆழ்கடல் படகுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானம், ஓட்டமாவடி சிறுவர் பூங்கா, வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் சில இடங்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளன.

குறித்த பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை பிரதேச செயலகங்கள், பிரதேச சபை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல் மற்றும் இராணுவத்தினர் கவனித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் மூழ்கும் சித்தாண்டி பிரதேசம்

மட்டக்களப்பு சித்தாண்டி பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி ஆறு போன்று காட்சியளிக்கின்றது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் உறுகாமம் குளத்தினுடைய வான் கதவுகள் திறக்கப்பட்டமை போன்றவற்றினால் தொடர்ச்சியாக வெள்ள நீர் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதன்போது உதயன்மூலை, மதுரங்காட்டு கொலணி ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. குறிப்பாக சித்தாண்டி 04 கிராம அபிவிருத்திச் சங்க கட்டத்திற்கு முன்னாலுள்ள வளைவு வீதியில் சுமார் 7 அடி வரையான நீர் காணப்படுவதுடன், உதயன்மூலை பாலர் பாடசாலை முன் வீதியில் சுமார் 4 அடி வரையிலான நீரும், சித்தாண்டி 4 பழைய சந்தை வீதியில் 6 அடி வரையிலான நீரும் காணப்படுகின்றது.

சில உள் குறுக்கு வீதிகள் 6 அடிக்கு மேற்பட்ட நீரைக் கொண்டும் காணப்படுகின்றன. சித்தாண்டி 3 மாரியம்மன் ஆலயத்தை அண்டிய பகுதி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு நீரினுடைய மட்டம் 6 அடிக்கு மேல் காணப்படுகின்றது.

சித்தாண்டி 02, சித்தாண்டி 01 மற்றும் மாவடிவேம்பு ஆகிய கிராமங்களும் பகுதியளவில் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன. சித்தாண்டி 03, 04 ஆகிய கிராம சேகவர் பிரிவுகளிலிருந்த மக்கள் இடம்பெயர்ந்து தற்போது பாடசாலை, பொதுச் சந்தை மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். சில குடும்பங்கள் தத்தமது வீடுகளில் உள்ள மேல் தளங்களில் அல்லது பரன் அமைத்து தொடர்ந்து தமது உறவிடங்களிலே தங்கியுள்ளர்.

வீடுகளிலே வளர்க்கப்பட்ட நாய்கள் உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டவை தவிர ஏனையவை உயிரிழிக்கும் நிலையிலும், குளிரில் நடுங்கிய நிலையிலும் காணப்படுவதுடன், ஒரு சில இடங்களில் நாய்கள் உயிரிழந்து மிதப்பதையும் காண முடிகின்றது.

குறிப்பிட்ட பகுதிகளின் மலசல கூடங்களின் கழிவு நீர் மற்றும் இன்னோரன்ன கழிவுகள் நீரில் கலந்திருப்பதனாலும், கிணறுகளை மேவி வெள்ள நீர் காணப்படுவதனாலும் தூய நீரை பெறுவதில் வெள்ளப் பிரதேசத்தில் தங்கியுள்ள குடும்பங்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதுடன், தொலைவிலிருந்து நீரை எடுத்து வரவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க கிராம உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்தாண்டி சந்தணமடு ஆற்றில் மணல்கள் அகழ்ந்து எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்தினால் வெள்ள அபாயத்தில் இருந்து ஓரளவேனும் குறைத்துக் கொள்ளலாம் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கல்முறை மாநகரசபை ஊழியர்களுக்கான விடுமுறைகள் ரத்து

கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதி ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலிக்கு இதற்கான விசேட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழையினால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தில் இருந்து கல்முனைப் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் உயர்மட்டக் கூட்டமொன்று நடாத்தப்படு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன் பிரகாரம் வெள்ள அபாய முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை நேர்த்தியாக மேற்கொண்டு வந்ததாகவும் இதனால் தற்போது பெய்து வருகின்ற மழையினால் கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் நாட்களில் எமது பணியை மேலும் பலப்படுத்தி அனைத்து பிரதேசங்களையும் மக்களையும் வெள்ள அபாயத்தில் இருந்து முழுமையாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதி ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்யுமாறு முதல்வர் பணிப்புரை விடுத்திருப்பதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

வடக்கையும் கிழக்கையும் மீள இணைக்க எதிரணி முயற்சி- மஹிந்த

வடக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தை திருப்பியனுப்பவும், பிரிந்திருக்கும் வடக்கையும் கிழக்கையும் ஒன்று சேர்க்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது அபாயகரமானது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


