''இந்தியா'' என்பதே கடந்த சில வாரங்களாக
இலங்கையில் பேசப்பட்ட, கலந்துரையாடப்பட்ட மற்றும் அதிகமானோரால் உச்சரிக்கப்பட்ட வார்த்தையாக இருந்தது.
அந்தளவுக்கு திடீரென இந்தியா தொடர்பில் இலங்கையில் அலசப்பட்டது. பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர் சுப்ரமணியம் சுவாமியின் இலங்கை விஜயம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் என்பன தற்போதைய இந்த நிலைமைக்கு அடித்தளத்தை இட்டன.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயமானது நாட்டின் அரசியல் சூழலில் பாரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. ''தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் செய்து இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தியது சாதாரண விடயம்.
அதனை ஏன் பாரிய விவகாரமாக பார்க்கவேண்டும். பிரதமர் மோடி பதவியேற்றவுடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலை நடத்தியிருந்தார். இந்நிலையில் கூட்டமைப்பினருடனான இந்திய தரப்பின் சந்திப்பை மட்டும் ஏன் பெரிதுபடுத்தவேண்டும்'' இவ்வாறு முக்கிய தூதரக அதிகாரி ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர்களிடம் கேள்வியெழுப்பினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய தரப்பை சந்தித்து பேச்சு நடத்தியமையானது சாதாரண விடயம்தான். ஆனால் இதுவொரு சலசலப்பான விடயமாக உருவெடுத்து முக்கிய வெளிநாட்டு தூதரக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுக்கூறுமளவுக்கு இந்த சந்திப்பு தற்போது முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.
அத்துடன் கூட்டமைப்பின் இந்திய விஜயத்துக்கு ஆளும் தரப்பிலிருந்து விசனங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கு சென்றாலும் வேலையில்லை. எங்களிடம் வந்தாலே தீர்வு கிடை க்கும் என்பதே ஆளும் கூட்டணியின் கருத்தாகவுள்ளது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையிலும் இந்திய பிரதமரை சந்தித்து எமது பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தோம் என்று கூட்டமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூட்டமைப்பின் இந்திய விஜயமானது இவ்வாரம் நாட்டின் அரசியல் சூழலில் பாரிய தலைப்பு பொருளாக மாறியிருந்தது என்பதே யதார்த்தமாகும். இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் பிரதமர் மோடி பதவிக்கு வந்த பின்னர் இந்திய மத்திய அரசாங்கமானது இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான போக்கை கடைப்பிடித்தது.
குறிப்பாக இலங்கை விவகாரத்தில் சர்வதேச தலையீடுகள் இருக்கக்கூடாது என்றும் தீர்வு விடயத்தில் இந்தியா அழுத்தங்களை வழங்க முடியாது என்ற தொனியிலுமே இந்திய தரப்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுவந்தன. இது நாட்டின் சில தரப்புக்கள் மத்தியில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் ஒருவித வியப்பை ஏற்படுத்தியிருந்தது என்றுகூட கூறலாம்.
இந்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர் சுப்ரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசாங்கமானது இலங்கை அரசாங்கத்துடன் முன்னெப்போதும் இல்லாத நெருக்கமான போக்கை கடைப்பிடிக்கின்றது என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துவது போன்று கருத்துக்களை வெளியிட்டார்.
உதாரணமாக ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கு சென்று மோடியை சந்திக்கவேண்டுமானால் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துவிட்டே செல்லவேண்டும் என்று அவர் கூறியதாக ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய சுவாமி உணர்ச்சி பூர்வமாக செயற்படுவதை விடவும் தந்திரோபாயமாக செயற்பட்டால் மட்டுமே தமிழர்கள் அதிகாரப் பகிர்வை நோக்கி பயணிக்க முடியும்.
