போலி நாடகம் - அரசியல் தீப்பொறி - TK Copy போலி நாடகம் - அரசியல் தீப்பொறி - TK Copy

  • Latest News

    போலி நாடகம் - அரசியல் தீப்பொறி


    மருண்­ட­வ­னுக்கு இருண்­ட­தெல்லாம் பேயாகத்
    தெரியும். அதே­நே­ரத்தில் மோச­மான ஆபத்தில் இருப்­ப­வ­னுக்குக் தெரி­வ­தெல்லாம் தன்னைக் காப்­பாற்­று­வ­தற்­காக வந்­துள்ள தேவ­தை­யா­கவே தெரியும். இந்த மன­நி­லை­யில்தான் இன்று தமிழ் மக்­களும், தமிழ் அர­சியல் தலை­வர்­களும் இருக்­கின்­றார்கள்.

    இலங்­கையில் சிவில் யுத்தம் ஒன்று மூள்­வ­தற்கு முன்னர் சமா­தான வழியில் எப்­ப­டி­யா­வது அர­சியல் பிரச்­சி­னைக்குத் தீர்வு கிட்டும் என்று எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள். அரச கட்­டிலில் இருந்த தலை­வர்கள் அப்­போது அந்­தந்த அர­சியல் சந்­தர்ப்­பங்­க­ளுக்­காகக் கூறிய வார்த்­தை­களும், சந்­தர்ப்­பங்­க­ளுக்­காக ஒப்­பந்­தங்கள், உடன் ப­டிக்­கைகள் என்ற பெயரில் இடப்­பட்ட கையெ­ ழுத்­துக்­க­ளையும் மலை­போல நம்­பி­யி­ருந்­தார்கள். இவற்றின் மூலம் பிரச்­சி­னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள்.

    ஆனால் ஏமாற்­றந்தான் மிஞ்­சி­யது. அர­சியல் தீர்வு காண்­ப­தற்­காக தமிழ் அர­சியல் தலைவர்கள் காட்­டிய வழி­களில் எல்லாம் மக்கள் போராட்­டங்­களில் ஈடு­பட்­டார்கள். ஆனால், அடக்­கு­மு­றைகள் மூல­மா­கவே அர­சாங்கம் அவற்­றுக்குப் பதி­ல­ளித்­தது. போராட்­டங்­களை ஓர் உந்து சக்­தி­யாகக் கணித்து, பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு அர­சாங்­கங்கள் முன்­வ­ரவே இல்லை.

    ஒன்­றி­ரண்டு சந்­தர்ப்­பங்­களில் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சிகள் என்ற பெயரில் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் எல்­லாமே சந்­தர்ப்­பத்­திற்­கான நட­வ­டிக்­கை­க­ளா­கவே அமைந்­தி­ருந்­தன. நிர்ப்­பந்­தங்கள் கார­ண­மா­கவும், அப்­போது எழுந்­தி­ருந்த அழுத்­தங்­களை சமா­ளிப்­ப­தற்­கா­க­வுமே அந்தச் செயற்­பா­டு­களை அர­சாங்­கங்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தன. உள்­ளார்ந்த விருப்­பத்­தோடும், நேர்­மை­யான வழி­யிலும் அந்த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

    இதனால், உரி­மை­க­ளுக்­கான போராட்டம் என்­பது, அர­சாங்கம் மேற்கொண்ட அடக்­கு­முறை நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக, ஒரு வகையில் தமிழ் மக்­களின் பாது­காப்­புக்­கான நட­வ­டிக்­கை­யா­கவும் மாற நேர்ந்­தது. உண்­மையில் இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான தமிழ் மக்­களின் முயற்­சி­யா­னது, போராட்­டமும் பாது­காப்பும் இணைந்த ஓர் ஆயுதப் போராட்­ட­மாகப் பரி­ண­மித்­தி­ருந்­தது என்றே கூறவேண்டும்.

    இதன் கார­ண­மா­கத்தான், விடு­த­லைப்­பு­லிகள் ஏனைய ஆயு­த­மேந்­திய தமிழ் அமைப்­புக்­களை ஆயுத 'ரீதி­யாக ஓரங்­கட்டி' விடு­த­லைப்­பு­லிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுத்­தி­ருந்த ஆயுதப் போராட்­டத்தின் மூலம் தங்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்கும் என்று பெரும்­பான்­மை­யான தமிழ் மக்கள் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தார்கள்.

