கூட்டமைப்பை வீழ்த்தும் முயற்சியும் கூட்டுப்பொறுப்பின் முக்கியமும் - TK Copy கூட்டமைப்பை வீழ்த்தும் முயற்சியும் கூட்டுப்பொறுப்பின் முக்கியமும் - TK Copy

  • Latest News

    கூட்டமைப்பை வீழ்த்தும் முயற்சியும் கூட்டுப்பொறுப்பின் முக்கியமும்


    ஒரு வருட நிறைவைக் கண்­டுள்ள வட­மா­காண சபையின்
    செயற்­பா­டுகள் குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­தி­ருக்­கின்­றன. இந்த விமர்­ச­னங்கள் அர­சியல் ரீதி­யாக அர­சாங்கத் தரப்பில் இருந்தும், அரச ஆத­ர­வா­ளர்கள் பக்­கத்தில் இருந்தும், சபையின் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்தும் வந்­தி­ருப்­பது வியப்­புக்­கு­ரி­ய­தல்ல. அதே­நேரம் இந்த விமர்­ச­னங்கள் சபையில் உள்ள ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து அதி­ருப்தி உணர்­வோடு, பல்­வேறு ஆதங்­கங்­களை வெளிப்­ப­டுத்தும் வகையில் வெடித்­தி­ருப்­பதுசீரியசிந்தனைக் கு­ரியவிடய­மாகும்.

    வட மா­காண சபை பொறுப்­பேற்­றதில் இருந்து கடந்த ஒரு வருட காலத்தில் 168 பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருப்­ப­தாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் பட்­டி­ய­லிட்­டி­ருக்­கின்றார். இந்தப் பிரே­ர­ணை­களில் எத்­தனை வீத­மா­னவை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன, அவற்றின் ஊடாக மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பயன்கள் என்ன என்­பது பற்­றிய தக­வல்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. பெரும் எண்­ணிக்­கையில் பிரே­ர­ணை­களை நிறை­வேற்­றி­யி­ருப்­ப­த­னால்தான் எதிர்க்­கட்­சி­யினர் வட­மா­காண சபையை பிரே­ரணை சபை என்று வர்­ணித்­தி­ருக்­கின்­றார்கள்.

    வட­மா­காண சபையின் செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் முட்­டுக்­கட்­டைகள் போடப்­ப­டு­கின்­றன என்­பது புது­வி­ட­ய­மல்ல. இதனை அநே­க­மாக அனை­வரும் அறி­வார்கள். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை எந்­த­வ­கை­யிலும் கணக்கில் எடுக்­காத – எடுக்க விரும்­பாத ஒரு போக்­கி­லேயே அர­சாங்கம் அர­சியல் முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.

    அர­சியல் ரீதி­யாகத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை எந்த அள­வுக்குத் தோற்­க­டிக்க முடி­யுமோ அந்த அள­வுக்கு, அந்த அளவு உச்ச நிலையில் அதற்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தி, தமிழ் மக்கள் மத்­தியில் கூட்­ட­மைப்­புக்கு இருக்­கின்ற அர­சியல் செல்­வாக்கை வீழ்த்­தி­விட வேண்டும் என்­பதில் கண்ணும் கருத்­து­மாக இருந்து அர­சாங்கத் தரப்­பினர் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். இதற்கு ஜனா­தி­பதி தொடக்கம், அர­சாங்­கமும், அர­சாங்க அமைச்­சர்கள், அரச ஆத­ரவு அர­சி­யல்­வா­திகள் வரையில் அனை­வரும் மேற்­கொண்டு வரு­கின்ற பிர­சார நட­வ­டிக்­கைகள் சிறந்த உதா­ர­ணங்­க­ளாகத் திகழ்­கின்­றன.

    வட­மா­கா­ணத்தில் மாகாண சபையும், அர­சாங்­கமும் தத்­த­மது அர­சியல் அதி­கார எல்­லைக்குள் நின்று மக்­க­ளுக்கு ஆற்ற வேண்­டிய பணி­களைச் செய்ய வேண்டும். இது அர­சியல் ரீதி­யா­னது. அது மட்­டு­மல்ல. இரு தரப்­பி­ன­ருக்கும் குறித்து ஒதுக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­பாகும். அத்­துடன், அந்த அதி­கா­ரங்­களை உச்ச பய­ன­ளிக்கும் வகையில் மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்­கத்­தக்­க­தாகப் பயன்­ப­டுத்தி, மக்கள் மத்­தியில் நற்­பெ­ய­ரையும், அர­சியல் ரீதி­யான ஆத­ர­வையும் திரட்டிக் கொள்­வ­தற்­கு­ரிய சந்­தர்ப்­ப­மா­க­வும்­கூட கருத லாம்.