13ஆவது திருத்தச் சட்டத்திலே இருக்கக்கூடிய பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவோம். இப்போது பொலிஸ் படைக்கு ஒரே அதிகாரத்தின் கீழ் மிகவும் சுதந்திரமாக தொழிற்பட்டு வருகின்றது. ஆனால், இந்த திருத்தத்தின் மூலம் முதலமைச்சரின் கீழ்தான் பொலிஸ் அதிகாரம் வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு பொலிஸ் அதிகாரம் முதலமைச்சரின் கைகளுக்கு போய் விட்டால் அது பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பொத்துவில் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட் தலைமையில், பொத்துவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பொத்துவில் பிரதேச மக்கள், கடந்த 30 வருடத்துக்கு மேலாக பயங்கரவாதத்தாலும் 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இன்று நீங்கள் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. உங்கள் பிள்ளைகள் படிப்பதற்கும் பாடசாலை செல்வதற்கும் உங்களுடைய வயல்களுக்கு சென்று விவசாயம் செய்வதற்குரிய சூழ்நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது.

எனது முதலாவது 5 வருட காலத்துக்குள் இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன். அதனைத் தொடர்ந்து இந்த நாட்டின் பல பகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தது.

இன்று இந்த பகுதியில் இருக்கும் பாதைகள் எவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளன. மணிக்கணக்கில் பயணம் செய்த நீங்கள் தற்போது நிமிடக்கணக்கில் பயணம் செய்கின்றீர்கள். வெளிநாடு செல்வதாயின் கொழும்புக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பொத்துவில்லுக்கு மிக அண்மையிலுள்ள மத்தல விமான நிலையம் ஊடாக மிக விரைவாக வெளிநாடு செல்ல முடியும். அதே போன்று பொத்துவிலில் இருந்து மத்தல விமான நிலையத்துக்கு செல்வதற்கு மிக விரைவில் புகையிரத சேவையொன்றையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன்.

எதிர்கால சந்ததியினரான எமது பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி முன்னோக்கிச் செல்வதா என்ற விருப்பத்தைக் கேட்பதற்காக நான் இன்று உங்கள் முன்னே வந்துள்ளேன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்னுடன் போட்டி போடுவதற்காக எங்களுடன் இருந்து பாய்ந்து ஓடிப்போன ஒருவர் இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் ஒரு கொள்கைப் பிரகடனமொன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் விவசாயிகளுக்கு நான் வழங்கி வருகின்ற மானிய அடிப்படையிலான உரத்தை வழங்குவதா இல்லையா என்ற விடயம் உள்ளடக்கப்படவில்லை.

எனது 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் நிதி ஒதுக்கீடுகளும் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.
அந்த விடயங்கள் அனைத்தையும் தான் அவர் ஜனாதிபதியாக வந்தால் செய்வேன் என்று கூறியிருக்கின்றார். அதாவது எனது வரவு- செலவு திட்ட முன்மொழிவை இவர்கள் பிரதியெடுத்திருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஓர் ஒப்பந்தம். அதில் என்ன கூறியுள்ளார்கள் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வட மாகாணத்தில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தை திருப்பி அனுப்புவோம் என்றும் அதுமட்டுமல்லாது பிரிந்திருக்கும் வடக்கையும் கிழக்கையும் ஒன்று சேர்ப்போம் என்றுதான்.13ஆவது திருத்தச் சட்டத்திலே இருக்கக்கூடிய பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவோம்.

இப்போது பொலிஸ் படைக்கு ஒரே அதிகாரத்தின் கீழ் மிகவும் சுதந்திரமாக தொழிற்பட்டு வருகின்றது. ஆனால், இந்த திருத்தத்தின் மூலம் முதலமைச்சரின் கீழ்தான் பொலிஸ் அதிகாரம் வருகின்றது.அவ்வாறு பொலிஸ் அதிகாரம் முதலமைச்சரின் கைகளுக்கு போய் விட்டால் அது பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்து எம்முடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுபவர்களுக்கு நாங்கள் கூறி வருகின்றோம் 13ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் இருக்கும் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்று.

7 இலட்சமாக இருந்த அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 15 இலட்சமாக அதிகரித்தோம். இத்திட்டங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி விட்டு இலங்கையை சிங்கப்பூர் மொடலாக மாற்றப் போகின்றார்களாம். இலங்கையை சிங்கப்பூர் மொடலென்று நடைபெறப்போவது அவர்களுக்கே தெரியாது.