தேர்தல் வெற்றியின் பங்குதாரர்களாக தமிழ் மக்கள் செயற்பட வேண்டுமே தவிர தனி சமூகமாக செயற்படக் கூடாது என்றும் கூறியிருந்தார். அத்துடன் இலங்கையில் இனப்பிரச்சினையொன்று இல்லை. யுத்தம் முடிவிற்கு வந்தவுடன் இலங்கையில் பிரச்சினைகளுக்கான வழிகள் மூடப்பட்டு விட்டன. இன்று இலங்கையில் மொழி ரீதியான பிரச்சினைகளே உள்ளன. சிங்கள, தமிழ் என தனித்தனியாக செயற்படுகின்றமையே பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது.
அதே போல் இலங்கையின் உள்ளக விடயங்களில் இந்தியா தலையிடவிரும்பவில்லை. அதற்கான உரிமைகளும் எமக்கில்லை. எனினும் வெளிப்படையான விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்திய மத்திய அரசாங்கத்தின் தீர்மானம் எடுப்பவர்கள் மட்டத்தில் இருக்கும் ஒருவரின் தோரணையில் சுப்ரமணியம் சுவாமியின் கருத்துக்கள் அமைந்திருந்தன என்பதே பலரதும் கருத்தாக அமைந்திருந்தது. இந்நிலையில்தான் சுப்ரமணியம் சுவாமி இலங்கையில் வைத்துக்கூறிய கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட ரீதியில் அவர் இலங்கையில் இருக்கும்போதே கூட்டமைப்பினருக்கு இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த இடத்தில் இதன் பின்னணி என்னவாக இருக்கும் ஏன் இவ்வாறு நடந்தது என்பதனை தற்போது நாம் ஆராய்வதைவிட சந்திப்பின் தாக்கங்கள் மற்றும் இந்தியாவின் போக்கில் திடீரென ஏற்பட்ட மாற்றம் என்பன குறித்தும் ஆராயவே விளைகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜையே சந்தித்து உரையாடியிருந்தனர். அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சுமார் ஒன்றரை மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் ஊடாக இலங்கையின் தேசிய பிரச்சினையின் அடிப்படைத்தன்மையை மோடி ஆழமாக அறிந்துகொள்ள முயற்சித்துள்ளார் என்பது தெளிவாகின்றது. இதன்மூலம் மோடியின் பதவியேற்பிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்று அணுகுமுறையை வெளியுறவுத் துறையில் முன்னெடுத்துவந்த மோடி அரசாங்கம் திடீரென சற்று மாறுபட்டபோக்கை கடைப்பிடிக்கின்ற தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த இந்திய பிரதமர் மோடி, இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் மக்களின் கௌரவம், சம உரிமை, சுயமரியாதை, நீதி என்பனவற்றை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவேண்டும் இலங்கையின் அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்புடன் அரசியல் தீர்வைக்காண முன்வரவேண்டும்.
இந்தியாவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அது மட்டுமன்றி 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைவிட கூடுதலான அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய பிரதமருடனான சந்திப்பையடுத்து நாடு திரும்பியுள்ள கூட்டமைப்பினர் இந்திய தரப்புக்களுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதற்கு முன்னரும் இந்திய விஜயங்களை மேற்கொண்ட பின்னர் கூட்டமைப்பினர் இவ்வாறு '' திருப்திகரமாக '' அமைந்தது என்ற வார்த்தையை பல தடவைகள் பிரயோகித்துள்ளனர்.
ஆனால் இம்முறை அவர்களின் கூற்றில் நம்பிக்கை வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திடீர் இந்திய விஜயமானது அரசாங்க தரப்பை விசனமடையச் செய்துள்ளது என்றே குறிப்பிடவேண்டியுள்ளது. எவ்வாறெனினும் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது கூட்டமைப்பினர் இலங்கைக்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு கோரியதாகவும் எனினும் அதனை மோடி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கையின் நிலைமையை ஆராய தூதுக்குழு ஒன்றை அனுப்புமாறு கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையையும் மோடி தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு விடயங்களும் அரசாங்கத்தை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்று கூறலாம்.