    சுருக்­க­மாகச் சொல்­வ­தானால், அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக அர­சாங்­கமும், மாகாண மட்­டத்தில் மாகாண சபையும் மக்­க­ளுக்­கு­ரிய சேவை­களை ஆற்­று­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக அதி­கா­ரங்கள் வகுத்து ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த அதி­கா­ரங்­களை இரு தரப்­பி­னரும் தங்­க­ளுக்குள் முரண்­ப­டாத வகையில் முட்டி மோதிக்­கொள்­ளாத வகையில் ஒரு­வ­ருக்­கொ­ருவர் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட வேண்டும் என்­பதே அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான நோக்­க­மாகும். 

    எனவே, இரு தரப்­பி­னரும் எங்­கெங்கு தனி­யாகச் செயற்­பட வேண்­டுமோ அங்­கெல்லாம் தத்­த­மக்­கு­ரிய அதி­கார வட்­டத்­திற்குள் இருந்து தனி­யா­கவும், அதே நேரத்தில் எங்­கெங்கு இணைந்து செய­லாற்ற வேண்­டுமோ அங்­கெல்லாம் விட்டுக் கொடுப்­பு­டனும் ஒரு­வரை யொருவர் அங்­கீ­க­ரித்தும் செய­லாற்ற வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். ஆனால் இத்­த­கைய போக்கை வட­மா­காண சபையின் செயற்­பா­டு­களில் காண முடி­ய­வில்லை. மாறாக விடாக் கண்டன் கொடாக்­கண்டன் என்ற ரீதி­யி­லேயே காரி­யங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இது வருத்­தத்­திற்­கு­ரி­யது. கவ­லைக்­கு­ரி­யது. வட­மா­காண மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கும், எதிர்­காலச் செயற்­பா­டு­க­ளுக்கும் பாத­க­மா­னது.

    முரண்­பா­டானசெயற்­பா­டு­கள்

    அ­ர­சாங்­க­மா­னது, தனக்­கு­ரிய அதி­கா­ரங்­களை எந்­தெந்த வகையில் நேர­டி­யாக, மக்கள் மத்­தியில் பயன்­ப­டுத்த முடி­யுமோ அந்­தந்த வழி­களில் எல்லாம் ஏதேச்­ச­தி­கா­ரத்­துடன் செயற்­பட்டு வரு­வ­தையே காண முடி­கின்­றது. அண்­மையில் வட­மா­கா­ணத்­திற்கு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த ஜனா­தி­ப­தியின் விஜ­ய­மா­னது, அர­சாங்­கத்தின் இந்த நிலைப்­பாட்டைப் பளிச்­சென வெளிச்சம் போட்டு காட்­டி­ யி­ருந்­தது. ஜனா­தி­பதி நாட்டின் தலைவர் என்ற ரீதியில் வட­மா­காண சபை­யி­ன­ரையும் உள்­வாங்கிச் செயற்­பட வேண்டும் என்ற எதிர்­பார்ப்­புக்கு மாறாக அவ­ரு­டைய விஜ­யமும், செயற்­பா­டு­களும் திட்­ட­மிட்டுச் செயற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தா­கவே அமைந்­தி­ருந்­தன. 

    அர­சாங்கத் தரப்பினரும்­சரி, எதி­ர­ணியில் உள்ள மாகாண சபையின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பினரும் ­சரி, அடிப்­ப­டையில் மக்­களால் தெரிவு செய்­யப்­பட பிர­தி­நி­தி­களே என்­பதை மறந்­து­வி­ட­லா­காது. அர­சியல் கார­ணங்­க­ளையும், கட்சி ரீதி­யான – தனிப்­பட்ட அர­சியல் ஆளுமை என்ற ரீதி­யி­லான நோக்­கங்­க­ளையும் முன்­வைத்து தங்­க­ளு­டைய அதி­கார பலத்­தையோ அர­சியல் செல்­வாக்­கையோ காட்ட முற்­ப­டு­வது நல்­ல­தல்ல. 

    மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள், மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட தலை­வர்கள் என்ற ரீதியில் பொது விட­யங்­களில் மக்­க­ளு­டைய அடிப்­படைத் தேவை­களைப் பூர்த்தி செய்­கின்ற விட­யங்­களில் அர­சியல் வேறு­பா­டு­களைப் புறந்­தள்ளி இணைந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சி­யமாகும். தனது வட­ப­கு­திக்­கான விஜ­யத்­தின்­போது, ஜனா­தி­பதி யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற வளர்ச்சிப் பணிகள் தொடர்­பான மீளாய்வு கூட்­டத்தில் உரை­யாற்­று­கையில் அந்தக் கூட்டத்தைக் கூட்­ட­மைப்­பினர் புறக்­க­ணிக்கும் வகையில் அங்கு சமு­க­ம­ளிக்­கா­தி­ருந்­ததைச் சுட்­டிக்­காட்டி, மக்­க­ளுக்கு சேவை­யாற்­றும்­போது, அவர்­க­ளுக்­கான வேலைத்­திட்­டங்கள் பற்றி பரி­சீ­லிக்­கும்­போது மக்­க­ளு­டைய பிர­தி­நி­திகள் என்ற வகையில் அர­சியல், இன, மத பேதங்கள் பாராமல் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். 

    ஆனால், அரச தரப்­பினர் அவர் கலந்து கொண்­டி­ருந்த அந்தக் கூட்­டத்தை, ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தி­யி­ருந்த கோட்­பா­டு­க­ளுக்கு அமை­வாக ஒழுங்கு செய்­தி­ருக்­கவில்லை. மிகுந்த விட்டுக் கொடுப்­புடன் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்குத் தாங்கள் தயா­ராக இருக்­கின்ற போதிலும், அர­சாங்கம் அவ்­வாறு இணைந்து செயற்­ப­டு­வ­தற்குத் தயா­ராக இல்லை என்­பதை ஜனா­தி­ப­தியின் வட­ப­கு­திக்­கான விஜ­யத்தில் தாங்கள் கலந்து கொள்­ளா­தி­ருந்­தமை குறித்து விளக்­க­ம­ளித்­தி­ருந்த வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தார்.

    ஒரு நாட்டின் அதி­யுயர் பீடத்தில், அதி­யுயர் அதி­கா­ரங்­க­ளுடன் செயற்­பட்டு வரு­கின்ற தலைவர் என்ற ரீதியில் தான் கலந்து கொண்­டி­ருந்த கூட்­டத்தைக் கூட்­ட­மைப்­பினர் புறக்­க­ணித்­தி­ருந்­தமை குறித்து, ஜனா­தி­பதி தமது வருத்­தத்தை வெளிப்­ப­டுத்தும் தொனியில் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். ஆனால், அர­சாங்­கத்திற்கும் வட­மா­காண சபையின் நிர்­வா­கத்­திற்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள இடை­வெ­ளியைக் கருத்­தியல் ரீதி­யான வேற்­று­மையைப் போக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு அவரோ அல்­லது அவரைச் சார்ந்­த­வர்­களோ முயற்­சி­களை மேற்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. 

    மாறாக மக்கள் மத்­தியில் அவர்­க­ளுக்­குள்ள அர­சியல் செல்­வாக்கை இல்­லாமல் செய்­வ­தற்­கான குறுக்கு வழி நட­வ­டிக்­கை­களை அவர்கள் மேற்­கொண்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. இத்­த­கைய போக்கில் மாற்றம் ஏற்­பட வேண்டும். அர­சியல் ரீதி­யான மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இல்­லையேல் இத்­த­கைய முரண்­பட்ட போக்­கா­னது எதிர்­கா­லத்தில் விப­ரீ­த­மான விளை­வு­க­ளுக்கு வழி­யேற்­ப­டுத்­தி­ய­தாக அமைந்­து­விடும் என்­பதில் சந்­தே­க­மில்லை. வட­மா­காண சபையின் உள்­ளக முரண்­பா­டுகள் வட­மா­காண சபை­யா­னது தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் முக்­கி­ய­மான ஓர் அர­சியல் கட்­ட­மைப்­பாகும். 

    சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான அர்த்­த­முள்ள அதி­காரப் பகிர்வுடன் கூடிய அர­சியல் உரி­மை­க­ளுக்­கா­கவே, தமிழ் மக்கள் போராடி வரு­கின்­றார்கள். அந்த வகையில் வட­மா­காண சபையின் அதி­கா­ரங்­களோ, அர­சியல் மற்றும் நிர்­வாகக் கட்­ட­மைப்போ, அவர்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறைவு செய்­யாத ஓர் அமைப்­பா­கவே காணப்­ப­டு­கின்­றது. எனினும் எது­வுமே இல்­லாத நிலையில் இதனை ஓர் ஆரம்பப் புள்­ளி­யாக இருப்­பதை வைத்துக் கொண்டு தேவை­யா­னதைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களை மேற் கொள்ள முடியும் என்ற நோக்கில், வட­மா­காண சபைக்­கான தேர்­தலில் கூட்­ட­மைப்­பினர் கள­மி­றங்­கி­யி­ருந்­தனர். 