அது தனியார் மயப்படுத்தலில் தான் கொண்டு போய் எம்மையெல்லாம் சேர்க்கப் போகின்றது. இதேவேளை, கடந்த வரவு- செலவு திட்ட முண்மொழிவில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிதாக அரசேவையில் உத்தியோகம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.

அதையெல்லாம் குறைத்து அவர்கள் தனியார் மயப்படுத்த முனைகின்றார்கள். அதற்காக நான் விரும்புவது எங்களுக்கு இப்போதும் எப்போதும் தேவையானது ஸ்ரீலங்கா மொடல்தான். எனவே, நீங்கள் அனைவரும் எங்களோடு கைகோர்த்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். உங்களுக்காக உங்களின் எதிர்கால சந்ததிக்காக அவர்களின் ஒளிமயமான வாழ்க்கைக்காக நீங்கள் ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

மதில் மேல் பூனையாக தமிழ்த் தலமைகள் -நிலாந்தன்

ஜனாதிபதித் தேர்தல் குறித்து முஸ்லிம் கொங்கிரஸ் இது

தமிழர்களின் வாக்கு யாருக்கு கிடைக்கும் -செ.சிறிதரன்


வ­டக்கு–கிழக்கு மாகா­ணங்­களை இணைக்­க­மாட்டோம்.
மாகாண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்­க­ளையும் வழங்­கப்­போ­வ­தில்லை. இதுதான், இந்த அர­சாங்­கத்தின் தெளி­வான கொள்கை. இந்த விட­யங்கள் தொடர்பில் எதி­ரணி வேட்­பா­ளரின் நிலைப்­பாடு என்ன என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வினா எழுப்­பி­யி­ருக்­கின்றார்.

அது மட்­டு­மல்­லாமல், 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் குறித்து பொது வேட்­பா­ள­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ன கொள்­கையைக் கொண்­டி­ருக்­கின்றார் என்றும் அமைச்சர் பீரிஸ் வின­வி­யி­ருக்­கின்றார். வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்கள், 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் என்­பன தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளோடும், அவர்கள் கோருகின்ற சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய சுயாட்சி என்ற விட­யங்­க­ளோடும் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்ட விட­யங்­க­ளாகும்.

இந்த விட­யங்­களில் எதி­ர­ணி­யி­ன­ரு­டைய நிலைப்­பாடு என்ன என்­பதை சிங்­கள மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த பொது வேட்­பாளர் முன்­வர வேண்டும் என்­பதே அமைச்சர் பீரிஸின் கோரிக்­கை­யாகும். தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் உரி­மை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட விட­யங்கள் எத­னையும் நாங்கள் அவர்­க­ளுக்கு வழங்க மாட்டோம்.

நீங்கள் அந்த உரி­மை­களை அவர்­க­ளுக்கு வழங்கப் போகின்­றீர்­களா என்று மறை­மு­க­மாக அமைச்சர் பீரிஸ் எதி­ர­ணி­யி­ன­ரிடம் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார். சிங்­களப் பேரி­ன­வாத அரசானது தமிழ் மக்­க­ளுக்கு எத­னையும் கொடுக்கக் கூடாது. அவ்­வாறு அர­சியல் உரி­மைகள் வழங்­கப்­ப­டு­மானால், அது சிங்­கள மக்­க­ளையும் சிங்­கள தேசத்­தையும் காட்டிக் கொடுக்­கின்ற கைங்­க­ரி­ய­மாகும் என்­பதை அமைச்­ச­ரு­டைய கூற்று தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

தமிழ் மக்­க­ளுக்கு எத­னையும் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­ற­போது, எதி­ர­ணி­யினர் அவர்­க­ளுடன் கூடி குலா­வு­கின்­றார்கள். தமி­ழர்கள் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­களை நிறை­வேற்றும் வகையில் அவர்­க­ளுடன் ஒப்­பந்தம் செய்­வ­தற்குத் தயா­ரா­கின்­றார்கள்.

