ஐ.நா. விசாரணையும் அரசாங்கத்தின் எதிர்ப்பும் -வீரகேசரி - TK Copy ஐ.நா. விசாரணையும் அரசாங்கத்தின் எதிர்ப்பும் -வீரகேசரி - TK Copy

  • Latest News

    ஐ.நா. விசாரணையும் அரசாங்கத்தின் எதிர்ப்பும் -வீரகேசரி

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

    'இலங்கை தொடர்­பாக ஐ.நா. மனித உரி மைப் பேரவை
    முன்­னெ­டுத்­துள்ள சர்­வ­தேச விசா­ரணை என்­பது நீதியைத் துஷ்பி­ர­யோகம் செய்யும் நட­வ­டிக்­கை­யாகும்' என்று இலங்­கையின் வெளி­யு­றவுத் துறை அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் கூறி­யி­ருக்­கின்றார்.

    நீதியைத் துஷ்பிரயோகம் செய்யும் நட­வ­டிக்­கைக்கு யாரா­வது ஒத்­து­ழைப்­பார்­களா, ஒத்­து­ ழைக்க மாட்­டார்­கள்­தானே, எனவே தான், ஐ.நா. வின் விசா­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் ஒத்­து­ழைக்க முடி­யாது என்று தீர்க்­க­மாகக் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

    ஐ.நா. விசாரணை என்­பது ஒரு சர்­வ­தேச விசா­ரணை. இலங்­கையின் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மானு­டத்­திற்கு எதிரான நட­வ­டிக்­கைகள், செயற்­பா­டுகள் என்­ப­வற்­றிற்கு, இறை­மை­யுள்ள ஓர் அர­சாங்கம் என்ற வகையில் இலங்கை அர­சாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்­ப­தற்­கா­கவே இந்த விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

    பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும். உரிமை மீறல் என்ற குற்றம் இழைத் த­வர்கள் இனங் காணப்­பட்டு, அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண் டும் என்­பதும், இந்த விசா­ர­ணையின் நோக்­க­மாகும். விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான இறுதிக் கட்ட யுத்­தத்­தின்­போது, யுத்­தத்தில் எப்­ப­டி­யா­வது வென்­று­விட வேண்டும்.

    விடு­த­லைப்­பு­லி­களை இந்த யுத்­தத்தில் என்ன பாடு­பட்­டா­வது அழித்­து­விட வேண்டும் என்று கங்­கணம் கட்­டிக் கொண்டு அர­சாங்கம் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை மூர்க்­கத்­த­ன­மாக முன்­னெ­டுத்­தி­ருந்­தது. யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் தாங்கள் வந்து நிற்­பதை விடு­த­லைப்­பு­லி­களும் அப்­போது உணர்ந்­தி­ருந்­தார்கள்.

    எனவே, வாழ்வா சாவா என்ற நிலையில், தற்­காப்­புக்­கா­கவும், உயிர் வாழ வேண்டும் என்­ப­தற்­கா­கவும் அவர்களும், தங்­களால் இயன்ற அளவில் எதிர்த்துப் போராடத் துணிந்­தி­ருந்­தார்கள். அதற்­காக எல்லா வளங்­க­ளையும் பயன்­ப­டுத்தி அவர்கள் சண்­டையில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். இந்த நிலை­யில்தான் - இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

    சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் மீறப்­பட்­டி­ருந்­தன. யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்த இரு தரப்­பி­ன­ருக்கும் எதி­ராக இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன. விடு­த­லைப்­பு­லி­களைப் பொறுத்­த­மட்டில், அவர்­களின் தலை­மையும், நடந்த விட­யங்­க­ளுக்­காக, அவர்கள் சம்­பந்­தப்­பட்ட செயற்­பா­டு­க­ளுக்­காகப் பொறுப்பு கூறத்­தக்­க­வர்­களும், இறுதி யுத்­தத்­தின்­போது கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள்.