எவ்வாறெனினும் கூட்டமைப்பின் இந்திய விஜயம் ஆளும் கூட்டணியை விசனமடைய வைத்துள்ளது என்பதற்கு அமைச்சர்கள் கூறிவருகின்ற விடயங்களே சான்று பகர்கின்றன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு விஜயம் செய்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பொய்யான முறைப்பாடுகளை செய்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஆச்சரியமடையவில்லை.
காரணம் வரலாறு முழுவதும் கூட்டமைப்பினர் இவ்வாறே செயற்பட்டுவந்துள்ளனர் என்று கடும் விசனத்தை வெளியிட்டிருந்தார். இலங்கையில் சட்டங்களை நிறைவேற்றுவது இலங்கை பாராளுமன்றம் என்பதனை கூட்டமைப்பு தெரிந்துகொள்ளவேண்டும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவுடன் கூட்டமைப்பு இணைந்து செயற்படவேண்டும் என்பதே இந்தியாவினதும் விருப்பமாகும்.
எனினும் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு இன்னும் வரவில்லை. தற்போது இந்தியாவுக்கு சென்று கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மட்டுமன்றி பல அமைச்சர்களும் கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்து விசனம் தெரிவித்திருந்தனர்.
அதாவது, கூட்டமைப்பினர் எங்கு சென்றாலும் தீர்வு தேவையாயின் எம்மிடமே வரவேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகவுள்ளது. காரணம் அந்தளவுக்கு இம்முறை கூட்டமைப்பின் இந்திய விஜயம் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துவிட்டது. கூட்டமைப்பினருடன் இந்தியா சென்று நாடு திரும்பிய இலங்கைக்கான இந்திய தூதுவர் வை. கே. சின்ஹா கொழும்பில் வைபவம் ஒன்றில் உரையாற்றும்போது சில முக்கியமான விடயங்களை முன்வைத்தார்.
அதாவது, அரசாங்கம் யுத்தத்தை வென்றுள்ளது. இந்நிலையில் யுத்தத்தின் பின்னரான நிலையில் சமாதானத்தை அரசாங்கம் வெற்றிகொள்ளவேண்டியுள்ளது. இது முக்கியமானதாகும். அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான முறையில் செயற்பட்டு தேசிய பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்று கூறியிருந்தார்.
அத்துடன் இவ்வருட இறுதியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கின்றோம். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானதும் விசேடமானதுமாகும். இலங்கையில் என்ன நடந்தாலும் அது இந்தியாவில் தாக்கத்தைக் கொண்டுவரும் என்றும் இந்திய தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் இந்திய தரப்பும் இலங்கை தரப்பும் வலியுறுத்துவதைப்போன்று இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கின்ற உறவு வலுவானது, நெருக்கமானது, விசேடமானது, என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். பிராந்திய வல்லமை படைத்த நாடு என்ற வகையில் இந்தியா இலங்கைக்கு முக்கியமான நாடாகும். மறுபுறம் மிக அருகில் இருக்கின்ற கேந்திர முக்கியத்துவ நாடாக இலங்கை இருக்கின்றமை இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும்.
எனவே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவானது மற்றும் விசேடமானது என்பது தர்க்கத்துக்கு உட்படாமல் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அந்தவகையில் பிராந்தியத்தில் வேறு நாடுகளில் இல்லாத அக்கறை இலங்கை மீது இந்தியாவுக்கு இருக்கலாம். இலங்கையில் என்ன நடந்தாலும் அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய பிரதிநிதி கூறுவதிலிருந்தே இலங்கை மீதான இந்தியாவின் அக்கறை எவ்வாறு அமையும் என்பது தெளிவாகின்றது.
