மஹிந்த அரசை கலங்கடிக்க நாளை வெளியாகிறது ஐ.நா வின் வாய்மூல அறிக்கை (இணைப்பு) - TK Copy மஹிந்த அரசை கலங்கடிக்க நாளை வெளியாகிறது ஐ.நா வின் வாய்மூல அறிக்கை (இணைப்பு) - TK Copy

  • Latest News

    மஹிந்த அரசை கலங்கடிக்க நாளை வெளியாகிறது ஐ.நா வின் வாய்மூல அறிக்கை (இணைப்பு)


    மனித உரிமை பேர­வையில் நாளை புதன்­கி­ழமை வெளி­யி­டப்­ப­ட­வுள்ள
    இலங்கை மனித உரிமை விவ­காரம் குறித்த விசா­ர­ணைகள் தொடர்­பான வாய்­மூல அறிக்­கையின் முழு­மை­யான விபரம் இங்கே தரப்­ப­டு­கின்­றது,
    ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் சார்­பாக நான் இந்த வாய்­மூல அறிக்­கையை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கின்றேன். ‘இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஊக்­கு­வித்­தலும் பொறுப்­புக்­கூ­றலும்’ என்ற தலைப்பில் மனித உரிமை பேர­வையில் மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையின் அமை­வாக முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ரணை குறித்தே இந்த வாய்­மூல அறிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.
    கண்­கா­ணிப்­பது அவ­சியம்
    1.  இந்தப் பிரே­ர­ணை­யா­னது இலங்கை மனித உரிமை நிலை­மை­களை கண்­கா­ணிக்க வேண்­டு­மென்றும் அதனை தொட­ர­வேண்­டு­மென்றும் ஐ.நா.மனித உரிமை அலு­வ­ல­கத்­திற்கு கூறு­கி­றது. அத்­துடன் இரு­த­ரப்­பாலும் யுத்­தத்தின் போது மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கூறப்­படும் பார­தூ­ர­மான மீறல்கள் மற்றும் மனித உரிமை துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக விசா­ரிக்­க­வேண்­டு­மென்றும் இந்தப் பிரே­ரணை கூறு­கின்­றது. 

    2. நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவ­னத்­திற்­குட்­ப­டுத்­திய காலப்­ப­கு­திக்கே இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் இது வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இதற்­காக விசேட ஆணை­யா­ளர்­களின் உத­வியும் பெறப்­படும். அத்­துடன் 27 ஆவது அமர்வில் வாய்­மூல அறிக்­கையும் 28ஆவது அமர்வில் விசா­ரணை குறித்த முழு­மை­யான அறிக்­கையை சமர்ப்­பிப்­ப­தற்கும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
    பக்­கச்­சார்­பற்ற விசா­ரணை
    3. ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் தற்­போது பரந்துபட்ட விசா­ர­ணையை முன்­னெ­டுக்க அர்ப்­ப­ணிப்­பு­மிக்க விசா­ர­ணைக்­கு­ழு­வொன்றை நிறு­வி­யுள்­ளது. இதற்­கான விதி­மு­றைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. எவ்­வாறு சாட்­சி­யங்­களை சமர்ப்­பிக்­க­வேண்­டு­மெ­னவும் தெளிவு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முதல் நிலை­யான தக­வல்­களைப் பெறு­வ­தற்கும் சுயா­தீன மற்றும் பக்கச்சார்­பற்ற விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் விசா­ர­ணைக்­கு­ழு­வா­னது முன்­னு­ரிமை அளிக்­கி­றது. இது மிகவும் சிக்­க­லுக்­கு­ரிய செயற்­பாடு. பல செயற்­பா­டு­களை பல­ சம்­ப­வங்­க­ளையும் வழங்­கப்­பட்­டுள்ள காலத்­திற்குள் விசா­ரிக்­க­வேண்­டி­யுள்­ளது.
    இர­க­சி­யத்­தன்மை அவ­சியம்
    4. மனித உரிமை அலு­வ­ல­க­மா­னது வெளிப்­ப­டை­யற்­றது என்றும் விசா­ர­ணைக்­கு­ழுவின் தக­வல்­க­ளையும் மூலங்­க­ளையும் வழங்­கு­வ­தில்­லை­யென்றும் இலங்கை ஊட­கங்­களில் தொடர்ச்­சி­யாக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டுவரு­கின்­றன. ஆனால் இந்த இரக­சியத் தன்­மை­யா­னது விசா­ர­ணைக்­கான தக­வல்­களை வழங்­கு­ப­வர்­க­ளையும் விசா­ர­ணையின் ஒருங்­கி­ணைப்­பையும் பேணு­வ­தற்கு மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.
    5. மே மாதம் 30 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் ஜெனிவா­வி­லுள்ள இலங்­கை­யின் நிரந்­தர வதி­விட பிர­தி­நி­தியை சந்­தித்து விசா­ர­ணைக்­காக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள செயற்­பா­டு­களை விப­ரித்­த­துடன் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறும் கோரினர்.