    இத­னால்தான், யுத்­த­மோ­தல்­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களில் மிஞ்­சி­யி­ருக்­கின்ற ஒரே­யொரு தரப்­பா­கிய இலங்கை அர­சாங்கம் இறுதி யுத்­த­காலச் சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்பு கூற வேண் டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச மட்­டத்தில் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. அதற்­கா கப் பல வழி­க­ளிலும் அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

    இதனால் இலங்கை அர­சாங்­கத்­திற்குப் பெரும் நெருக்­கடி ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இதனை வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் பீரிஸ் ஒப்­புக்­கொண்­டி­ருக்கின்றார். 'மனித உரிமை விவ­காரம் குறித்து சில நாடுகள் கொடுத்து வரும் அழு த்­தமே இலங்கை எதிர்­கொள்ளும் மிகப் பெரும் சவா­லாக இருக்­கின்­றது' என, அது குறித்து கவ­லை­ய­டைந்து கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார். 

    வெள்­ளைக்­கொ­டியில் வெளுத்த சாயம் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்­பிட்­டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக அர­சாங்கம் எதிர்­நோக்­கி­யுள்ள சவால்கள் என்­பது எழுந்­த­மா­ன­மாக வந்­த­வை­யல்ல. அர­சுக்கு அழுத் தங்­களைக் கொடுக்­கின்ற நாடுகள் இலங்கை மீது ஏதோ தனிப்­பட்ட கோப­தாபம் கொண்ட நாடு­க­ளு­மல்ல.

    ஆதா­ர­மற்ற வகையில் அவை கள் அந்த அழுத்­தத்தைக் கொடுக்­க­வில்லை. இந்த அழுத்­தங்­க­ளுக்கு எத்­த­னையோ கார­ணங்கள் இருக்­கின்­றன. மனித உரி­மைகள் மீறப்­பட்­டன என்­பதை உறு­திப்­ப­டுத்த வல்ல எத்­த­னையோ சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

    யுத்­தத்தின் முடிவில் அரசாங்­கத்தின் வேண்­டு­கோளை ஏற்று, பாது­காப்பு அளிக்­கப்­படும், பொது மன்­னிப்பு வழங்­கப்­படும் என்ற அர­சாங்­கத்தின் உத்­த­ர­வா­தத்தை நம்பி, இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த நடேசன், புலித்­தேவன் போன்­ற­வர்கள் வெள்­ளைக்­கொ­டி­களை ஏந்தி வந்­த­போது சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

    விடு­த­லைப்­பு­லி­களின் காவல்­துறை தலை­வ­ரா­கிய நடேசன், விடு­த­லைப்­பு­லி­களின் சமா­தானச் செயற்­பா­டு­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்த புலித்­தே­வனும் கொல்­லப்­பட்ட சம்­ப­வ­மா­னது, வெள்ளைக் கொடி விவ­கா­ர­மாக பின்னர் விசுவ­ரூ­ப­மெ­டுத்­தி­ருந்­தது. யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் உட­ன­டி­யாக இடம்­பெற்ற மோச­மான மனித உரிமை மீறல் சம்­ப­வ­மாக இந்தச் சம்­பவம் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது.

    ஆயினும் அர­சாங்கம் அவர்கள் சுட்­டுக்­கொல்­லப்­ப­ட­வில்லை என்று பிடி­வா­த­மாக மறுத்து உரைத்­தி­ருந்­தது. நடே­சனும், புலித்­தே­வனும், நடே­சனின் மனைவி உட்­பட, விடு­த­லைப்­பு­லி­களின் ஏனைய போரா­ளிகள் பல­ருடன் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைய வந்­த­போது, தமது பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்­கு­ ரிய உத்­த­ர­வா­தத்தை அவர்கள் சர்­வ­தேச மட்­டத்தில், இலங்கை அரச தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து பெற்­றி­ருந்­தார்கள். அப்­ப­டி­யி­ருந்தும் அவர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள்.

    யுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் விடு­த­லைப்­பு­லி­களின் தலை­வர்கள் செய்­­மதி தொலை­பே­சி­களைப் பயன்­ப­டுத்தி சர்­வ­தேச மட்­டத்தில் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளு­டனும், முக்­கி­யஸ்­தர்­க­ளு­டனும் தொடர்­பு­களைப் பேணி வந்­தார்கள். அந்த வகை­யி­லேயே நடே­சனும், புலித்­தே­வனும் இந்­தியா, நோர்வே உள்­ளிட்ட பல நாடு­களில் உயர் மட்­டத்­த­லை­வர்­க­ளுடன் தொடர்­ பு­களைப் பேணி­யி­ருந்­தனர்.

    இதன் கார­ண­மா­கவே, அவர்கள் வெள்ளைக் கொடி­யேந்தி இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைய வந்த கடைசி நிமிடம் வரையில் அவர்கள் எங்­கி­ருந்­தார்கள், அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது பற்­றிய துல்­லி­ய­மான தக­வல்கள் வெளி­யு­ல­கத்­திற்குத் தெரி­யவந்­தி­ருந்­தன. அந்த இறு­திக்­கட்­டத்­தின்­போது, இவ்­வா­றான தொலை­தொ­டர்பு வச­திகள், இல்­லா­தி­ருந்த எண்­ணற்­ற­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்பது, இது­வ­ரையில் எவ­ருக்­குமே தெரி­யாமல் மறைந்து கிடக்­கின்­றது.

    அதே­நேரம், அர­சாங்­கத்தின் அழைப்பை ஏற்று, அர­சாங்­கத்தின் பாது­காப்பு உத்­த­ர­வா­தத்தை நம்பி, இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் இரண்டாம், மூன்றாம் நிலைத் தள­ப­திகள் பல­ருக்கும், அவர்­க­ளோடு இணைந்து சர­ண­டைந்த ஏனைய முக்­கிய போரா­ளி­க­ளுக் கும் என்ந நடந்­தது என்­பதும் இது­வ­ரையில் வெளிச்­சத்­திற்கு வர­வில்லை.

    இவ்­வாறு சர­ண­டைந்த பலரை அவர்­க­ளு­டைய உற­வி­னர்கள் நேர­டி­யாக இரா­ணுவ அதி­கா­ரி­க­ளிடம் கைய­ளித்­தி­ருந்­தார்கள். அத்­துடன் அவர்­களை, இரா­ணு­வத்­தினர் பொறுப்­பேற்று பேரூந்­து­களில் அழைத்துச் சென்­ற­தையும் அந்த உற­வி­னர்கள் நேர­டி­யாகக் கண்­டி­ருக்­கின்றார்கள். அவ்­வாறு சென்­ற­வர்கள் எங்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள், அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­து­பற்றி, யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்­க­ளா­கி­விட்ட நிலை­யிலும் அர­சாங்கம் எது­வுமே கூறாமல் வாய்­மூடி மௌன­மாக இருக்­கின்­றது.

    இது போன்ற சம்­ப­வங்­களில் மனித உரி­மைகள் மீறப்­ப­ட­வில்லை என்றால், சர­ண­­டைந்­த­வர்­களை, எதி­ரி­யாக இருந்­தாலும், நிரா­யு­ த­பா­ணி­க­ளாக அபயம் கேட்டு தஞ்சம் அடைந்­த­வர்கள் ஏன் சுட்டுக் கொல்­லப்­பட்­டார்கள்? அதற்­கான காரணம் என்ன? அரச உயர் மட்­ட த்தில் சர­ண­டை­ப­வர்கள் பாது­காக்­கப்­ப­டு­வார்கள் என்று உத்­த­ர­வாதம் அளிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர்­களைக் கொன்­ற­வர்கள் யார்? அவர்­க­ளுக்கு எதி­ராக என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது? என்று அனு­மனின் வாலாக நீண்டு கிடக்­கின்ற கேள்­வி­க­ளுக்கு அர­சாங்கம் மௌனம் சாதித்தால் நெருக்­க­டிகள் ஏற்­ப­டத்­தானே செய்யும்.