ஆனால் அந்த அக்கறையானது இலங்கையில் அரசியல் தீர்வு என்ற தேவையுடன் இருக்கின்ற தமிழ் மக்களின் தீர்வு செயற்பாட்டில் ஆரோக் கியமற்ற வகையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும். இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதில் காணப்படுகின்ற தடைகளும் சிக்கல்களும் காலத்துக்கு காலம் வேறுபட்டு வருகின்றன.
ஆனால் எந்தவொரு வழியிலும் தீர்வை அடைய முடியாத துரதிர்ஷ்டவசமான நிலையே தமிழ் மக்களுக்கு நீடித்துவருகின்றது. தடைகளும் சிக்கல்களும் காலத்துக்கு காலம் மாறுபட்டு வந்தாலும் தீர்வு கிடைக்காது என்பது மட்டும் நிலையாகவே இருந்துவருகின்றது.
ஒரு கட்டத்தில் சமஷ்டி தீர்வுக் கட்டமைப்பு குறித்து பேசப்பட்டுவந்த நிலையில் இன்று தீர்வு விவகாரத்தில் அடிப்படை விடயமாக உள்ள அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாக பெற்றுக்கொள்வதில் பாரிய தடைகளும் சிக்கல்களும் காணப்படுகின்றன.
அதனால்தான் தீர்வைப் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கப்படும் தடைகள் காலத்துக்கு காலம் மாறிக்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. சுதந்திரத்துக்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ்பேசும் மக்களுக்கான தீர்வு விவகாரம் தொடர்பில் பலதரப்பட்ட முயற்சிகள் இடம்பெற்றுவிட்டன. பேச்சுவார்த்தைகள் வட்டமேசை மாநாடுகள் அனைத்துக் கட்சிக் கலந்துரையாடல்கள் என அவற்றை குறிப்பிடலாம்.
ஆரம்ப நிலையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் மேற் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் திம்பு பேச்சுவார்த்தை முதல் இறுதியாக இடம்பெற்ற ஒஸ்லோ பேச்சுவார்த்தை என தீர்வை அடைவதற்கான முயற்சிகள் பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இறுதியில் தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு அல்லது அந்த மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறை வேற்றக்கூடிய தீர்வுத்திட்டங்கள் எதனையும் அடைய முடியாமல் போனது.
இந்நிலையிலேயே தமிழ் மக்களின் தீர்வு செயற்பாட்டில் இந்தியாவின் அணுகுமுறை தொடர் பாக தீவிரமாக பேசப்பட்டுவருகின்றது. தற்போது '' தீர்வுக்கான இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கு'' என்ற பெயரில் பாராளுமன்ற தெரிவுக்குழு உருவாக் கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயத்தில் கூட இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
அதாவது அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி அதில் ஏற்படுகின்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு செல்வது குறித்து ஆராய முடியும் என்று கூட்டமைப்பு கூறுகின்றது. இந்நிலையில் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்ற சமிக்ஞையை கூட இந்தியா வெளியிடாமல் உள்ளது.
எனினும் இந்தியா ஆரோக்கிய மான பங்களிப்பை செலுத்தி தீர்வைப் பெற்றுத்தரும் என்பதில் தமிழ் பேசும் மக்கள் இன்னும் நம்பிக்கையிலேயே உள் ளனர். ஆனால் அவ்வப்போது இடம்பெறுகின்ற நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படுகின்ற காய் நகர்த்தல்களும் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்குமா என்ற விடயத்தில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் பலரையும் நம்பி ஏமாற்றமடைந்தனர். குறிப்பாக இந்தியாவின் தலையீட்டுடன் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
எனவே நாட்டின் சகல தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான மற்றும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலா ஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வாறான தீர்வுத்திட்டம் ஒன்றை பெற்றுக்கொள்ள முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். இதற்கான இராஜதந்திர செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
மாறாக தீர்வை அடைவதற்கான முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போடும் வகையில் பிராந்திய அரசியல் நலனுக்கான காய் நகர்த்தல் வந்தால் அது தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றமான நிலைக்கே கொண்டு செல்லும் என்பதே யதார்த்தமாகும்.