    பீரி­ஸுடன் சந்­திப்பு
    ஜூன்­மாதம் 5 ஆம் திகதி முன்னாள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை விசா­ர­ணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் தொடர்பில் இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல். பீரி­ஸுக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்தார். அர­சாங்கம் விசா­ர­ணைக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்கும் என அவர் நம்­பு­வ­தா­கவும் அந்த கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் ஜூன் 10 ஆம் திகதி அறிக்­கை­யொன்றை வெளியிட்­டி­ருந்த ஜெனி­வாவின் வதி­வி­டப்­பி­ர­தி­நிதி இலங்­கையின் குறித்த பிரே­ரணை நிரா­க­ரிப்­ப­தா­கவும் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தில்­லை­யென்றும் திட்­ட­வட்­ட­மாக மனித உரிமை பேர­வைக்கு கூறி­யி­ருந்தார்.
    பாரா­ளு­மன்ற பிரே­ரணை
    6. ஜூன் 18 ஆம் திகதி இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் விசா­ர­ணையை எதிர்த்து பிரே­ரணை ஒன்றும் நிறை­வேற்­றப்­பட்­டது. இது இலங்­கையின் இறை­மையை மீறு­வ­தாக கூறியே பாரா­ளு­மன்­றத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. எவ்­வா­றெ­னினும் ஒரு எதிர்க்­கட்­சி­யா­னது இதற்கு எதி­ராக வாக்­க­ளித்­த­துடன் சிலர் வாக்­க­ளிப்பில் கலந்து கொள்­ளாமல் இருந்து விட்­டனர்.
    வட மாகாண சபை பிரே­ரணை
    வட­மா­கா­ண­ச­பையின் மனித உரிமை பேர­வையின் விசா­ர­ணைக்­கான பிரே­ர­ணையை ஆத­ரித்து மூன்று பிரே­ர­ணைகள் ஏப்ரல் மாதம் 28 ஆம்­தி­கதி நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தன.
    பீரிஸ் நிரா­க­ரிப்பு
    7. ஜூன் மாதம் 5 ஆம் திகதி முன்னாள் மனித உரிமைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் கடி­தத்­திற்கு ஜூலை மாதம் 5 ஆம் திகதி பதி­ல­ளித்­தி­ருந்த இலங்கை வெளிவி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கை அர­சாங்கம் இலங்கை தொடர்­பான பிரேரணையை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தா­கவும் இது தொடர்­பான எந்த செயற்­பாட்­டிலும் இலங்கை ஈடு­ப­டாது என்றும் திட்­ட­வட்­ட­மாக கூறி­யி­ருந்தார்.
    எவ்­வாறெனினும் எமது அலு­வ­ல­கத்­து­ட­னான தொடர்­புகள் தொடர்ந்தும் பேணப்­படும் என்று கூறி­யி­ருந்தார். விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு இணைப்­பாளர் ஒரு­வரை மனித உரிமை அலு­வ­லகம் நிய­மித்­த­தையும் ஜெனி­வா­வி­லுள்ள இலங்­கையின் வதி­விட அலு­வ­லகம் நிரா­க­ரித்­தி­ருந்­தது. அத்­துடன் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை அலு­வ­லக விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு இலங்கை வர அனு­மதி வழங்­க­மாட்­டாது என்று இலங்கை ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவும் கூறி­யி­ருந்தார்.
    நிபு­ணர்கள் நிய­மனம்
    8. எவ்­வா­றெ­னினும் பிரே­ர­ணையின் விதி­மு­றைக­ளுக்கு அமை­வாக முன்னாள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை பின்­லாந்தின் முன்னாள் ஜனா­தி­பதி மாட்டின் அத்­தி­சாரி, நியூ­சி­லாந்தின் முன்னாள் ஆளுநர் நாயகம் சில்­வியா காட்ரைட் மற்றும் பாகிஸ்­தானின் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜாங்கீர் ஆகிய நிபு­ணர்­களை விசா­ர­ணைக்கு ஆலோ­சனை வழங்க நிய­மித்­தி­ருந்தார்.
    விசேட ஆணை­யா­ளர்­களும் விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு பல வழி­களில் உதவி வரு­கின்­றனர். அவர்­களின் ஒருங்­கி­ணைப்பு மற்றும் சுயா­தீ­னத்­தினைப் பாது­காத்து இந்த செயற்­பாட்­டினை மேற்­கொண்­டுள்­ளனர்.
    விசேட ஆணை­யா­ளர்கள் உதவி
    9. இந்த நிபு­ணர்கள் உத­வி­யமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணை­யாளர் நன்றி தெரி­விக்­கின்றார். அவர்கள் விசா­ர­ணை­களை நடத்­த­மாட்­டார்கள். ஆனால் விசா­ர­ணைக்கு நிபு­ணத்­துவ ஆலோ­ச­னை­க­ளையும் வழி­காட்­டல்க­ளையும் விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு வழங்­கு­வார்கள். அது­மட்­டு­மன்றி விசா­ர­ணையை சுயா­தீ­ன­மாக உறு­திப்­ப­டுத்­து­வ­தையும் செய்­வார்கள்.