    மரு­தானை சமய, சமூக நடு­நி­லை­யத்தின் ஒன்று கூடல் ஐ.நா. வினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைக்­காக நாட்டில் இர­க­சி­ய­மாக ஆதா­ரங்கள் சேக­ரிக்­கப்­ப­டு­வ­தாக குற்றம் சுமத்தி, அமை ச்சர் பீரிஸ் குறை­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார். இதற்­கான ஆதா­ரங்கள் அர­சாங்­கத்­திடம் இருப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்ள அவர், ஐ.நா. விசா­ரணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­காகப் பொது­மக்­க­ளுக்குப் பணம் வழங்­கப்­ப­டு­கின்ற சம்­ப­வங்கள் குறித்தும் அர­சுக்குத் தெரி­ய­வந்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

    ஆனால், இவ்­வாறு பணம் கொடுத்­தது யார், எங்கு வைத்து, எப்­போது, யாருக்கு பணம் கொடு க்­கப்­பட்­டது என்­பது பற்­றிய விப­ரங்­களை அவர் வெளி­யி­ட­வில்லை. எழுந்­த­மா­ன­மாக அவர் இந்த விட­யத்தை, கொழும்பு பாது­காப்பு அமைச்சின் கருத்­த­ரங்­கத்தில் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. ஆயினும் 20 தமிழ்க் குடும்­பங்­களை வடக் கில் இருந்து கொழும்­புக்கு அழைத்து வந்து ஐ.நா. விசா­ர­ணைக்­கான ஆதா­ரங்கள் திரட்­டப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்டு கூறி­யி­ருக்­கின்றார்.

    மரு­தா­னையில் உள்ள, சமய, சமூக நடு நி­லை­யத்தில் இடம்­பெற்ற ஒரு சம்­ப­வத்தைக் குறிப்­பிட்டே அவர் இந்தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருப்­ப­தாக அனு­மா­னிக்க முடி­கின்­றது. காணாமல் போனோரின் குடும்­பங்கள் சில மரு­தானை சமய, சமூக நிலை­யத்தில் வெளி­ நாட்டு தூத­ர­கங்­களைச் சேர்ந்த இரா­ஜ­தந்­தி­ரிகள் சிலரைச் சந்­தித்துத் தமது மனக்­கு­றை­க­ளையும் கவ­லை­க­ளையும், நீண்ட கால­மாகத் தீர்க்­கப்­ப­டா­துள்ள தமது பிரச்­சி­னைகள் குறி த்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான சந்­திப்பு ஒன்று ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

    ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இடம்­பெற்ற இந்தச் சந்­திப்பை, ஐ.நா. விசா­ர­ணைக்­கு­ழு­வுக்கு ஸ்கைப் ஊடாக சாட்­சி­யங்கள் வழங்­கு­வ­தற்­கான ஓர் ஏற்­பா­டாக, இர­க­சி­ய­மாகக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து, புய­லாக அங்கு சென்ற பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர், அங்­கி­ருந்­த­வர்­களை அச்­சு­றுத்தி அந்தச் சந்­திப்பை நடக்­க­வி­டாமல் குழப்­பி­ய­டித்­தனர். அங்கு குழப்பம் ஏற்­பட்­டி­ருப்­பதை அறிந்து சென்ற பொலி­சாரும், இந்தக் குழுவினருக்கு ஆத­ர­வா­கவே நடந்து கொண்­டனர்.