    அதே­நேரம் தமிழ் மக்­க­ளு­டைய பிர­தே­சத்தில் பெய­ர­ள­வி­லான அதி­கா­ரங்­களைக் கொண்ட ஓர் அமைப்­பாக இருந்­தாலும், அதனை எதி­ர­ண­ியி­னரின் கைக­ளுக்குச் செல்­ல­வி­டாமல் காத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்­கமும் அவர்கள் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான முக்­கிய நோக்­க­மாக அமைந்­தி­ருந்­தது.

    கூட்­ட­மைப்­பி­ன­ரு­டைய இந்த நோக்­கங்கள் மக்கள் மத்­தியில் வர­வேற்பைப் பெற்­றி­ருந்­ததன் கார­ண­மா­கவே மூன்­றி­லி­ரண்டு பங்­குக்கும் அதி­க­மான பெரும்­பான்மை பலத்தைத் தேர்­தலில் மக்கள் அவர்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்­தார்கள். மறு­பக்­கத்­தில் தேசிய அர­சியல் நீரோட்­டத்தில், தமிழ் மக்கள் வன்­முறை அர­சியல் போக்கைக் கொண்­ட­வர்கள் என்ற தோற்­றப்­பாட்டை காட்­டு­வ­தற்­காக பேரி­ன­வா­திகள் மேற்­கொண்டு வரு­கின்ற முயற்­சி­களை முறி­ய­டிப்­ப­தற்­காக, புத்தம் புதிய வர­வாக முத­ல­மைச்­ச­ருக்­கான வேட்­பா­ள­ராக சிவில் துறையில் நீண்­ட­காலம் பணி­யாற்றி ஓய்­வு­பெற்­றி­ருந்த நீதி­ய­ர­ச­ரா­கிய விக்கி­னேஸ்­வ­ரனை கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் கள­மி­றக்­கி­யி­ருந்தார். 

    அவ­ரு­டைய எதிர்­பார்ப்பை நிறை­வேற்­றத்­தக்க வகையில் மக்கள், அவ­ருக்கு அமோ­க­மாக வாக்­க­ளித்து அதி­கூ­டிய பெரும்­பான்மை வாக்­கு­களை அளித்து வெற்றி பெறச் செய்­தி ­ருந்­தார்கள். ஆனால் முத­ல­மைச்சர் என்ற ரீதியில் அவ­ரு­டைய தலை­மையில் வட­மா­காண சபையின் செயற்­பா­டுகள் எதிர்­பார்த்த வகையில் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. சபைக்­குள்­ளேயே திருப்­தி­ய­ளிப்­ப­தா­கவும் அமை­ய­வில்லை. இது சபையின் ஒரு வருட கால நிறை­வின்­போது, இரண்டாம் ஆண்டின் முத­லா­வது கூட்­டத்தில் மோச­மாக வெளிப்­பட்­டி­ருந்­தது.

    வடக் கில் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட அர­சியல் தலை­மையைக் கொண்ட மாகாண சபை என்­பது, பொது­மக்­க­ளுக்கும் அதே­போன்று அதற்­காகத் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கும் புதி­யதோர் கட்­ட­மைப்­பாகும். அந்தக் கட்­ட­மைப்­பையும் அவர்­களே கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய நிலையில் இருக்­கின்­றார்கள். ஏனைய மாகா­ணங்­களில் இந்த நிர்­வாகக் கட்­ட­மைப்பு ஏற்­க­னவே உரு­வாக்­கப்­பட்டு செயற்­பட்டு வரு­கின்ற போதிலும், வடக்கில் அத்­த­கைய நிலைமை இருக்­க­வில்லை. கூடிப்­பே­சு­வ­தற்­கான இடம் முதல், இருந்து செயற்­ப­டு­வ­தற்­கான அலு­வ­லக இடம் வரையில் எல்­லா­வற்­றை­யுமே புதி­தாக உரு­வாக்க வேண்­டிய நிலை­யி­லேயே அவர்கள் மாகா­ண­ச­பையின் பொறுப்பை ஏற்­றி­ருந்­தார்கள்.