    நிபு­ணர்கள் சந்­திப்பு
    செப். 6 மற்றும் 7 ஆம் திக­தி­களில் நிபுணர் குழு ஐ.நா. மனித உரிமை விசா­ர­ணைக்­கு­ழு­வுடன் ஜெனி­வாவில் சந்­திப்­புக்­களை நடத்­தி­ய­துடன் விசா­ரணை முறைமை மற்றும் முன்­னேற்­றங்கள் குறித்து மீளாய்வு செய்­தது. அது­மட்­டு­மல்ல ஐ.நா. விசா­ர­ணைக்­கு­ழு­வா­னது விசேட ஆணை­யா­ளர்­க­ளு­டனும் சந்­திப்­புக்­களை நடத்­தி­யி­ருந்­தது.
    அர­சாங்­கத்­துக்கு பதில்
    10. இந்த இடத்தில் இலங்கை அர­சாங்கம் நேர­டி­யாக முன்­வைத்­துள்ள இரண்டு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பதி­ல­ளிப்­ப­தற்கு மனித உரிமைகள் ஆணை­யாளர் முன்­வந்­துள்ளார். முத­லா­வது குற்­றச்­சாட்­டா­னது இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையில் இராண்­டா­வது பந்தி சுயா­தீ­ன­மான உள்­ளக விசா­ர­ணையைக் கோரு­வ­தா­கவும், 10ஆவது பந்­தி­யா­னது சர்­வ­தேச விசா­ர­ணையைக் கோரு­வ­தா­கவும் எனவே இது முரண்­பா­டா­னது என்றும் தர்க்­கத்தை முன்­வைக்­கின்­றனர். இந்த இடத்தில் எந்­த­வி­த­மான முரண்­பா­டு­களும் இல்லை என்­பதை திட்­ட­வட்­ட­மாக கூறு­கின்றோம்.
    நிறை­வேற்­றப்­பட்­டுள்ள மனித உரிமை பேர­வையில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு இலங்­கை­யா­னது மீறல்கள் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்கு சர்­வ­தேச கடப்­பாட்டைக் கொண்­டுள்­ளது. எவ்­வா­றெ­னினும் இலங்கை அர­சாங்கம் உள்­ளக, நம்­ப­க­மான செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கா­ததை 25ஆவது அமர்வில் சுட்­டிக்­காட்­டு­வ­துடன் அது அத­னு­டைய விசா­ர­ணையை கோரி நிற்­கின்­றது.
    இரண்­டா­வது குற்­றச்­சாட்டு
    11. இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இரண்­டா­வது தர்க்­க­மா­னது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஐ.நா. விசா­ர­ணைக்­குழு விசா­ரணை நடத்­தப்­போ­கின்­றது என்­ப­தாகும். இது மிக முக்­கி­ய­மான கார­ண­மாகும். ஏனெனில் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வா­னது 2002 ஆம் ஆண்­டுக்கு முன்­ன­தான சம்­ப­வங்கள் தொடர்­பா­கவும் 2009 ஆம் ஆண்­டுக்குப் பின்­ன­ரான சம்­பவம் குறித்தும் விசா­ரணை செய்­தி­ருந்­தது. யுத்த முடிவின் பின்னர் சந்­தேக நபர்கள் தொடர்ந்து தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த விவ­காரம் காணாமல் போதல் என்­பன இதில் உள்­ள­டங்­கு­கின்­றன.
    என­வேதான் முன்னாள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை 2009 ஆம் ஆண்டு வரை மட்­டு­மன்றி நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப்­ப­குதி வரை கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்­டு­மென விளக்­க­ம­ளித்­தி­ருந்தார்.
    ஆணை­யாளர் கவலை
    12. எவ்­வா­றெ­னினும் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­தமை தொடர்­பிலும் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­காமை தொடர்­பிலும் மனித உரிமைகள் ஆணை­யாளர் ஆழ­மாக கவ­லை­ய­டை­கிறார். அது­மட்­டு­மன்றி இலங்கை அர­சாங்கம் தன்னை இலங்­கைக்கு வரு­மாறு அழைப்பு விடுத்­துள்­ள­தா­கவும் இம்­மாத இறு­தியில் இலங்­கையின் வெளிவி­வ­கார அமைச்­சரை நியூ­யோர்க்கில் சந்­திக்க எதிர்­பார்த்­துள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.
    அரு­மை­யான சந்­தர்ப்பம்
    13. யுத்­தத்தின் போது இரண்டு தரப்­புக்­க­ளாலும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக உண்­மையை ஆராய்­வ­தற்கு இது ஒரு தனித்­து­வ­மான வர­லாற்று சந்­தர்ப்­ப­மாகும். இது இலங்கை மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றும். குறிப்­பாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட இரண்டு தரப்பு மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் நிறை­வேற்றும் இந்த செயற்­பா­டா­னது புலிகள் மற்றும் இரா­ணு­வக்­கு­ழுக்­களின் குற்­றங்­க­ளையும் அவர்கள் சிறு­வர்­களை போரா­ளி­க­ளாக இணைத்­துக்­கொண்­ட­மையையும், சிவி­லி­யன்கள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­மையும் ஆராயும். விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­காமல் இருப்­ப­தா­னது அர­சாங்­கத்தின் பெறு­ம­தி­யான தக­வல்­களை கவ­னத்தில் கொள்­வ­தற்கு முடி­யா­மலபோவதற்கு கார­ண­மா­கி­விடும்.
