கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-8 (காணொளி) - TK Copy கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-8 (காணொளி) - TK Copy

  • Latest News

    கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-8 (காணொளி)


    கருணாவின் பிரதேசவாதத்தை முறியடிப்பதற்காக, தம்மீதான
    வரலாற்றுப் பழியை நீக்குவதற்காக அந்த மண்ணின் மைந்தர்கள் செலுத்திய விலை, அவர்கள் புரிந்த தியாகங்கள்- அனைத்துமே, அன்றைக்கு மாத்திரமல்ல, என்றைக்கும் அந்த மண் வீரம் விளை நிலம்தான் என்பதை நிரூபித்து நிற்கின்றது.

    கிழக்கு மக்களை முன்நிலைப்படுத்தி கருணா மேற்கொண்ட பிரதேசவாதச் சதியை, தலைவரின் வழி நடத்தலில் கிழக்கு மண்ணின் மைந்தர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பது, பலராலும் அறியப்படாத ஒரு முக்கியமான வரலாறு.

    கருணாவை சமாளித்து, இந்தப் பிளவினைச் சரி செய்யும் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு சமாதானத் தூதுக் குழவை அனுப்பும் முயற்சியில் இறங்கி இருந்தது. 

    ஆனால், அந்த நேரத்தில் கருணா மேற்கொண்ட ஒரு மோசமான நடவடிக்கை, கருணாவின் இனிப் பேசுவதில் பயனில்லை என்ற முடிவை விடுதலைப் புலிகளின் தலைமை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது. கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து நிரந்தரமாகவே நீக்கி, கருணாவுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை ஒன்றை புலிகள் அமைப்பு எடுப்பதற்கும், கருணாவின் அந்த நடவடிக்கை காரணமாக அமைந்திருந்தது. 

    மட்டக்களப்பு மாவட்டத்தின் 80 வீதமான நிலப்பரப்பும், அம்பாறை மாவட்டத்தின் சுமார் 50 வீதமான நிலப்பரப்பும் கருணா அணியினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழேதான் அந்த நேரத்தில் இருந்தது.

    அந்தச் சந்தர்ப்பத்தில் ,அரசியல் ரீதியாகவும் கருணாவின் கரங்கள் பலப்படுத்தப்பட்டுவிடுமேயானால், அடுத்து வரும் காலங்களில் ஆட்சி அமைக்கவிருக்கும் சிறிலங்கா அரசாங்கம் கருணா அணியினருடன் பேசியே ஆகவேண்டி கட்டாயம் உருவாகிவிடும்.

    அதுவும் கருணா அணி அரசியல் ரீதியாகவும் பலமான ஒரு அணியாக இருந்துவிடும் பட்சத்தில், எந்தவிதச் சாக்குப் போக்கும் கூறாமல் கருணா அணியினை அங்கீகரித்தேயாகவேண்டிய கட்டாயம் சர்வதேச அனுசரணையாளர்களுக்கும் ஏற்பட்டுவிடும். அதனால், கருணா அணியினர் 2004ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அதிக கவணத்தைச் செலுத்த ஆரம்பித்தார்கள்.

    அந்த வரலாற்றின் பக்கங்களைத்தான் உண்மைகள் என்ற இந்த நிகழ்சியில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.



    கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-2)

    கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-3)

    கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-4)

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-8 (காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top