    காணாமல் போன­வர்­களின் குடும்­பத்­தினர் ஒன்று கூடு­வ­தையும் அவர்கள் வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­களைச் சந்­திப்­ப­தையும் அவர்கள் அனு­ம­திக்கத் தயாராக இல்லை. மிகவும் நாக­ரி­க­மற்ற முறையில், அந்த இடத்தில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் நடந்து கொண்­டதைக் கண்டு அங்­கி­ருந்த வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரிகள் விக்­கித்துப் போனார்கள். மக்கள் ஒன்­று­கூ­டு­கின்ற அடிப்­படை மனித உரி­மையை அந்த இடத்தில் இந்த அமைப்­பினர் மீறி­யி­ருந்­தனர்.

    ஏற்­க­னவே மனித உரிமை மீறல் சம்­ப­வத்தில் உற­வு­களைப் பிரிந்­துள்ள அந்தக் குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்கள் அந்தக் கும்­ப­லினால் அநா­க­ரி­க­மான முறையில் அச்­சு­றுத்­தப்­பட்­டி­ருந்­தார்கள். வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும் அவர்கள் மதிக்­கவில்லை. அவர்­க­ளை­யும்­கூட அந்தக் கும்பல் அச்­சு­றுத்தி அங்­கி­ருந்து வெளி­யேறச் செய்­தி­ருந்­தது. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்ட வேண்­டிய பொலிசார் மரு­தானை சம்­ப­வத்­தின்­போது.

    பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும், அமை­தி­யான ஓர் ஒன்று கூடல் சம்­ப­வத்தில் பானைக்­க­டையில் யானை புகுந்­த­தைப்­போன்று குழப்பம் விளை­வித்­த­வர்­க­ளுக்கு ஆத­ர­வா­கவும் நடந்து கொண்­டார்கள். இதன் மூலம் இறுதி யுத்­தத்தின்போது மட்­டு­மல்­லாமல், யுத் தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்கள் கடந்த நிலை யில் நாட்டின் தலை­ந­க­ரி­லும்­கூட, அப்­பட்­ட­மாக சட்­டத்தின் காவ­லர்­க­ளான பொலிசார் முன்­னி­லையில் மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் இந்த நாட்டில் இடம்­பெ­று­கின்­றன என்­பது, ஆதா­ர­பூர்­வ­மாக நிலை­நாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

    ஐ.நா.­வுக்கு அளித்த உறு­தி­மொழி ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யினால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள இலங்கை தொடர்­பான விசா­ர­ணை­யா­னது, இலங்­கையை இழி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சாடி­யி­ருக்­கின்றார். அது­மட்­டு­மல்ல. உரிய நோக்கம் இல்­லா­ம­லேயே ஐ.நா. மனித உரிமைப் பேரவை தனது விசா­ர­ணையை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது என்றும் எனவே, அதனை ஏற்றுக் கொள்ளப் போவ­தில்லை என்றும் அடித்து கூறி­யி­ருக்­கின்றார்.

    ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் விசா­ர­ணை­யா­னது, திடீ­ரென்று ஒரு நாள் இரண்டு நாட்­களில் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தல்ல. அல்­லது ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் ஆணை­ய­ராக இருந்த தமிழ் இனத்­துவ அடை­யா­ளத் தைக் கொண்ட நவ­நீ­தம்­பிள்­ளையின் தனிப்­பட்ட கோப தாபம், விருப்பு வெறுப்­புக்கு அமை வாக இந்த விசா­ரணை நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

    இது ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் அங்­கத்­துவ நாடு­களில் ஒன்­றா­கிய அமெ­ரிக்­கா­வினால் மூன்று தட­வைகள் இலங்­கைக்கு எதி­ராக அதன் மனித உரிமை நிலை­மைகள் தொடர்பில் தொடர்ச்­சி­யாகக் கொண்டு வந்து சபையில் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களின் அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­பட்ட விசா­ர­ணை­யாகும்.