ஆகவே, அவர்­களை நீங்கள் இந்தத் தேர்­தலில் நிரா­க­ரித்து, தமிழ் மக்­க­ளு­டைய உரி­மை­களை மறுக்­கின்ற எமக்கு – எமது வேட்­பா­ள­ரா­கிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதே அமைச்சர் பீரிஸின் கோரிக்­கை­யாகும். தமி­ழர்­களின் அர­சியல் உரி­மைகள் சார்ந்த விட­யங்­களில் எதி­ர­ணி­யி­ன­ரு­டைய நிலைப்­பாடு குறித்து அரா­சங்கத் தரப்­பி­லி­ருந்து அமைச்சர் பீரிஸ் எழுப்­பி­யுள்ள கேள்­வி­களின் பின்னால் இன்னும் பல விட­யங்கள் புதைந்து கிடக்­கின்­றன.

 அரசாங்கத் தரப்பில் இருந்து இந்தக் கேள்­விகள் எதி­ர­ணி­யினர் மீது பாய்ந்­தி­ருப்­பதை ஒரு வகையில் சுவா­ர­சி­ய­மான விட­ய­மா­கவும் நோக்­கலாம். அதே­நே­ரத்தில் இந்தக் கேள்­விகள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரை நோக்கி - இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரை நோக்கி எழுப்­பப்­பட்­டி­ருக்க வேண்டும்.

இந்த விட­யங்­களில் அர­சாங்கம் ஏற்­க­னவே தெளி­வா­ன­தொரு நிலைப்­பாட்டில் இருக்­கும்­போது, ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காகக் கங்­கணம் கட்­டிக்­கொண்டு களத்தில் குதித்­துள்ள எதி­ர­ணி­யினர் என்ன நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரும், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரும் கேட்­ட­றிந்­தி­ருக்­கின்­றார்­களா? என்­பதைத் தமிழ் மக்­க­ளுக்கு அவர்கள் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

இது முக்­கி­ய­மா­ன­தொரு விட­ய­மாகும். தமிழ் மக்­க­ளுக்கு ஏன் தெளி­வு­ப­டுத்த வேண்டும்? தமிழ் மக்­க­ளு­டைய அன்­றாடப் பிரச்­சி­னைகள், அர­சியல் பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை முன்­வைத்தே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­க­ளிடம் வாக்கு கேட்­பது வழக்கம். ஆனால் இந்தத் - ஏழா­வது ஜனா­தி­பதி தேர்தல் அந்த வரை­ய­றைக்கு அப்­பாற்­பட்­டி­ருக்­கின்­றது. ஆட்சி மாற்றம் வேண்­டுமா வேண்­டாமா? என்ற கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கின்ற ஒரு தேர்­த­லாக இது அமைந்­தி­ருக்­கின்­றது.

ஆட்சி மாற்றம் தேவை என்­பதில், தமிழ் மக்­க­ளுக்கு மாற்று கருத்து எதுவும் இருக்க முடி­யாது. ஏனெனில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் அர­சியல் கொள்­கைகள் தமிழ் மக்­க­ளு­டைய உட­னடி தேவை­களை – அர­சியல் தேவை­களை பூர்த்தி செய்­யத்­தக்­க­வை­யல்ல. யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேலா­கின்ற போதிலும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளு­டைய மீள்­கு­டி­யேற்றம், மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்­களின் வாழ்­வா­தாரம் என்­பன இன்னும் சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அத்­துடன், யுத்தம் முடிந்­து­விட்ட போதிலும், இரா­ணு­வத்தின் பிடியில் இருந்து அவர்கள் இன்னும் விடு­ப­ட­வில்லை. மாறாக இரா­ணு­வத்தின் பிடிக்குள் நாளுக்கு நாள் அவர்கள் இறுகிச் செல்­கின்ற போக்­கையே இந்த அர­சாங்கம் கடைப்­பி­டித்து வரு­கின்­றது. இந்த அரசும், அதன் தலை­வ­ரா­கிய ஜனா­தி­ப­தியும் தமது சுய அர­சியல் நலன்­க­ளுக்­கா­கவே தமிழ் மக்­களின் வாக்­கு­களைப் பயன்­ப­டுத்த முனைந்­தி­ருக்­கின்­றார்­களே தவிர அவர்­க­ளுக்கு நிம்­ம­தி­யான உரி­மை­க­ளுடன் கூடிய வாழ்க்­கையை உரு­வாக்கிக் கொடுப்­ப­தற்கு முன்­வ­ரவே இல்லை.

முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த ஒரு மோச­மான யுத்தம் - சரியோ, பிழையோ ஒரு முடி­வுக்கு வந்து நாட்டில் அமைதி ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. யுத்தம் முடிந்த பின்­ன­ரா­வது, தமது பிரச்­சி­னை­க­ளுக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்்ஷவும், அவ­ரு­டைய அர­சாங்­கமும் ஓர் அர­சியல் தீர்வை ஏற்­ப­டுத்­து­வார்கள் என்று யுத்தப் பாதிப்­பு­க­ளுக்கு நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் முகம் கொடுத்த மக்கள் ஆவ­லோடு எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள்.

அர­சியல் தீர்வை நோக்கி இந்த அர­சாங்கம் இன்று செல்லும் நாளை செல்லும் என்று அவர்கள், கடந்த ஐந்­தரை வரு­டங்­க­ளுக்கு மேலாக எதிர்­பார்த்து, எதிர்­பார்த்து ஏமாற்­ற­ம­டைந்­தார்­களே தவிர, அவர்­களின் மன நிலையைப் புரிந்து கொண்டு அர­சாங்கம் உரிய முறையில் செயற்­ப­டவே இல்லை. தமிழ் மக்கள் தமது எதிர்­பார்ப்­புக்கள், அபி­லா­ஷைகள், பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை பல்­வேறு வழி­களின் ஊடா­கவும் அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­தார்கள்.

தமது எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்ற வேண்டும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முன்­வ­ர­வேண்டும் என்­பதை அடுத்­த­டுத்து வந்த தேர்­தல்­களில் வாக்­க­ளித்த முறை­மையின் கீழ் அர­சுக்கு அவர்கள் ஆழ­மாக உணர்த்­தி­யி­ருந்­தார்கள். இருந்த போதிலும், அர­சாங்கம் அதனை கவ­னத்தில் எடுத்துச் செயற்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

தமிழ் மக்கள் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டுள்ள நிலைப்­பாட்டில் தமக்கு உடன்­பா­டில்லை என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே, கடந்த கால தேர்­தல்­களில் அவர்கள் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்து வந்­துள்­ளார்கள். இந்தத் தேர்­த­லிலும் அவர்கள் எதிர்த்து வாக்­க­ளிக்க மாட்­டார்கள் என்று சொல்­வ­தற்­கில்லை. ஆனால், இந்தத் தேர்­தலில் தமது பிர­தி­நி­திகள் என சொல்­லக்­கூ­டிய எவரும் முக்­கிய வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­ட­வில்லை.

பேரி­ன­வாத சிங்­களக் கட்­சி­களைச் சேர்ந்­த­வர்­களே இந்தத் தேர்­தலின் இரண்டு முக்­கிய வேட்­பா­ளர்­க­ளாகத் திகழ்­கின்­றார்கள். இந்த இரு­வரில் ஒருவர் குறித்து ஏற்­க­னவே தமிழ் மக்கள் ஒரு முடிவைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆட்சி மாற்றம் ஒன்று தேவை என்­ப­தற்­காக மற்ற வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்­ப­தனால் ஏற்­படப் போகின்ற மாற்­றங்கள் அல்­லது நன்­மைகள் என்ன என்­ப­தையும் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்­பு­வார்கள்.

அந்த விருப்­பத்தை நிறை­வேற்ற வேண்­டி­யது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­ன­ரதும், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­ன­ரதும் கட­மை­யல்­லவா? இத்­த­கைய ஒரு நிலை­மையில் தமிழ் மக்­க­ளு­டைய அன்­றாடப் பிரச்­சி­னைகள், அர­சியல் பிரச்­சி­னைகள் தொடர்பில் எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் என்ன நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்கின்றார், எதி­ர­ணி­யினர் என்ன நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்­கின்­றார்கள்? என்­பதைக் கண்­ட­றிந்து தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யது, தமிழ் மக்­களின் தலை­வர்­களின் தலை­யாய கட­மை­யாகும். அந்த பொறுப்பை அவர்கள் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. அதே­போன்று அவர்கள் ஏனோ­தானோ என்று, இந்த விட­யத்தில் நடந்து கொள்­ளவும் முடி­யாது.

என்ன நடக்­கின்­றது? 

தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட விட­யங்­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் எதி­ர­ணி­யி­ன­ருடன் ஒப்­பந்தம் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்ற குற்­றச்­சாட்டை அரச தரப்­பினர் தொடர்ச்­சி­யாக சுமத்தி வரு­கின்­றார்கள்.