    இந்த நிலை­மையில் அர­சியல் அனு­பவம் மிகுந்த தலை­வர்­களைக் கொண்­டுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வட­மா­காண சபையை கடந்த ஒரு வருட காலத்தில் சரி­யான முறையில் வழி­ந­டத்­தி­யி­ருக்­கின்­றதா, அவர்­களை வழி நடத்­து­வ­தற்­கான புறக்­கட்­ட­மைப்­புக்­க­ளை­யா­வது உரு­வாக்­கி­யி­ருந்­ததா என்­பது கேள்விக்கு உரி­ய­தா­கி­யி­ருக்­கின்­றது. சட்­டத்­து­றையில் நீண்ட அனு­பவம் உள்ள ஒரு­வரை முத­ல­மைச்­ச­ராகக் கொண்டு வந்­ததன் மூலம் மாகாண சபை ஆட்சி முறையில்; உள்ள குறை­பா­டுகள், தமிழ் மக்­க­ளு­டைய தேவைகள் என்­ப­வற்­றையும், அர­சாங்கம் எந்த வகையில் மாகாண சபை முறை­மையை துஷ்­பி­ர­யோகம் செய்­கின்­றது, அதன் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள உரி­மை­கள்­கூட எந்த வகையில் மறுக்­கப்­ப­டு­கின்­றன என்­ப­தை­யெல்லாம் முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் சர்­வ­தேச அளவில் வெளிக் கொண்டு வருவார் என்ற எதிர்­பார்ப்பும் அதி­க­மா­கவே இருந்­தது. 

    ஆனால், வட­மா­காண சபை மிகவும் குறை­வாக உள்­ள­வற்றைக் கொண்டு செயற்­ப­டத்­தக்க வகையில் அதனை வழி­ந­டத்­து­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும். ஏனெனில் பிறந்து வளர்ந்து நடை பழ­கு­கின்ற ஒரு குழந்­தையின் நிலை­யி­லேயே வட­மா­காண சபை செயற்­பட ஆரம்­பித்­தி­ருந்­தது. அதனை வழி­ந­டத்தி, கூட்­ட­மைப்­பினர் நடை பழகச் செய்­தி­ருக்க வேண்டும். 

    அவர்கள் அத­னைச்­செய்யத் தவ­றி­விட்­டார்கள் என்­பது அந்த சபைக்­குள்­ளேயே ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. முதலாம் ஆண்டு நிறை­வ­டைந்து: இரண்டாம் ஆண்டின் தொடக்­கத்தில் நடை­பெற்ற முத­லா­வது அமர்வின் சபை நட­வ­டிக்­கை­களை இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா சபையில் பிர­சன்­ன­மாக இருந்து அவ­தா­னித்­தி­ருந்தார். அந்த நேரம் மாகாண அமைச்­சர்கள் தொடக்கம் முத­ல­மைச்சர் வரை­யி­லான சபையின் தலைமை மீது ஆளும் கட்சி உறுப்­பி­னர்­களே சர­மா­ரி­யாகத் தமது அதி­ருப்­தி­களைக் கொட்­டி­யி­ருந்­தனர். சீற்­றத்­தோடு கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். தமது ஆதங்­கங்கள், குறைகள் என்­ப­வற்றைக் கோபா­வே­சத்­துடன் வெளி­யிட்­டிருந்தார்கள்.

     முத­ல­மைச்­சரும், நான்கு அமைச்­சர்­களும், அவைத் தலை­வரும் தங்­க­ளு­டைய விருப்­பத்­திற்­க­மை­வா­கவே செயற்­ப­டு­கின்­றார்கள் என்று பல உறுப்­பி­னர்கள் வெளிப்­ப­டை­யா­கவே சாடி­யி­ருந்­தார்கள். அவர்­க­ளிடம் வெளிப்­படைத் தன்­மை­யில்லை. தங்­களைப் புறக்­க­ணித்துச் செயற்­ப­டு­கின்­றார்கள். அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில் என்ன பேசப்­ப­டு­கின்­றது, என்­னென்ன முடி­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­பது பற்றி தங்­க­ளுக்கு எது­வுமே தெரி­யா­தி­ருக்­கின்­றது என்று அவர்கள் நேர­டி­யா­கவே குற்றம் சுமத்­தி­யி­ருந்­தார்கள். அவர்­க­ளிடம் அமைச்­ச­ரவை என்ற ரீதியில் அவர்­க­ளிடம் வெளிப்­படைத் தன்மை இல்லை. அர­சாங்­கத்தைப் போன்று இவர்­களும் ஏதேச்­ச­தி­கா­ரத்­துடன் நடந்து கொள்­கின்­றார்­களோ என்று சந்­தே­க­மாக இருக்­கின்­றது என்றும் அவர்கள் தெரி­வித்­தி­ருந்­தார்கள்.