    அது மட்­டு­மன்றி, விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடி­வுக்கு வந்த சூட்­டோடு இலங்­கைக்கு முத­லா­வது வெளி­நாட்டு இரா­ஜ­தந்­திர மட்­டத்­தி­லான விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த ஐ.நா. மன்­றத்தின் செய­லாளர் நாயகம் பான்கீ மூனுக்கு அளித்­தி­ருந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றா­ததன் விளை­வா­கவே இந்த சர்­வ­தேச விசா­ர­ணையை முன்­னெ­டுக்க வேண்­டிய நிலைமை ஐ.நா.­வுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது,

    யுத்தம் முடி­வ­டைந்து, இறுதி மோதல்கள் இடம்­பெற்ற முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் முள்­ளி­வாய்க்கால் பிர­தே­சத்தில் துப்­பாக்கிக் குண்­டுகள், எறி­குண்­டுகள் என்­ப­வற்றின் புகை மண்­டலம் படிப்­ப­டி­யாக மறைந்து கொண்­டி­ருந்த நேரம், அந்த மண்ணில் மனித உரிமை மீறல்கள், மானு­டத்­திற்கு எதி­ரான கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­க­ளினால் சிந்தப்­பட்ட இரத்தம் காய்ந்தும் காயாத நிலையில் அந்த மே மாதம் 23 ஆம் திகதி ஐ.நா. மன்றச் செய­லாளர் நாயகம் கொழும்­புக்கு விஜயம் செய்து ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவுடன் பேச்­சுக்கள் நடத்­தி­யதன் பின்னர் யுத்த பிர­தே­சத்­திற்கு மேலாக தாழப்­ப­றந்து நிலை­மை­களை அவ­தா­னித்­தி­ருந்தார்.

    மூன்று லட்சம் அக­திகள் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த மனிக்பாம் இடைத்­தங்கல் முகா­முக்கும் விஜயம் செய்து அங்­குள்ள நிலை மை­க­ளையும் நேரில் பார்த்திருந்தார். இந்த விஜ­யத்­தின்­போது, இரு தலை­வர்­க­ளுக்­குமிடையில் ஏற்­பட்­டி­ருந்த உடன்­பாட்­டை­ய­டுத்து, வெளி­யி­டப்­பட்ட இணை அறிக்­கையில் யுத்­தத்தின் பின்­ன­ரான பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நிவா­ரணம், புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம், நல்­லி­ணக்கம் ஆகிய சவால் மிகுந்த விட­யங்­களில் நீண்­ட­கால அடிப்­ப­டையில் உரிய கவனம் செலுத்தி நடவ­டி­க்கை எடுப்­பது என்றும், இது விட­யத்தில் ஐ.நா. மன்றம் ஏற்ற உத­வி­களை அதன் முகவர் அமைப்­புக்­களின் ஊடாக வழங்கும் என்றும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

    அத்­துடன், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பொரு­ளா­தார, அர­சியல் நிலை­மை­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும், ஜனா­தி­பதி ஐ.நா. மன்றச் செய­லாளர் நாய­கத்திற்கு உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். மிகவும் முக்­கி­ய­மாக சர்­வ­தே­சத்திற்கு கடப் பாடு கொண்­டுள்ள இலங்கை, சர்­வ­தேச தரத்தில் மனித உரி­மை­களைப் பேணி நடக்கும் என்ற உத்­த­ர­வா­தத்தை அன்­றைய தினம் ஜனா­தி­பதி ஐ.நா. மன்றச் செய­லாளர் நாய­கத்­திற்கு வழங்­கி­யி­ருந்தார்.

    அத்­துடன், இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­றி­ருந்த சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள், மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான உரிமை மீறல்கள் என்­ப­வற்­றிற்குப் பொறுப்பு கூறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கும் ஜனா­தி­பதி ஐ.நா. மன்ற செய­லாளர் நாய­கத்­திடம் ஒப்­புக்­கொண்டு உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். ஆனால், அந்த உறு­தி­மொ­ழி­களும், உத்­த­ர­வா­தங்­களும் காற்றில் பறக்­க­வி­டப்­பட்­டி­ருந்­தன.