    ஆனால் அந்தப் போராட்­டமும், அர­சாங்­கத்தின் சாது­ரி­ய­மாகத் திட்­ட­மிட்ட இரா­ஜ­தந்திர நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக 2009 ஆம் ஆண்டு தோற்­க­டிக்­கப்­பட்­டது. இதற்கு விடு­த­லைப்­பு­லி­களின் பல­வீ­ன­மான இரா­ஜ­தந்­திர பல­வீன நட­வ­டிக்­கைகள் ஒரு முக்­கிய கார­ண­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது.

    2001 ஆம் ஆண்டு செப்­டம்பர் 11ஆம் திகதி அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகர வர்த்­தகமையத்தின் இரட்டைக் கோபுரக் கட்­ட­டங்கள் மீதும், அமெ­ரிக்க பாது­காப்புத் தலை­மை­ய­மா­கிய பென்­டகன் மீதம், வாஷிங்டன் மீதும் அல்கொய்தா அமைப்­பி­னரால் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தற்­கொலை தாக்­கு­தல்­களின் பின்­ன­ரான, பயங்­க­ர­வா­தத்திற்கு எதி­ரான உலக போக்கின் ஒழுங்கைக் கடைப்­பி­டித்து,

    விடு­த­லைப்­பு­லி­க­ளையும் பயங்­க­ர­வா­தி­க­ளாக - அந்த அமைப்பை மிகவும் மோச­மான பயங்­க­ர­வாத அமைப்­பாக உல­குக்கு சித்திரித்­தி­ருந்த இலங்கை அர­சாங்­கத்தின் தந்­தி­ரோ­பாயச் செயற்­பாடும் விடுத­லைப்­பு­லி­களின் அர­சியல் போராட்டம் தோல்­வி­ய­டைந்­த­மைக்கு மற்­று­மொரு முக்­கிய கார­ண­மாகக் கூறப்­ப­டு­கின்­றது.

    மிகுந்த அர­சியல் எதிர்­பார்ப்­புக்கள் ஆயுத பலத்­திலும், ஆயுத போராட்ட உத்­தி­களில் தலை­சி­றந்­த­வர்­க­ளா­கவும் திகழ்ந்த விடு­த­லைப்­பு­லி­களின் தலை­மையில் நிச்­ச­ய­மாக இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று தமிழ் மக்கள் மலை­போல நம்­பி­யி­ருந்­தார்கள். இந்த நிலையில் தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில், விடு­த­லைப்­பு­லி­களின் வீழ்ச்­சி­யா­னது, சிறிதும் எதிர்­பா­ராத வகையில் ஒரு பேரி­டி­யா­கவே வந்­தி­றங்­கி­யது.

    இருப்­பினும், விடு­த­லைப்­பு­லி­களை இல்­லா­தொ­ழித்த பின்னர் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச தலை­மையி­லான அர­சாங்கம், போரினால் தமிழ் மக்கள் அடைந்த வேத­னைகள், துன்ப துயரங்கள், அளப்­ப­ரிய இழப்­புக்­களைக் கவனத்திற்கொண்டு நியா­ய­மான ஓர் அர­சியல் தீர்வை வழங்கும் என்று எதிர்­பார்த்­தார்கள். ஆனால் அது நடக்­க­வில்லை.

    அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் சிறிதும் ஆர்­வ­மற்ற முறை­யி­லேயே அர­சாங்கம் யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் கடந்த ஐந்து ஆண் டு­க­ளாக நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. சாதா­ரண நிலை­மை­களில் மட்­டு­மல்லால், யுத்தம் தீவி­ர­ம­டைந்­தி­ருந்த நேரத்­திலும், இந்­தி­யாவும், ஐ.நா. சபையும் அமெ­ரிக்கா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­களும் தங்கள் துயரைப் போக்கி, இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு, அனைத்துத் தரப்­பி­னரும் முன்­வ­ரு­வார்கள், என்று மிகுந்த ஆர்­வத்­தோடு தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள்.