    மாகாண முத­ல­மைச்­ச­ரும்­சரி, அமைச்­சர்­க­ளும்­சரி, அந்தப் பத­வி­க­ளுக்குப் புதி­ய­வர்கள். அவர்கள் தங்­க­ளு­டைய அதி­கா­ரங்கள் என்ன, அவற்றை எவ்­வா­றெல்லாம் செயற்­ப­டுத்­தலாம் என்­பது குறித்து அலு­வ­லக நிர்­வாகக் கட்­ட­மைப்­புக்­களில் அனு­ப­வ­முள்ள அதி­கா­ரிகள் அவர்­க­ளுக்கு சிநே­க­பூர்­வ­மாக எடுத்துக் கூறி வழி­ந­டத்­தத்­தக்க சூழல் வட­மா­காண சபையில் இல்லை. ஏனென்றால், வட­மா­காண ஆளுனர் அர­சாங்­கத்தின் நேரடி நிறை­வேற்று அதி­கா­ரி­யாக இருந்து அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை முழு­மை­யாகச் செயற்­ப­டுத்­து­வதில் முழு­மூச்­சோடு செயற்­பட்டு வரு­கின்றார். 

    அவ­ரு­டைய செயற்­பா­டுகள் அர­சியல் மய­மா­னது.மாகாண சபையின் அதி­கா­ரி­களை முழு­மை­யாகத் தமது கட்­டுப்­பாட்­டிற்குள் வைத்து ஏற்­க­னவே செயற்­பட்டு வந்­தவர், மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட அர­சியல் தலைமை சபையின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னரும்கூட, தனது போக்கில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்வதற்கு அவர் தயாராக இல்லை. முடிந்த அளவில் அவர் தனது முன்னைய செயற்பாட்டு வழியில் செல்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்.

    இதன் காரணமாகவே மாகாண சபையின் பிரதம செயலாளருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் பதவி ரீதியாக அலுவலக ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டு, அது நீதிமன்றம் வரையில் சென்றிருந்தது. அந்த முரண்பாடு இன்னுமே களையப்படவில்லை. எனவே, இத்தகைய ஒரு சூழலில் முதலமைச்சரும் மாகாண அமைச்சர்களும், அவைத்தலைவரும் மிகவும் நிதானமாகவும் பொறுப்போடும் கவனமாகவும் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அமைச்சரவை என்ற ரீதியில் தங்களுக்குள் கூட்டுப் பொறுப்புடனும் சபையின் உறுப்பினர்களை ஒன்றிணைத்து மாகாண சபை என்ற வகையிலான கூட்டுப் பொறுப்புடனும் இணைந்து செயற்பட வேண்டியிருக்கின்றது. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டவர்களாக அதேநேரத்தில் மக்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் செயற்பட வேண்டிய கட்டாயத்தேவை இருக்கின்றது.

    இத்தகைய செயற்பாட்டு முறைமையை வளர்த்தெடுப்பதற்கு, தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் என்ற ரீதியில் கூட்டமைப்பினருக்கு கூடிய பொறுப்பு இருக்கின்றது. மாகாண சபையினரை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு தாங்கள் தங்களுடைய போக்கில் செயற்பட முடியாது. அதேநேரத்தில் கூட்டமைப்பினர் மாகாண சபையை வழிநடத்துவதற்கு எடுக்கின்ற நடவடிக்கைகளை முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ உறுப்பினர்களோ தமது சுதந்திரத்தில் தலையிடுகின்றார்கள் என்று கருதக் கூடாது. அவ்வாறு கருதத்தக்க வகையில் கூட்டமைப்பினரும் செயற்படக் கூடாது. அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டியதே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. இதனை உணர்ந்து அனைவரும் முரண்பாடுகளைக் களைந்து இணைந்து செயற்பட வேண்டும். அவ்­வாறு இனி­யா­வது செயற்­ப­டுவார்களா?

    -செல்வரட்ணம் சிறிதரன்-
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கூட்டமைப்பை வீழ்த்தும் முயற்சியும் கூட்டுப்பொறுப்பின் முக்கியமும் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top