அத்­த­கைய ஒப்­பந்தம் எதுவும் செய்து கொள்­ளப்­ப­ட­வில்லை என்று இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாராளு மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மாவை சேனா­தி­ராஜா, வவு­னி­யாவில் நடை­பெற்ற அந்தக் கட்­சியின் மத்­தி­ய­குழு கூட்­டத்தின் பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கையில், எதி­ர­ணி­யி­ன­ருடன் கூட்­ட­மைப்பு எந்­த­வி­த­மான ஒப்­பந்­தமும் செய்து கொள்­ள­வில்லை என்று மறுத்­து­ரைத்­தி­ருக்­கின்றார்.

அதே­போன்று பாராளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனும், அம்­பா­றையில் இடம்­பெற்ற பிர­தேச சபை மற்றும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் கலந்து கொண்ட கூட்­டத்தின் பின்னர் இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது இர­க­சிய ஒப்­பந்தம் எதுவும் செய்து கொள்­ளப்­ப­ட­வில்லை. அவ்­வாறு ஒப்­பந்தம் செய்து கொண்­ட­தற்­கான சாட்­சி­ய­மி­ருந்தால் அதனை வெளி­யி­டு­மாறு ஜனா­தி­ப­திக்கு பகி­ரங்­க­மாக சவால் விடுத்­துள்ளார்.

தமிழ் மக்­களின் தலை­வர்­க­ளா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் அந்த மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும், அந்த மக்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்கும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யது அவர்­களின் கட­மை­யாகும். அந்த வகையில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை அரச தரப்­பினர் புறந்­தள்ளி நடக்­கின்­ற­போது, வேறு தரப்­பி­ன­ருடன் ஒப்­பந்­தங்கள் செய்து கொள்­வதில் தவ­றேதும் இருக்க முடி­யாது.

அவ்­வாறு ஒப்­பந்­தங்கள் செய்யக் கூடாது என்று எவரும் அவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டவும் முடி­யாது. தலை­வர்கள் தங்­களை நம்­பி­யி­ருக்­கின்ற மக்­களின் நன்­மை­க­ளுக்­காகச் செயற்­ப­டும்­போது, அதனைத் தவ­றி­ழைத்­த­தாக எவரும் கூறவும் முடி­யாது. அதே­நே­ரத்தில், இத்­த­கைய செயற்­பா­டுகள் வேறு ஒரு தரப்­பி­னரைப் பாது­காப்­ப­தற்­காக, அல்­லது அவர்­களின் அர­சியல் நலன்­களை மேலோங்கச் செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது. அனு­ம­திக்­கவும் முடி­யாது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரைப் பொறுத்­த­மட்டில், அவர்கள் தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வார்கள் என்று சொல்­வ­தற்­கில்லை. அவ்­வா­றான செயற்­பா­டு­களில் அவர்கள் இது­வ­ரையில் ஈடு­பட்­டி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் இல்லை. எனவே, இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் அவர்கள் எடுக்­கின்ற முடிவு தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற ஒரு தரப்பைப் பாதிக்கும் என்­ப­தற்­காக அதனை வெளிப்­ப­டை­யாகக் கூற முடி­யாது என்று கூறு­வ­தற்கு வலு­வான கார­ணங்கள் இருக்க வேண்டும்.

கூட்­ட­மைப்­பினர் எடுக்­கின்ற அல்­லது ஏற்­க­னவே எடுத்­துள்ள முடிவின் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாக நன்மைகள் கிடைக்கும் என்­ப­தற்­கான உத்­த­ர­வாதம், உறு­தி­மொழி ஏதா­வது இருக்­கு­மே­யானால், அதற்­காக – தமிழ் மக்­களின் நன்மை கருதி இர­க­சியம் காக்­கலாம். அவ்­வாறு எதுவும் இல்­லை­யென்றால் கூட்­ட­மைப்­பி­னரின் முடிவு குறித்து இர­க­சியம் காப்­பதில் எந்­த­வி­த­மான அர்த்­தமும் இல்­லை­யென்றே கூற வேண்டும்.