    உண்­மையை கண்­ட­றிய உதவும்
    14. அது­மட்­டு­மல்ல இது ஆழ­மான உண்­மையை கண்­ட­றியும் செயற்­பாட்­டுக்கும் ஒரு சந்­தர்ப்­பதை வழங்­கு­வ­துடன் இது இலங்­கையின் நிரந்­தர சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்கு பாரிய பங்­க­ளிப்பை வழங்கும். மே மாதம் 18 ஆம் திக­தி­யி­லி­ருந்து 26 ஆம் திகதி வரை ஐக்­கிய நாடுகள் விசேட அறிக்­கை­யாளர் ஒருவர் இலங்­கைக்கு விஜயம் செய்து அவர் குடி­பெயர் தொழி­லா­ளர்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.
    15. மேலும் 9 விசேட அறிக்­கை­யா­ளர்கள் இலங்­கைக்கு விஜயம் செய்­வ­தற்கு கோரி­யுள்­ளனர். அவை இன்னும் நிலு­வையில் உள்­ளன. சிறு­பான்மை விவ­காரம், ஒன்­று­கூ­டு­வ­தற்­கான சுதந்­திரம், கருத்து வெளியி­டு­வ­தற்­கான சுதந்­திரம், காணா­மல்­போ­தல்கள், மனித உரிமை காப்­பா­ளர்கள், சுயா­தீன நீதித்­துறை மற்றும் சட்­டத்­த­ர­ணிகள், பெண்­க­ளுக்கு எதி­ரான அநீ­திகள், உண்மை, நீதி உள்­ளிட்ட விட­யங்­களை ஆராய விசேட அறிக்­கை­யா­ளர்களே இலங்கை வரு­வ­தற்கு கோரி­யுள்­ளனர்.
    அழை­யுங்கள்
    16. நிர்ப்­பந்­தத்தின் பேரில் காணாமல் போனோர் மற்றும் சிறு­பான்மை விவ­கா­ரங்கள் குறித்த விசேட ஆணை­யா­ளர்­களே இலங்­கைக்கு அழைக்­கு­மாறு ஆணை­யாளர் வலி­யு­றுத்­து­கிறார். அர­சாங்கம் இதனை பரி­சீ­லிப்­ப­தா­கவும் இலங்­கையில் காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை முடிந்­ததும் விசேட ஆணை­யா­ளர்­க­ளை­ அழைப்பது குறித்து ஆராய்­வ­தா­கவும் தெரி­வித்­தது.
    17. இலங்­கையிய்ன் ஐந்­தா­வது மீளாய்வு அறிக்கை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் பரி­சீ­லிக்­கப்­படும்.
    ஆணை­யாளர் அதிர்ச்சி
    18. இலங்­கையில் தற்­போது சிவில் சமூக குழுக்கள் மனித உரிமை காப்­பா­ளர்கள், மற்றும் ஐ.நா.விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் குழுக்கள் மீதான அச்­சு­றுத்தல் பிர­சா­ரங்கள் , சித்­தி­ர­வ­தைகள் மற்றும் பழி­வாங்­கல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அதிர்ச்சி அடைந்­துள்ளார். ஐ.நா. மனித உரிமை விசா­ர­ணைக்கு சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இலங்­கையின் ஊடகத்துறை அமைச்சர் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார். அது அர­சியல் அமைப்­பிற்கு எதி­ராக இருந்தால் இவ்­வாறு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அவர் கூறி­யி­ருந்தார். இவ்­வ­ருடம் மார்ச் மாதம் ஜெனி­வாவில் நடை­பெற்ற மனித உரிமை பேர­வையின் அமர்வில் கலந்து கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மற்றும் சிவில் சமூக உறுப்­பினர்களை கைதுசெய்­யு­மாறு பல அர­சியல் கட்­சிகள், குழுக்கள், கோரிக்கை விடுத்­தி­ருந்­தன.
    19. இலங்­கையில் பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான குரல் கொடுப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக வெறுக்கத் தக்க கூற்­றுக்கள் வெளியி­டப்­பட்­டன.
    சந்­திப்பு கலைப்பு
    20. ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இரா­ஜ­தந்­திர சமூ­கத்­துடன் சிவில் அமைப்­புகள் மேற்­கொண்ட சந்­திப்பு பிக்­கு­மார்கள் உள்­ளிட்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளினால் கலைக்­கப்­பட்­டது. அவர்கள் மோச­மான வார்த்­தைப்­பி­ர­யோ­கங்­களால் விமர்சிக்­கப்­பட்­டனர். பொலிஸார் அந்த இடத்தில் இருந்­தாலும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை அகற்று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. அதனை அடுத்து அறிக்­கை­யொன்றை வெளியிட்ட வெளிவி­வ­கார அமைச்சு, இரா­ஜ­தந்­திர சமூ­க­மா­னது நிகழ்­வு­களில் பங்­கெ­டுக்கும் போது உள்­ளக உணர்வு தொடர்பில் கவனம் செலுத்­த­வேண்­டு­மெனக் கோரி­யி­ருந்­தது.
    21. இரண்டு முக்­கிய மனித உரிமை சட்­டத்­த­ர­ணிகள் செப்­டெம்பர் மாதம் 13 ஆம் திகதி இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளினால் அச்­சு­றுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.
