கமராக்களுடன் புலனாய்வாளர்கள் களத்தில்!! தொடர்ந்து காணி பறிப்பு! (வீடியோ) - TK Copy கமராக்களுடன் புலனாய்வாளர்கள் களத்தில்!! தொடர்ந்து காணி பறிப்பு! (வீடியோ) - TK Copy

  • Latest News

    கமராக்களுடன் புலனாய்வாளர்கள் களத்தில்!! தொடர்ந்து காணி பறிப்பு! (வீடியோ)


    கிளிநொச்சி ஆனையிறவில் தமிழ்மக்களின் பூர்வீக நிலத்தை
    இராணுப்படைத்தளம் அமைப்பதற்காக இன்று காலை நிலஅளவை திணைக்களம் அளக்க முயன்றபோது பொது மக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது.

    குறித்த இடத்திற்கு காணிக்கான உரிமை ஆவணங்களுடன் வந்த காணி உரிமையாளர்களும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரநிதிகளும் அளவீடு செய்வதை தடுத்து நிறுத்த முயன்றபோது அங்கு இராணுவம் மற்றும் காவல்துறை ஆகியன பிரசன்னமாகின.

    இந்த நிலையில் இந்தக்காணிகள் காலம்காலமாக தமிழ்மக்கள் வாழ்ந்த நிலம் என்பதை அங்கு வந்த நிலஅளவை அதிகாரிகளுக்கும் இராணுவம் மற்றும் காவல்துறை ஆகியவற்றுக்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் விளக்கமளித்துள்ளனர்.

    எனினும் இது மேலிடத்து உத்தரவு என சொல்லி பொலிசாரின் உதவியூடன் அளக்க முற்பட்டபோது காணி உரிமையாளர்கள் மக்கள் மற்றும் பிரதிநிதிகள்இ நிலஅளவையாளர்களையும் அவர்ளுடைய கருவிகளையம் முற்றுகையிட்ட நிலையில் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டது.

    காணி உரிமையாளர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்றைய இந்த காணி அபகரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே தவிர இது முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது என்பதற்கு எந்த வித உறுதிப்பாடும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    இதன்போது கூடியிருந்த பொதுமக்களையும், வட மாகாண சபை உறுப்பினர்களையும் இராணுவத்தின் புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கமராக்களுடன் புலனாய்வாளர்கள் களத்தில்!! தொடர்ந்து காணி பறிப்பு! (வீடியோ) Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top