1,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி - TK Copy 1,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி - TK Copy

  • Latest News

    1,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

    ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 1000க்கும் மேற்பட்டோர் அமெரிக்க வான்வழி தாக்குதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றன.


    இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23ம் திகதி முதல் அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதலில் இதுவரை 1,171 பேர் பலியாகியுள்ளதாக சிரியாவின் போர் கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இவர்களில் 1046 பேர் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆவர். இதில் 72 பேர் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்–நுஸ்ரா முன்னணி என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மற்ற 52 பேர் பொதுமக்கள் என கூறப்பட்டுள்ளது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: 1,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி Rating: 5 Reviewed By: Unknown