    16 தமிழ் அமைப்­புக்கள் தடை
    22. மார்ச் 22ஆம் திகதி 16 தமிழ் அமைப்­புக்­க­ளையும், 424 தனிப்­பட்­ட­ந­பர்­க­ளையும் தடை­செய்­தி­ருந்­தது. புலி­களை மட்­டு­மல்ல சில தமிழ் புலம்­பெயர் அமைப்­புக்­க­ளையும் தடை செய்­தது. இந்த அமைப்­புக்கள் சர்­வ­தேச பொறி­முறை அமைப்­புக்­க­ளுடன் இணைந்து செயற்­பட்­ட­வைகள். இலங்கை அர­சாங்­கத்­திற்கு பயங்­க­ர­வாதம் மீள் உரு­வா­கு­வதை தடுப்­ப­தற்கு இருக்­கின்ற பொறுப்பை மதிக்­கின்ற மனித உரிமைகள் ஆணை­யாளர் இவை உரிய முறை­களை பின்­பற்ற வேண்­டு­மென்றும் கருத்து வெளியிடும் சுதந்­தி­ரத்­தையும் நல்­லி­ணக்­கத்­திற்­கான முயற்­சி­க­ளையும் பாதிக்க கூடாது என்றும் கரு­து­கிறார்.
    அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மீதான செயற்­பா­டுகள்
    23. முன்னாள் மனித உரிமைகள் ஆணை­யா­ளரின் இறுதி அறிக்­கைக்குப் பின்னர் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ரான தடை­களும் இதன் ஒரு பகு­தி­யாகும். அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், செய்­தி­யாளர் மாநா­டு­க­ளையும், செய­ல­மர்­வு­க­ளையும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான பயிற்­சி­க­ளையும் ஊடக அறிக்கை வெளியி­டு­தல்­க­ளையும் செய்­யக்­கூ­டாது என்று பாது­காப்பு அமைச்­சுக்கு கீழ் வரு­கின்ற அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செய­லகம் சுற்­று­நி­ருபம் ஒன்றை வெ ளியிட்­டி­ருந்­தது. இதனை எதிர்த்த சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்­டி­ருந்தார்.
    தமிழ் பேசும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய­ல­மர்­வுகள் ஜூன், ஜூலை மாதங்­களில் தடுக்­கப்­பட்­டன.
    24. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ர­ணைக்­கு­ழு­வா­னது தக­வல்­களை வழங்­கக்­கூ­டிய சாட்­சி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்கு தேவை­யான பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டு­மென்­பதை உணர்­கின்­றது.
    சாட்­சி­களை பாது­காக்கும் சட்­ட­மூலம்
    25. இது இலங்­கையில் உள்­ளக விசா­ர­ணை­யிலும் , தாக்­கத்தை செலுத்தும். காரணம் சாட்­சி­யா­ளர்கள் மற்றும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் நீண்ட கரி­ச­னை ­கா­ணப்­ப­டு­கின்­றது. இலங்கை அர­சாங்கம் சாட்­சி­யா­ளர்­களை பாது­காக்கும் சட்­ட­மூ­லத்தை ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பித்­தமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணை­யாளர் கவனம் செலுத்­தி­யுள்ளார். இந்த சட்­ட­மூல வரை­பா­னது 2006 ஆம் ஆண்­டி­லி­ருந்து தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமை­வாக இந்த சட்­ட­மூ­லத்தை ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் மிகவும் கவ­ன­மாக ஆய்வு செய்து வரு­கி­றது.
    எவ்­வா­றெ­னினும் முன்­வைக்­கப்­பட்­டுள்ள சாட்­சி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்­கான தேசிய அதி­கார சபை தொடர்பில் பல கவ­னங்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. சாட்­சி­யா­ளர்­களை பாது­காக்கும் பிரின் அமை­விடம் பொலிஸ் திணைக்­க­ளத்­திற்குள் வரு­கின்­றமை வெளிநாட்டு அர­சாங்­கங்களின் உத­வி­களை பெற­மு­டி­யாமை என்­பன தொடர்பில் கவனம் எழுப்­பப்­பட்­டுள்­ளன. இந்த விட­யத்தில் மனித உரிமை அலு­வ­லகம் வழங்­கு­வ­தற்கு முன்­வந்த தொழில் நுட்ப உத­விகள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.
    தேசிய செயற்­றிட்டம் ஆரா­ய­வில்லை
    26. இலங்கை தொடர்­பான பிரே­ரணை ஊடாக மனித உரிமைப் பேரவை நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­மாறு கோரி­யது. இலங்­கையின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான தேசி­ய­செ­யற்­றிட்டம் உரிய முறையில் விட­யங்­களை ஆரா­ய­வில்லை என்­பது தொடர்பில் கவனம் செலுத்­தி­யுள்­ளது. அது சர்­வ­தேச மனித உரிமை சட்­டங்கள் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள் குறித்து ஆரா­ய­வில்லை.
    30 வீத பரிந்­து­ரைகள்
    27. மே மாதம் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ 30 வீத பரிந்­து­ரைகள் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஐ.நா. செய­லா­ள­ருக்கு குறிப்­பிட்­டி­ருந்தார். நல்­லி­ணக்­கத்­திற்­கான விசேட பணி­யகம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதில் பரிந்­துரை அமு­லாக்கம் தொடர்­பான இறுதித் திட்டம் இவ்­வ­ருடம் ஜூலை மாதம் பதி­வேற்றம் செய்­யப்­பட்­டது.
