ஐ.நா விசாரணைக்கு சாட்சிகளை அனுப்பும் முறைகள் -தாயகத்திலிருந்து தமிழில் - TK Copy ஐ.நா விசாரணைக்கு சாட்சிகளை அனுப்பும் முறைகள் -தாயகத்திலிருந்து தமிழில் - TK Copy

  • Latest News

    ஐ.நா விசாரணைக்கு சாட்சிகளை அனுப்பும் முறைகள் -தாயகத்திலிருந்து தமிழில்


    இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள்
    கவுன்ஸில் நடத்தும் விசாரணைகளில் சாட்சியமளிக்கின்றமை தொடர்பான மாதிரிப் படிவங்களையும் அது தொடர்பான வழிகாட்டல்களையும் குறிப்புக்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று யாழ்ப்பாணத்தில் அதன் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து வெளியிட்டது.

    இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணம் ஆகியோர் பங்குபற்றினர். இன்று வெளியிடப்பட்ட வழிகாட்டல் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் வருமாறு:-
    ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் நடாத்தப்படும் விசாரணையில் எப்படி சாட்சியமளிக்கலாம் என்பது தொடர்பிலான தெளிவை ஏற்படுத்துவதற்கு பின்வரும் தகவலை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம்.
    அ. எப்போது இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்கலாம்?
    மூன்று வகையான சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கலாம்.
    1. இறுதி யுத்தத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்கள்;-
    ஐ.நா விசாரணை உத்தியோகபூர்வமாக 2001 காலப் பகுதியின் பின்னரான விடயங்களே கவனத்தில் எடுக்கும். என்றாலும் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவும் எந்த சம்பவத்தைப் பற்றிய தகவலும் தமக்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் 1948க்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதில் தடையில்லை.
    2. இறுதி யுத்தத்திற்குப் பின்னரான சம்பவங்கள்;-
    ஐ நா விசாரணை உத்தியோகபூர்வமாக 2012 காலப் பகுதியின் முன்னரான விடயங்களே கவனத்தில் எடுக்கும் என்றாலும் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவும் எந்த சம்பவத்தைப் பற்றிய தகவலும் தமக்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்குத் தடையில்லை.
    3. இறுதி யுத்தத்தின் போதான சம்பவங்கள்:-
    . எத்தகைய சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கலாம்?: இனப் பிரச்சனை தொடர்பிலான எந்த வன்முறைச் சம்பவம் தொடர்பிலும் சாட்சியமளிக்கலாம். உதாரணமாக: கொலை, கடத்தல், காணாமல் போதல், காணாமல் போகச் செய்தல், பாலியல் வன்கொடுமை, காணி அபகரிப்பு, சித்திரவதைக்குட்படுத்தப்படல், அரசியல் கைதிகள், தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள்
    . உங்கள் சாட்சியம் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்: சாட்சியம் தருபவர் தொடர்பான விடயங்கள் (பெயர், வயது, முகவரி);
    சம்பவம் நடந்த இடம்:
    சம்பவம் நடந்த திகதி:
    சம்பவம் பற்றிய முழுமையான விபரிப்பு:
    சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதைப் பற்றி இயன்ற வரையில் முழுமையான விபரணம்: (உதாரணமாக ஷெல் தாக்குதலால் மரணமடைந்திருந்தால் எந்தத் திசையிலிருந்து அந்த ஷெல் தாக்குதல் நடந்தது -
    அந்தத் திசையில் யார் நிலை கொண்டிருந்தனர் போன்ற தகவல்கள், காணாமல் போனோர் தொடர்பில் – எந்த முகாமைச் சேர்ந்தவர்கள் கடத்திக் கொண்டு போனார்கள் போன்ற விவரங்கள்).
    . எந்த மொழியில் சாட்சியம் அளிக்கலாம்? சாட்சியங்கள் தமிழிலும் வழங்கப்படலாம். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை. சுயமாகத் தாயரித்து அனுப்பலாம். இதற்கென்றொரு படிவம் இல்லை. கடிதம் போல் கூட எழுதி அனுப்பலாம்.
    . உதவி தேவைப்படுவோர்:
    எமது கட்சி அலுவலகத்தை நாடலாம். தொடர்பு முகவரி: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இல 43, 3ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்.
    . சாட்சியத்தை எங்கு அனுப்புவது? மின்னஞ்சல் மூலமாக: oisl_submissions@ohchr.org என்ற முகவரிக்கோ அல்லது OISL, UNOG-OHCHR, 8-14 Rue de la Paix, CH-1211 Geneva 10, Switzerland என்ற தபால் முகவரிக்கோ அனுப்பிவைக்கலாம்.
    சாட்சியமளிப்பதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை தமிழ் பத்திரிகைகளில் பார்வையிட முடியும். அவ்வாறான ஒரு படிவத்தினை நீங்களாகவே தயாரிக்க முடியும் அல்லது கீழேயுள்ள இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள முடியும். அப்படிவங்களை பூர்த்தி செய்த பின்னர் மேலே கூறப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அல்லது தபால் முகவரிக்கு நீங்களாகவே அனுப்பி வைக்க முடியும். மேலதிக உதவி தேவைப்படுவோர் எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

    விளக்கவுரை தமிழ் மொழியில்

    மாதிரிப்படிவம் தமிழில் பெற கிளிக் செய்யவும்

    மேலும் விபரங்களுக்கு தொடர்பு விவரம்:-
    தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,
    இல 43, 3ம் குறுக்குத் தெரு,
    யாழ்ப்பாணம் தொலைபேசி எண்: -
    0212223739, 0773024316, 0777301021
    மின்னஞ்சல்: tnpfparty@gmail.com
    . சாட்சியமளிப்பதற்கான இறுதித் திகதி: 30 ஒக்ரோபர் 2014 தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற இடம்பெற்றுவரும் அநீதிகளை சம்பவங்களை விசாரணைக் குழுவுக்கு முழுமையாக சமர்ப்பிப்பதன் மூலம் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் நீதி பெற்றுக் கொள்வதற்கு கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை அனைத்து தமிழ் மக்களும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கோருகின்றோம்.
    கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தலைவர்)
    செ.கஜேந்திரன் (பொதுச் செயலாளர்)
    ஒக்ரோபர் 30ஆம் திகதி வரையில் சாட்சியாளர்கள் ஐ.நா விசாரணைக்குழுவிற்கான சாட்சியங்களை கையளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஐ.நா விசாரணைக்கு சாட்சிகளை அனுப்பும் முறைகள் -தாயகத்திலிருந்து தமிழில் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top