கூட்­ட­மைப்­பி­னரின் முடிவு குறித்து இர­க­சியம் காப்­ப­தென்­பது எவ்­வ­ளவு காலத்­திற்கு சாத்திய­மாகும் என்­பதும் முக்­கி­ய­மா­னது. ஏனெனில் வாக்­க­ளிப்பு தினத்­திற்கு முன்­ன­தாக எப்­ப­டியும் அதனை வெளிப்­ப­டுத்­தியே ஆக வேண்டும். அந்த முடி­வுக்­க­மைய, இன்­னா­ருக்கே இன்ன தரப்­பி­ன­ருக்கே வாக்­க­ளிக்க வேண்டும் என்ற தமிழ் மக்­க­ளுக்­கான அறி­வித்­தலை வெளி­யா­ருக்குத் தெரி­யாமல், இர­க­சி­ய­மாக, கூட்­ட­மைப்பைத் தலை­மை­யாகக் கொண்­டுள்ள மக்­க­ளுக்கு மட்டும் தெரி­விக்க முடியும் என்று கூறு­வ­தென்­பது நகைப்­புக்­கு­ரிய விட­ய­மாகும்.

ஆனால், இதில் உள்ள முக்­கிய விடயம் என்­ன­வென்றால், கூட்­ட­மைப்பின் தலைமை – குறிப்­பாக கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இந்தத் தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது, யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பது குறித்து ஏற்­க­னவே முடிவு செய்­து­விட்டார். அந்த முடி­வுக்கு அமை­வா­கவே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தலை­வர்கள், உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­களை அறி­வ­தற்­கான கூட்­டங்கள் என்ற பெயரில் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரால் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்ள கூட்­டங்கள் நடை­பெற்று வரு­கின்­றன.

கூட்­டங்­களில் தலை­வர்­க­ளினால் கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன என்று அத்­த­கைய முக்­கிய கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்கள் கூறு­கின்­றார்கள். ‘பெய­ர­ள­வி­லேயே அவர்கள் எங்­க­ளிடம் கருத்­துக்­களைக் கேட்­டார்கள். யாருக்கு நாங்கள் ஆத­ர­வ­ளிக்­கின்­றோமோ, அந்தத் தரப்­பி­ன­ரிடம், அமெ­ரிக்கா போன்ற வலிமை மிக்க நாட்டுப் பிர­தி­நி­தி­யொ­ரு­வரின் முன்­னி­லையில் உடன்­பாடு ஒன்று எட்­டப்­பட வேண்டும்.

என்று நாங்கள் எங்­க­ளு­டைய கருத்தைத் தெரி­வித்­தி­ருந்தோம். ஆனால் அது குறித்து எமது தலை­வர்கள் பெரிய அளவில் கவனம் செலுத்­த­வில்லை. அதுபற்றி அவர்கள் அலட்டிக் கொள்­ள­வு­மில்லை. மொத்­தத்தில் இந்தச் சந்­திப்­பா­னது ஒரு கண்­து­டைப்பு சந்­திப்பு என்று சொல்­லத்­தக்க வகை­யி­லேயே அமைந்­தி­ருந்­தது’ என்று அவர்கள் தெரி­வித்­தனர். அடி­மட்டத் தலை­வர்கள் என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னதும், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­னதும் இந்தக் கருத்­தா­னது, கூட்­ட­மைப்பின் முடிவு சரி­யான முடி­வு­தானா என்­பதைச் சிந்­திக்கத் தூண்­டி­யி­ருக்­கின்­றது.

தமிழ் மக்கள் விலை­போய்­விடக் கூடா­து இந்தத் தேர்­தலில் கடும் போட்­டியில் ஈடு­பட்­டுள்ள இரண்டு பகு­தி­களில் ஒரு தரப்­பையே தமிழ் மக்கள் ஆத­ரிக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. அத­னை­விட அவர்­க­ளுக்கு வேறு ஒரு தெரிவு கிடை­யாது. எனவே, ஆட்சி மாற்றம் தேவை என்ற நிலைப்­பாட்டில் உள்ள மக்­களின் வாக்­கு­களை, அந்த மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணத்­தக்க – அதற்கு வழி சமைக்­கத்­தக்க வகையில் பயன்­ப­டுத்த வேண்­டி­யது தலை­வர்­களின் கட­மை­யாகும்.

அத்­த­கைய வழி ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றதா என்­பதே இப்­போ­தைய கேள்­வி­யாக, முக்­கிய பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது. எதி­ர­ணியில் இணைந்­துள்ள கட்­சி­களின் சார்பில் பொது வேட்­பாளர் ஒரு­வரைத் தெரிவு செய்­வதில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் முக்­கிய பங்­கெ­டுத்­தி­ருந்­தது என்று சொல்­லப்­ப­டு­கின்­றது. இதற்­கான முக்­கிய சந்­திப்­புக்­களில் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் கலந்து கொண்­டி­ருந்தார் என்ற தக­வலும் ஏற்­க­னவே வெளி­யா­கி­யி­ருந்­தது.