    இத­னை­ய­டுத்து, சர்­வ­தேச விசா­ர­ணை­ யொன்றை நடத்த வேண்டும் என்ற ஐ.நா.வின் ஆலோ­ச­னை­யையும் அரசு ஏற்க மறுத்­தது. இந்த நிலை­யில்தான் ஐ.நா. தருஸ்மன் தலை மை­யி­லான நிபு­ணர்கள் குழு­வொன்றை அமை த்து, அதன் அறிக்­கையைப் பெற்­றி­ருந்­தது. மிக­மோ­ச­மான முறையில் இறுதி யுத்­தத்தின் போது மனித உரி­மை­களும் மனி­தா­பி­மான உரி­மை­களும் மீறப்­பட்­டி­ருந்­த­தாக அரசு மீதும், விடு­த­லைப்­பு­லிகள் மீதும் அந்த அறிக்கை குற்றம் சுமத்­தி­யி­ருந்­தது.

    அர­சாங்கம் என்ற முறையில் இலங்கை அரசு உரிமை மீறல் சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்று, மிகவும் விரி­வான முறையில் விட­யங்­களைச் சுட்­டிக்­காட்டி, வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. ஆயினும் தருஸ்மன் அறிக்­கையைப் புறந்­தள்­ளிய அர­சாங்கம் அதற்குப் பதி­லாக கற்­ற­றிந்த பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைத்து விசா­ர­ணை­களை நடத்தி அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தது.

    அந்த நட­வ­டிக்­கையை சர்­வ­தேசம் வர­வேற்­றி­ருந்த போதிலும், அதன் செயற்­பா­டுகள், முடி­வுகள், சிபா­ரி­சுகள் என்­பன கடு­மை­யான விமர்­ச­னத்திற்கு உள்­ளா­கி­யி­ருந்­தன. இருந்த போதிலும், நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான கால அவ­கா­சத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவை வழங்­கி­யி­ருந்­தது. அதனால் பய­னேதும் ஏற்­ப­டாத நிலை­யி­லேயே ஐ.நா.வின் சர்­வ­தேச விசா­ர­ணைக்­காகக் குழு­வொன்று அமைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

    இந்த விசா­ர­ணை­களை எள்ளி நகை­யாடும் வகை­யி­லேயே காணாமல் போன­வர்கள் தொடர் பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­பட்டு கண்­து­டைப்பு ரீதி­யி­லான விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­வ­தா­கவும், அதற்கு ஒரு சர்­வ­தேச அந்­தஸ்தை வழங்கும் வகையில் சர்­வ­தேச மனித உரிமை வல்­லு­னர்­களை ஆலோ­ச­கர்­க­ளாக அரசு நிய­மித்­தி­ருப்­ப­தாக பல மட்­டங்­க­ளிலும் விமர்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

    இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் இலங்­கையின் வெளி­யு­றவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐ.நா. விசா­ர­ணை­யா­னது, இலங்­கையை இழி­வு­ப­டுத்தும் வகையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்று கூறி­யி­ருக்­கின்றார். இலங்கை என்ற ஜன­நா­யக நாட்டை, இறை­மை­யுள்ள மக்­களைக் கொண்ட அந்த தீவ­கத்தை யார் என்ன வகையில் இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை வரலாற்றுச் சம்பவங்களை இரை மீட்டுப் பார்ப்பவர்களால் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும். ஏனென்றால் கைப்புண்ணுக்குக் கண்ணாடி அவசியமில்லைத்தானே?

    -செல்­வ­ரட்னம் சிறி­தரன் -
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஐ.நா. விசாரணையும் அரசாங்கத்தின் எதிர்ப்பும் -வீரகேசரி Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top