    யுத்­தத்­தினால் ஏற்­பட்­டி­ருந்த மோச­மான பாதிப்­புகள் மட்­டு­மல்­லாமல், அந்­நியர் ஆட்­சியில் இருந்து இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர், பேரி­ன­வாத சிங்­கள அர­சியல் கட்சி­க­ளி­னாலும், பேரி­ன­வாத அர­சு­க­ளி­னாலும் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த திட்­ட­மிட்ட அடக்­கு­மு­றை­களும் ஒடுக்கு முறை­களும் இதற்கு முக்­கிய கார­ணங்­க­ளாக இருந்­தன. இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு கிடைக்கும், சர்­வ­தே­சமும், ஐ.நா. சபையும், குறிப்­பாக இந்­தி­யாவும் ஏதோ ஒரு வழியில் - ஏதோ ஒரு வகையில் தங்­க­ளுக்கு அப­ய­ம­ளிப்­பார்கள், அமை­தி­யான வாழ்க்­கையை ஏற்­ப­டுத்தித் தரு­வ­தற்கு உதவி புரி­வார்கள் என்ற எதிர்­பார்ப்பு பல வழி­க­ளிலும் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் மத்­தியில் தொடர்ந்து நில­வி­யது.

    அது இன்னும் தொடர்­வ­தையே காண முடி­கின்­றது. அர­சியல் தீர்­வுக்­கான தென்­னா­பி­ரிக்­காவின் அனு­ச­ரணை முயற்சி, இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக அமைந்திருக்­கின்­றது என்றால் அது மிகைப்­ப­டுத்­தப்­பட்ட கூற்­றாகமா­டாது. தமிழ் மக்கள் மட்­டு­மல்ல, பழுத்த அர­சியல் அனு­பவம் வாய்ந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும், பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய ஆர்.சம்­பந்­தனும் தென்­னா­பி­ரிக்­காவின் அனு­ச­ர­ணையில் அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­படும், என்ற எதிர்­பார்ப்பைக் கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்க விட­யமாகும்.

    நெல்லை, யார் குற்­றி­னா­லும்­சரி, அரிசி­யானால் சரி என்று சொல்­வார்கள். இது சுய­மு­யற்­சிகள் தோல்­வி­ய­டைந்து முயற்­சி­களில் நம்­பிக்கை இழந்த நிலையில் ஏற்­ப­டு­கின்ற ஒரு எதிர்­பார்ப்பு நிலை­மையின் வெளிப்­பா­டாகும். இந்த நிலை­யில்தான் தென்­னா­பி­ரிக்­காவின் அனு­ச­ர­ணையில் அர­சியல் தீர்­வொன்று ஏற்­படும் என்ற எதிர்­பார்ப்பும் அமைந்­தி­ருந்­தது. தென்­னா­பி­ரிக்கா தனது இனப்­பி­ரச்­சி­னைக்கு அமைதி வழியில் ஓர் அர­சியல் தீர்வைக் கண்ட அனு­ப­வத்தைக் கொண்ட ஒரு நாடு. அதன் அனு­ப­வமும், அர­சியல் முதிர்ச்­சியும் நல்­ல­தொரு வழி­காட்­டி­யாக தங்­க­ளுக்கு அமையும் என்று தமிழ் மக்­களில் பலரும், தமிழ் அர­சியல் தலை­வர்­களில் பலரும் எதிர்­பார்த்­தி­ருந் தார்கள்.

    ஆயினும் தென்­னா­பி­ரிக்­காவின் அனு­சரணை என்­பது எத்­த­கைய ஒரு சூழலில் எப்­படி செயல்­வ­டிவ நிலை­மைக்கு மேல் எழுந்­தி­ருந்­தது என்­பதை ஆழ­மாக அவர்கள் சிந்­திக்கத் தவ­றி­விட்­டார்கள் என்றே தோன்­று­கின்­றது. தென்­னா­பி­ரிக்­காவின் வருகை விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தின் இறு­திக்­கட்டச் சமர்­க­ளின்­போது, அரச படைகள் மிக­மோ­ச­மான மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தன.

    மனித குலத்­திற்கு எதி­ராக சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­களை மிக மோச­ மாக மீறி­யி­ருந்­தன என்ற குற்­றச்­சாட்டு சர்­வ­தேச அளவில் எழுந்­தி­ருந்த நேரம் அது. ஐ.நா. சபையில் மூன்­றா­வது தட­வை­யாக மனித உரிமை மீறல் விட­யத்தில் தனக்கு எதி­ரான பிரே­ர­ணையை அர­சாங்கம் அப்­போது எதிர்­கொண்­டி­ருந்­தது.