ஆனால், இப்­போது கூட்­ட­மைப்பின் முடிவு குறித்து மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்­டிய சந்­தர்ப்­பத்தில் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் நாட்டில் இல்­லை­யென்­பது பல­ரு­டைய கவ­னத்தை ஈர்த்­தி­ருக்­கின்­றது. அது குறித்த பல்­வேறு கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. எதி­ர­ணி­யினர் இந்தத் தேர்­தலில் நிச்­சயம் வெற்றி பெறுவோம் என்றும், அவ்­வாறு வெற்­றி­பெற்­றதும், தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்போம் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

அவர்களுடைய திட்டத்தின்படி அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் கூட்டமைப்பினருக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பி இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்ற தமிழ் மக்களுடைய வாக்குகளால் அமையப் போவதாகத் தெரிவிக்கப்படுகின்ற தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படப் போகின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

ஏனெனில், எதிரணியினருடனான சந்திப்புக்களில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், சிவில் ஆட்சி என்ற விடயங்கள் பற்றி மட்டுமே முக்கியமாகப் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன. மீள்குடியேற்றம் என்ற விடயத்தில் பல முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. அதேபோன்று, முழுமையான சிவில் ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்திலும் பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.

ஆனால், கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைகளில் வாடுகின்ற தமிழ் இளைஞர்கள், காணமல் போனவர்கள் உள்ளிட்ட விடயங்களும் அரசியல் தீர்வு பற்றிய விடயமும் பேச்சுக்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கசிந்திருக்கின்றன. எனவே, இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதில் கூட்டமைப்பினர் உறுதியாக இருக்கின்றனர்.

ஆனால் அவ்வாறு அளிக்கப்படுகின்ற வாக்குகள் அரியணையில் முகங்கள் மாறுவதற்காக பயன்படுத்தப்படப்போகின்றதா? அல்லது அதற்கும் அப்பால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படப் போகின்றதா ? என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது ஆனாலும் வாக்களிப்பது அவசியம்.

அரசு என்னை கொலை செய்ய முயற்சி-மைத்திரி

தமக்குள்ள பாதுகாப்பை அகற்றி விட்டு அரசு என்னை கொலை செய்யவே முயற்சிக்கிறது என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலகமுவையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்



ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் தனக்கான பாதுகாப்பிற்கு 7 பாதுகாப்பாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக் ஷவிற்கு எந்தளவு பாதுகாப்பு உள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.எனினும் மக்களின் ஆதரவு பாதுகாப்பும் எனக்கிருப்பதால் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை.

மக்கள் பாதுகாப்பே எனக்குள்ளது என்ற மன நிறைவோடு நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக தேர்தலில் இறங்கியுள்ளேன் பயத்துடனும் அச்சத்துடனும் வாழ்வதை விட நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றும் பொருட்டு ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்களின் ஜனநாயக சுதந்திரத்திற்காகவும் சத்தியத்திற்காகவும் போராடி வீரனாக மடிவதே மேல் என்ற இலட்சியத்தை கொண்டே உங்கள் மத்தியில் வந்துள்ளேன் என்றார்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் -மாவை

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இன்னும் ஓரிரு தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவிக்கும். அதற்கு முன்னர் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வூட்டும் பணிகளை இன்றிலிருந்து கூட்டமைப்பின் உள்ளூராட்சி, மாகாண சபை உறுப்பினர்கள் ஆரம்பிப்பார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. 


மக்கள் பிரதி நிதிகளுடநான சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது, எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பன குறித்து பிரதேச ரீதியாக வடக்கு, கிழக்கில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தறியும் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

 மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து பொதுவான முடிவொன்றை கூட்டமைப்பின் தலைமை அறிவிக்கும். இந்த அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும். இதன்போது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை கூட்டமைப்பு வெளிப்படையாக அறிவிக்கும். அதேசமயம், நாம் தேர்தலைப் புறக்கணித்தால் எமது எதிர்கால இலட்சியம் கேள்விக்குறியாகிவிடும். 

எனவே நாம் தேர்தலைப் புறக்கணிக்கக்கூடாது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையே நாம் கோரி நிற்கிறோம். இதன்படி அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உள்ளூராட்சி, மாகாண சபை உறுப்பினர்களும், கட்சிப் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று முதல் வாக்களிக்க வலியுறுத்தும் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பார். என தெரிவித்தார்