போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் 15000 கடிதங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளராக கடமையாற்றிய நவனீதம்பிள்ளைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போர்க்குற்றச் செயல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் சாட்சியங்கள் அடங்கிய 15000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கடத்தப்பட்ட காணாமல் போனவர்களின் மற்றும் உயிரிழந்த பெற்றோர் அமைப்பு இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைக் குழுவினர் இந்த கடிதங்களை பரிசீலனை செய்து விசாரிப்பார்கள், என அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.