    28. மும்­மொழி அமு­லாக்­கத்­திற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளன. அரச கரும மொழி திணைக்­கள நிய­மனம் , வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் பொலிஸார் நியனம் என்­ப­வற்றை குறிப்­பி­டலாம். தேசிய ஒற்­றுமை மாநாடு ஏப்ரல் மாதம் நடத்­தப்­பட்­டது.
    29. வடக்கு, கிழக்கில் இன்னும் 7840 குடும்­பங்கள் மீள்குடி­யேற்­றப்­ப­ட­வுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. பாதிக்­கப்பட் பகு­தி­களில் கல்வி நட­வ­டிக்­கை­களில் முன்­னேற்றம் அடை­யப்­பட்­டுள்­ளன. வடக்கில் தெரிவு செய்­யப்­பட்ட மாகா­ண­சபை மீள்­கட்­டு­மான செயற்­பா­டு­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் ஈடு­ப­ட­வேண்­டு­மென மனித உரிமை ஆணை­யாளர் ஊக்­கு­விக்­கிறார்.
    அலு­வ­லகம் பின்­பற்றும்
    30. நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பான முன்­னேற்­றங்­களை ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் தொடர்ச்­சி­யாக நெருக்­க­மாக பின்­பற்றும்
    காணாமல் போனோர் குறித்த ஆணைக்­குழு
    31. மிக முக்­கி­ய­மான விட­ய­மாக காணாமல் போனோர் விடயம் குறித்து விசா­ரிப்­ப­தற்கு ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வடக்கு,கிழக்கில் காணாமல் போனோர் தொடர்­பாக இந்த ஆணைக்­குழு விசா­ர­ணை­களை நடத்­து­கி­றது. ஆகஸ்ட் மாதம் வரை இந்த ஆணைக்­குழு ஆறு சுற்று அமர்­வு­களை கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு, முல்­லைத்­தீவு, மற்றும் மன்னார் பகு­தி­களில் நடத்­தி­யுள்­ளது. வடக்கு கிழக்­கி­லி­ருந்து ஆணைக்­கு­ழு­விற்கு 12,995 க்கும் அதி­க­மான முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. எவ்­வா­றெ­னினும் ஏனைய மாகா­ணங்­க­ளி­லி­ருந்து 374 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இரா­ணுவக் குடும்­பங்­களில் காணா­மல்­போன 5000 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.
    கண்­கா­ணிக்­க­வில்லை
    32. இந்த ஆணைக்­கு­ழுவின் அமர்­வு­களை ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு கண்­கா­ணிக்­க­வில்லை. இங்கே மொழி­பெ­யர்ப்பு விவ­காரம் எழுப்­பப்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான ஆலோ­ச­னைகள் வழங்­கு­வதில் குறை­பா­டுகள், அமர்­வு­களில் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களின் பிரசன்னம், காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்­களின் குடும்­பங்கள் சித்­தி­ர­வதை மற்றும் அழுத்­தங்­க­ளுக்கு பொலி­ஸா­ரினால் உட்­ப­டு­கின்­றமை என்­பன எழுப்­பப்­பட்­டுள்ள விட­யங்கள். காணாமல் போனோரின் குடும்­பங்­க­ளிடம் காணா­மல்­போ­ன­வர்­க­ளுக்­கான மரணச் சான்­றி­த­ழைப்­பெற்­றுக்­கொள்­ளு­மாறு பயங்­க­ர­வாதப் புனாய்வுத் திணைக்­க­ளத்­தினர் அழுத்தம் வெ ளியிட்­ட­தாக முல்­லைத்­தீவில் ஜூலை மாதம் இடம்பெற்ற அமர்­வு­களின் போது சாட்­சி­ய­ம­ளிக்­கப்­பட்­டது.
    ஆணை விரிவு
    33. காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ரிக்கும் ஆணைக்­குவின் ஆணை 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரி­மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஜூலை மாதம் இந்த ஆணைக்­கு­ழுவின் ஆணையை விரி­வு­ப­டுத்­தினார். அதா­வது யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தின் போது இரண்டு தரப்­பி­ன­ராலும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் மீறப்­பட்­ட­னவா என்­பது குறித்தும் புலிகள் பொது­மக்­களை மனித கேட­யங்­க­ளாக பயன்­ப­டுத்­தி­னரா என்­பது குறித்தும் விசா­ரிப்­ப­தற்­காக ஆணை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.
    34. அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி ஆறு சர்­வ­தேச நிபு­ணர்­களை ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக அழைப்பு விடுத்திருந்தார். இந்த அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­ட­வரை இந்த சர்­வ­தேச நிபு­ணர்­களின் வகி­பாகம் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. ஆணை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் செயற்­பா­டுகள் மாற்­ற­ம­டை­யுமா? என்­பது குறித்தும் எதுவும் வெளியி­டப்­ப­ட­வில்லை.
