கம்பிசிறையில் இருந்தவள்
சிறைக்கு வெளியே வந்தபோது கணவனை கொண்டு சென்றார்கள் சிறைக்கு இது எங்கள் நாட்டில் மட்டும் நடக்கும் கொடுமை. அந்த வேதனையில் அவள் எழுதும் கவிதை.
கம்பிச் சிறைக்குள் நீங்கள்
தாய் நாட்டிலும்
காலச் சிறைக்குள் நான்
வெளிநாட்டிலும்
அடைப்பட்டிருக்கிறோம்
உங்கள் மனச்சிறையில்
நானும்
எந்தன் கண்சிறையில்
நீங்களும் சிறைப்பட்டு
இருபது வருடங்கள்
கடந்து போயின
திருமணச் சிறையில் இருவரும்
ஒருமனச் சிறைகொண்டு
பதினைந்து ஆண்டுகள் பறந்து போயின
களங்கமற்ற காதற்சிறைக்குள்
நாமிருவரும்
கட்டுண்டு கிடக்கிறோம்
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
ஒன்றாவோம் நாங்கள்
அன்பெனும் பூஞ்சிறையில்
காத்திருக்கிறேன்....
உங்கள் வருகைக்காய்
கனவுச் சிறையில் இப்போது....
முகிலினி