இலங்கையில் உள்ள தமிழர்கள் வட மாகாணத்துக்கு
பொலிஸ் அதிகாரங்களை கோர முடியாது. மேலும் இந்தியாவும் இலங்கையும் ஒவ்வொரு நாட்டினதும் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்று காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான சர்வதேச நிபுணர் குழுவின் உறுப்பினர் அவ்டாஸ் கௌஷால் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தலாம். அத்துடன், ஆலோசனைகளையும் வழங்க முடியும். ஆனால், இவ்வாறு செய்யுங்கள் என்று நாம் கோரிக்கை விட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிபுணர் குழுவின் உறுப்பினர் அவ்டாஸ் கௌஷால் மேலும் கூறியுள்ளதாவது; இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க உதவிசெய்யும் அதேவேளை இலங்கையின் இறைமையை இந்தியா மதிக்கவேண்டும்.
இலங்கை அரசாங்கத்துடன் பேசமுடியும். ஆலோசனைகளை வழங்க முடியும். ஆனால் இதனை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுக்க முடியாது. இலங்கையின் இறைமையை இந்தியாவும் இந்தியாவின் இறைமையை இலங்கையும் மதிக்கவேண்டும்.
இந்தியாவில் உள்ள பிரிவினைவாதிகளுடன் பேசுமாறு இல்ஙகை கூறினால் நாம் எவ்வாறு உணர்வோம்? எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற கூடாது. எனினும் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவ வேண்டும். நாம் பெரிய அண்ணன் என்ற வகையில் அழுத்தம் பிரயோகிக்கக்கூடாது.
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியா பாராட்டவேண்டும். அத்துடன் இந்த விடயத்தில் இலங்கை தொடர்ந்து முன்செல்லவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்கள் தம்மை இலங்கையர்கள் என்று உணரவேண்டும்.
அந்தவகையில் இலங்கையின் சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் உட்படவேண்டும். அவர்கள் வட மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரங்களை கேட்க முடியாது. இதேவேளை இந்தியாவின் சமூக சேவையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அவ்டாஸ் கௌஷால் காணாமல் போனோர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினராக கடந்த வாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் மூன்று நிபுணர்கள் சர்வதேச நிபுணர் குழுவுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். சேர் டெஸ்மன் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் டேவிட் க்ரேய்ன் ஆகியோர் இந்தக் குழுவில் இடமபெற்றிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் இந்தியாவின் மனித உரிமை செயற்பாட்டாளா் அவ்டாஷ் கவ்ஷால் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அக்மட் பிலால் மேலதிக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
அவ்டாஷ் கௌசால் இந்தியாவின் சார்பில் நியமிக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதன்போது ''இலங்கையின் அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்புடன் அரசியல் தீர்வைக்காண முன்வரவேண்டும். இந்தியாவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
இதன் மூலம் தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்'' என்று இந்திய பிரதமர் கூட்டமைப்பிடம் கூறியிருந்தார்.