    முன்­னேற்றம் இல்லை
    35. நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைக்கு அமைய இரா­ணுவ நீதி­மன்றம் அமைக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டது. எனினும் அதன் அறிக்கை இது­வரை வெளியி­டப்­ப­ட­வில்லை. இரண்­டா­வது கட்ட விசா­ர­ணைகள் தொடர்­பிலும் முன்­னேற்­றங்கள் காணப்­ப­ட­வில்லை.
    ஐந்து மாணவர் படு­கொலை
    36. 2006 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையில் 5 மாண­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பான விசா­ரணை இது­வரை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. 17 அரச சார்­பற்ற ஊழி­யர்கள் மூதூரில் 2006 ஆம் ஆண்டு கொலை செய்­யப்­பட்­டமை தொடர்­பாக அர­சாங்கம் பிரான்­ஸுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. எனினும் தற்­போது வெ ளிநாட்­டி­லுள்ள காட்­சி­யா­ளர்­க­ளுடன் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­வது குறித்து இது­வரை உடன்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை என பிரான்ஸ் அறி­வித்­துள்­ளது.
    37. வெலி­வே­ரிய சம்­பவம் தொடர்பில் இலங்கை இரா­ணுவம் நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை இன்னும் வெ ளியி­டப்­ப­ட­வில்லை. வவு­னியா மற்றும் வெலிக்­கந்த சிறை­களில் 2012 ஆம் ஆண்டு நடந்த மர­ணங்கள் குறித்த விசா­ர­ணைகள் குறித்தும் வர­வில்லை.
    38. இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் அறி­விக்­கப்­பட்ட சித்­தி­ர­வ­தைகள் குறித்த தேசிய விசா­ரணை இது­வரை செயற்­ப­ட­வில்லை.
    எம்­லுபுக்­கூடு விவ­காரம்
    39. புதிய எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் வெ ளிப்­ப­டுத்­தப்­பட்­டாலும் விசா­ர­ணைகள் தாம­த­மா­கவே இடம் பெற்­றன. மன்­னாரில் 2013 ஆம் ஆண்டின் இறு­திப்­ப­கு­தியில் 80 சடங்­களின் எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.
    40. முல்­லைத்­தீ­விலும் மாத்­த­ளை­யிலும் இவ்­வாறு எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. மாத்­த­ளையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. 1980 களில் ஜே.வி.பி. கிளர்ச்­சிக்­கா­லத்­தின்­போ­தா­ன­தாக இருக்­கலாம் என்றும் அவற்றில் வெ ளிநாட்டு இர­சா­யண நிறு­வ­னங்­க­ளுக்கு அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அர­சாங்கம் கூறி­யது.
    மனித உரிமை காப்­பா­ளர்கள்
    42. தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களை விடு­விப்­பதில் அர­சாங்கம் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றங்­களை காட்­டி­யுள்­ளது. 2014 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஆகும் போது 114 முன்னாள் போரா­ளிகள் மட்­டுமே புனர்­வாழ்வு நிலை­யங்­களில் உள்­ள­தா­கவும் 84 பேர் சட்ட நட­வ­டிக்­கைக்கு அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழான புதிய கைது சம்­ப­வங்­களும் தடுப்­பு­களும் தொடர்ந்து அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளன. பெப்­ர­வரி மற்றும் மார்ச் மாதங்­களில் சில முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் மீண்டும் புலி அமைப்பை வடக்கில் மீள் உரு­வாக்க செயற்­பட்­ட­தாக அர­சாங்கம் அறி­வித்­தது. பாரிய தேடுதல் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு பெண்கள் உட்­பட 65 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டனர். யுத்த முடிவின் பின்னர் இது மிகப்­பெ­ரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­யாக இருந்­தது சம்­ப­வங்­களின் மத்­தியில் இது அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யது. சில மனித உரிமை காப்­பா­ளர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.
    இரா­ணுவ குறைப்பு
    43. வடக்கில் இரா­ணு­வத்­தி­னரை குறைப்­பது தொடர்பில் நல்­லி­ணக்க ஆணைக்­குழு கரி­சனை செலுத்­தி­யி­ருந்­தது. அது­மட்­டு­மன்றி இவ்­வ­ருடம் ஜூலை மாதம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மேஜர் ஜெனரல் ஜி/ ஏ/. சந்­தி­ர­சி­றியை மீண்டும் வடக்கின் ஆளு­ந­ராக நிய­மித்தார். அர­சாங்கம் யுத்­தத்தின் பின்னர் வடக்கில் 35 வீத இரா­ணு­வத்தைக் குறைத்­துள்­ள­தாக அறி­வித்­தி­ருந்­தது.
    44. எவ்­வா­றெ­னினும் இரா­ணுவம் தொடர்ந்து தனியார் காணி­களை சுவீ­க­ரிப்­பதை தொடர்­கி­றது. உதா­ர­ண­மாக 6371 தனியார் காணி­களை வலிகாம் வடக்கில் இரா­ணுவம் வைத்­துள்­ளது. 2176 பாதிக்­கப்­பட்ட காணி உரி­மை­யா­ளர்கள் நீதி­மன்­றத்தை நாடி­யுள்­ளனர்.
