சாமியாரான பிக்குகள் சன்னதமாடி காட்சிகளை வெளியிட்டது பி.பி.சி (காணொளி) - TK Copy சாமியாரான பிக்குகள் சன்னதமாடி காட்சிகளை வெளியிட்டது பி.பி.சி (காணொளி) - TK Copy

  • Latest News

    சாமியாரான பிக்குகள் சன்னதமாடி காட்சிகளை வெளியிட்டது பி.பி.சி (காணொளி)

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

    இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக
    இணையத்தின் ஊடாக ஐ.நா விற்கு சாட்சியமளிப்பதற்காக அரச சார்பற்ற அமைப்புக்களும் சில வெளிநாட்டுக்குழுக்களும் காணாமல் போன விடுதலைப்புலிகளின் உறவினர்களை கொழும்புக்கு அழைத்ததாக இறந்த மற்றும் காணாமல் போனோரின் பெற்றோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

    சாட்சியமளிப்பதற்காக 2 லட்சம் ரூபாவை வழங்குவதாகவும் குறித்த அமைப்புக்கள் உறுதியளித்தாக முன்னணி குறிப்பிட்டுள்ளது. 

    இந்தநிலையில் குறித்த அரச சார்பற்ற அமைப்புக்கள் ஏன் தமது முன்னணியை மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூக மற்றும் மதங்களுக்கு நிலையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வுக்கு அழைக்கவில்லை என்று முன்னணியி ஆலோசகர் அன்குலுகலே ஸ்ரீ ஜினாநந்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதே வேளை கூட்டத்திற்கு வந்தவர்கள் தாம் தனியார் இடத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட கலந்துரையாடலுக்கு வந்திருப்பதாகவும் தனியார் இடத்தில் அத்துமீறி பிக்குகள் நுழைவதை தடைசெய்யுமாறு பொலிசாருடன் வாக்குவாதப்பட்டனர்.

     எனவே வெளியுறவு அமைச்சு இது தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.


    அச்சுறுத்தல்களை நேரில் கண்டுள்ளேன் – அமெரிக்கப் பதில் தூதர்!

    “காணாமற்போனவர்களின் குடும்பத்தினர் என்ற வகையில் நீங்கள் அனுபவிக்கும் அச்சுறுத்தல்களை நான் நேரில் கண்டுகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க பதில்த் தூதுவர் மைக்கல் யஹானிஸ்டைன். 

    சமூக சமய நடுநிலையத்தில் நடைபெற்ற காணாமற்போனவர்களின் குடும்பத்தாருடனான சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்கத் தூதரகத்தின் பதில் பிரதித் தூதுவர் மைக்கல் யஹானிஸ் டைன் குண்டர்களால் சந்திப்பு இடைநடுவில் குழப்பப்பட்டதையடுத்து அங்கிருந்த காணாமற்போனோர் மத்தியில் உரையாற்றினார்.




    அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இங்கு நடைபெற்றுள்ள வற்றை நீங்கள் நேரிலே கண்டு கொண்டீர்கள். உலகமும் இதனைக் கண்ணுற்றுள்ளது. முன்னே வந்து எம்மோடு உங்களது கதைகளைப் பகிர்ந்துகொண்டதில் உங்களுக்குள்ள துணிச்சலை நான் மெச்சுகின்றேன்.

    வியாழன்று வெளி விவகார அமைச்சரை நான் சந்திக்கவுள்ளேன். அப்போது இதுபற்றி நான் அவரிடம் பிரஸ்தாபிப்பேன்” என்று அவர் அங்கு தெரிவித்துள்ளார்.


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சாமியாரான பிக்குகள் சன்னதமாடி காட்சிகளை வெளியிட்டது பி.பி.சி (காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top