
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கொழும்பு புதிய நகர மண்டபத்தில் தற்போது ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் தனது அறிவிப்பைத் வெளியிட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நடைபெறும் இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்தின, துமிந்த தசநாயக்க, பிரதி அமைச்சர் குணவர்த்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜயங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். விபரங்களுக்கு இணைந்திருங்கள்.
நாட்டு மக்கள் தனக்கு சந்தர்ப்பம் வழங்கினால் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் நடத்தும் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளர்.