    45. யுத்த முடிவின் பின்னர் பாது­காப்பு அமைச்சின் கீழ் வரு­கின்ற நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை கொழும்பில் பல அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டது. 70 ஆயி­ரத்­திற்கும் 1இலட்­சத்து 35 ஆயி­ரத்து உட்­பட்ட குடும்­பங்கள் இட­மாற்­றப்­ப­டலாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த செயற்­பாட்டில் வெளிப்­ப­டைத்­தன்மை மக்கள் ஆலோ­சனைத் தன்மை குறைவு என விமர்ச்­சிக்­கப்­பட்­டுள்­ளது. இவற்றில் அச்­சு­றுத்தல், சித்­தி­ர­வதை என்­ப­னவும் அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது.
    முஸ்லிம் சிறு­பான்மை மீதான நட­வ­டிக்­கைகள்
    46. ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் முன்னாள் ஆணை­யா­ள­ரைப்­போன்றே முஸ்லிம் மற்றும் கிறிஸ்­தவ சிறு­பான்­மை­யி­னத்­துக்கு எதி­ரான மத­வாத நட­வ­டிக்­கைகள் குறித்து கவ­லை­ய­டைந்­துள்ளார். ஜன­வரி மற்றும் ஆகஸ்ட் மாதங்­க­ளுக்­கி­டையில் மத வழிப்­பாட்­டுத்­த­லங்கள் மீதான தாக்­கு­தல்கள், வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்கள், முஸ்­லிம்கள் மீதான வெறுக்­கத்­தக்க வார்த்தைப் பிர­யோ­கங்கள் என்­பன தொடர்பில் 88 முறைப்­பா­டுகள் அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளன. ஜூன் மாதம் அளுத்­க­மவில் இடம்­பெற்ற வன்­மு­றை­களே அண்­மையில் வரலாற்றில் இடம் பெற்ற வெறுக்கத்தக்க வன்முறையாக இருந்தது. பொதுபலசேனாவின் மிகப்பெரிய ஊர்வலத்தை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன. வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதலுக்கு உட்பட்டதாக அறிக்கையிடப்பட்டது. நால்வர் உயிரிழந்ததுடன் 80 பேர் காயமடைந்தனர்.
    பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள்
    47. சம்பவ இடத்திற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ விஜயம் செய்து இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக விசாரணை செய்வதாகவும் நட்டஈடுகள் வழங்குவதாகவும் உறுதியளித்தார். பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமை தெ ளிவாகியது. வெறுக்கத்தக்க கருத்துக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சட்டமூலம் இன்னும் வரவில்லை. இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான கடும் நடவடிக்கை எடுக்குமாறும் சிறுபான்மை சமூகம் மீதான அரசாங்கத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் மனித உரிமை அலுவலகம் வலியுறுத்துகிறது.
    48. ஜனவரிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை சித்திரவதைகள், தனிப்பவர்களுக்கு எதிரான வன்முறைகள், தனிப்பட்டவர்கள் மத குருமார்கள், மதவழிப்பாட்டுத்தலங்கள் தொடர்பாக கிறிஸ்தவ குழுக்கள் அறிக்கை வெ ளியிட்டிருக்கின்றன.
    கவனம் தேவை
    49. இந்த வாய்மூல அறிக்கையானது ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகளையும் யுத்தத்தின் போதான மீறல்கள் . குறித்த பொறுப்புக்கூறல்மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் மீதும் கவனம் செலுத்துவது முக்கியமானது என்பதை வெளிக்காட்டுகிறது.
    50. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும் அதன் மூலம் நீண்டகால நல்லிணக்கத்தை நோக்கி பயணிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகிறார். காணாமல் போனோரின் ஆணைக்குழுவின் ஆணையை விரிவுபடுத்தியதன் மூலம் அரசாங்கம் உண்மையை கண்டறிவதற்கான பரந்து பட்ட செயற்பாட்டை மேற்கொள்ளும் என அவர் நம்புகிறார்.
    ஒத்துழையுங்கள்
    51. சிவில் சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவருமாறு மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகிறார். அத்துடன் இலங்கையின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் குறைத்து மதிப்பிடத்தக்க வகையில் இடம்பெறும் முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் மனித உரிமை ஆணையாளர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்.
    52. இலங்கை மீள்குடியேற்றத்தில் முன்னேற்றத்தை வெ ளிப்படுத்தியிருந்தாலும் நடந்து முடிந்த மற்றும் தற்போது இடம் பெறுகின்ற மீறல்களை ஆராய்வது நல்லிணக்கத்தை அடைவதற்கும் சட்டத்தின் ஆட்சிப்பலப்படுத்துவதற்கும் அவசியம் என்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகிறார். இதற்கு மனித உரிமை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணை செயற்பாடானது முக்கிய பங்களிப்பை வழங்கும் என அவர் கருதுகிறார்.
    எனவே அனைத்து இலங்கையினரதும் நலனுக்காக ஐ.நா. மனித உரிமை அலுவகத்தின் விசாரணை செயற்பாட்டுடனும் ஐ. நா வின் விசேட . ஆணையாளர்களுடனும் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுமாறு இலங்கையிடம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை விடுக்கின்றார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மஹிந்த அரசை கலங்கடிக்க நாளை வெளியாகிறது ஐ.நா வின் வாய்மூல அறிக்கை (இணைப்பு) Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top