    ஜன­நா­யக உரி­மை­களை நிலை­நி­றுத்­து­வ­தற்­காக, நிறை­வேற்று அதி­காரப் பலத்தைக் கட்­டுப்­ப­டுத்தும் வகையில் சிறப்­பான ஏற்­பா­டு­களைக் கொண்­டி­ருந்த அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றங்­களைக் கொண்டு வரு­வ­தற்­காக, அவ­சர அவ­ச­ர­மாகக் கொண்டு வரப்­பட்ட பதி­னெட்­டா­வது அர­சியல் திருத்தம் பாராளு­மன்­றத்தின் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்தின் உத­வி­யோடு, அப்­போது சட்­ட­மாக்­கப்­பட்­டி­ருந்­தது.

    இதன் மூலம் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஒரு ஜனா­தி­பதி கட்­டுப்­பா­டின்றி தேர்­தலில் போட்­டி­யிட்டு, ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிப்­ப­தற்­கான வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆணைக்­கு­ழுக்­களின் மூல­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வந்த காரி­யங்கள் அனைத்தும், தனி நப­ரா­கிய ஜனா­தி­பதி தனது இஸ்­டத்­தி­ற்கு யாரு­டைய தய­வின்­றியும், எத்­த­கைய கட்­டுப்­பா­டின்­றியும் மேற்­கொள்ள முடியும் என்ற அதி­காரம் இதன் மூலம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

    இந்தப் பின்­ன­ணியில், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட நிர்­வாகப் பல­மா­கிய ஜனா­தி­ப­தியின் விருப்­பத்தைத் தூக்­கி­யெ­றிந்து, நீதித்­து­றையின் சுதந்­தி­ரத் தைப் பேணி நடந்து கொண்­டி­ருந்த கார­ணத்­தினால், பாரா­ளு­மன்­றத்தின் அர­சியல் செல்­வாக்கையும், அர­சியல் அதி­கா­ரத்­தையும் பிர­யோ­கித்து பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்கா பத­வியில் இருந்து அப்­போது தூக்­கி­யெ­றி­யப்­பட்­டி­ருந்தார்.

    இந்த நிலை­மை­யில்தான் பொது­ந­ல­வாய மாநாடு கொழும்பில் நடை­பெ­று­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. அத்­துடன் அதன் தலைமைப் பொறுப்பை மரபு வழி­யின்­படி, இலங்­கையின் அரச தலைவர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச ஏற்­றுக்­கொள்­ள­வி­ருந்தார். இறுதி­யாக நடை­பெற்ற இந்த பொது­ந­ல­வாய மாநாடு ஜன­நா­யக உரி­மை­களைத் துச்­ச­மாக மதிக்­கின்ற ஒரு நாட்டில் நடை­பெ­று­வதை உறுப்பு நாடுகள் பல விரும்­ப­வில்லை.

    அதற்கு எதி­ ராக அவைகள் போர்க்­கொடி உயர்த்­தி­யிரு­ந்­தன. ஜன­நா­யக விழு­மி­யங்கள் போற்றிப் பாது­காக்­ கப்­ப­டாத ஒரு நாட்­டிற்கு, ஜன­நாயக உரி­மை­க­ளையும், ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளையும் உயிர் மூச்­சாகக் கொண்ட பொது­ந­ல­வாய அமைப் பின் தலைமைப் பத­வியை வழங்க முடி­யாது என்று அந்த நாடுகள் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்தன.

    சுருக்­க­மாகச் சொல்­வ­தானால், பொது­ந­ல­வாய அமைப்பின் உறுப்பு நாடுகள் மத்­தியில் இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருந்த பொது­ந­ல­ வாய மாநாடு பெரி­யதோர் பூகம்­பத்தையே ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்றே கூறவேண்டும். ஆயினும் பொது­ந­ல­வாய மாநாட்டை எப்­ப­டி­யா­வது கொழும்பில் நடத்­தி­விட வேண்டும் என்று உறு­தி­யாகச் செயற்பட்டு வந்த அர­சாங்கம் தன்­மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்­தையும் அப்­பட்­ட­மாக மறுத்­தி­ருந்­தது.

    அது மட்­டு­மல்­லாமல் பொது­ந­ல­வாய அமைப்பின் தலைமைப் பொறுப்பை இதன் மூலம் ஏற்­றுக்­கொண்டால், தன்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாத வகையில் ஒரு கவ­ச­மாக அமையும் என்று அர­சாங்கம் கரு­தி­யது. 'இறுதி யுத்­தத்­தின்­போது, அரச படைகள் எந்­த­வி­த­மான மனித உரிமை மீறல்­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை.

    சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­களும் மீறப்­ப­ட­வில்லை. 'பொது­மக்­களின் உயி­ரி­ழப்பே இல்­லாத - ஸீரோ கசு­வா­வ­லிட்டி' கொள்­கை­யையே அர­சாங்­கமும், அரச படை­யி­னரும் பின்­பற்­றி­யி­ருந்­தார்கள். இதன் அடிப்­ப­டையில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவே (தொடர்ச்சி 23ஆம் பக்கம் பார்க்க) இரா­ணுவ தாக்­கு தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. பொது மக்கள் எவரும் அரச படை­யி­னரால் கொல்­லப்­ப­ ட­வில்லை.

    பயங்­க­ர­வா­திகள் மாத்­தி­ரமே கொல்­லப்­பட்­டார்கள். பயங்­க­ர­வா­தி­க­ளினால் கேட­ய­மாகப் பிடித்து வைக்­கப்­பட்­டி­ருந்த மூன்று லட்சம் பொது­மக்­களை அரச படைகள் இந்த யுத்­தத்தின் மூலம் பாது­காப்­பாக மீட்­டெ­டுத்து, அவர்­களைப் பரா­ம­ரித்து, பாது­காப்­பாக மீள்­கு­டி­யேற்றம் செய்து அர­சாங்கம் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சத்தை முன்­னெப்­போதும் இல்­லாத வகையில் அபி­வி­ருத்தி செய்து வரு­கின்­றது. இந்த நிலையில் அர­சாங்­கத்தின் மீது அபாண்­ட­மாக மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது' என்று அர­சாங்கம் தனது பிர­சா­ரத்தை முடுக்­கி­விட்­டி­ருந்­தது.

    இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் தென்­னா­பி­ரிக்­காவும் பொது­ந­ல­வாய மாநாட்டில் பங்­கு­பற்­று­வ­தற்­காக கொழும்­புக்கு வந்­தி­ருந்­தது. எரியும் பிரச்­சி­னை­யாக நாட்டில் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்கு தென்­னா­பி­ரிக்­காவின் அனு­ப­வத்தைப் பின்­பற்றி, அதன் ஊடாக ஓர் அர­சியல் தீர்வைக் காணலாம். அதற்கு தென்­னா­பி­ரிக்கா அரசு உதவ வேண்டும் என்று ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச தென்­னா­பி­ரிக்­கா­விடம் கேட்­டி­ருந்தார்.

    இந்த வகை­யில்தான் அர­சியல் தீர்­வுக்­கான தென்­னா­பி­ரிக்­காவின் அனு­ச­ரணை முயற்சி தோற்றம் பெற்­றி­ருந்­தது. தென்­னா­பி­ரிக்க அனு­ச­ரணை எந்த அள­வுக்கு சாத்­தி­ய­மா­னது? தென்­னா­பி­ரிக்­காவின் இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்­தி­லான அனு­ப­வத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம் என்று இலங்கை அப்­போது கூறி­யி­ருந்­த­மைக்கு, அப்­போ­தைய சர்­வ­தேச அழுத்­தங்­களும், அர­சியல் அழுத்­தங்­களும் முக்­கிய கார­ணங்­க­ளாக அமைந்­தி­ருந்­தன.

    அந்த அழுத்­தங்­களில் இருந்து அர­சியல் தீர்வு காண வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­ய­வர்­களின் கவ­னத்தில் சல­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான உத்­தி­யா­கவும் அர­சாங்கம் இந்த கூற்றை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்றே கொள்ள வேண்­டி­யி­ருக்­கின்­றது. இதன் மூலம் இலங்கை அர­சாங்கம் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்கும் புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு ஜன­நா­யக வழி­மு­றையில் முடிவு காண்­ப­தற்கு முயற்­சிக்­கின்­றது என்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­தவும், அதன் மூலம், தன்­மீ­தான அழுத்­தங்­களைச் சற்று இல­கு­ப­டுத்­தவும் அது எண்­ணி­யி­ருந்­தது.

    அதே­நேரம் அந்த முயற்­சியை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்போ அல்­லது தமிழர் தரப்பி­னரோ அதிகம் வலி­யு­றுத்தி அதனை முன்­னெ­டுக்க வேண்டும் என்று முனை­ய­மாட்­டார்கள் என்றும் அர­சாங்கம் நன்­றாக அறிந்து வைத்­தி­ருந்­தது. ஏனென்றால் பொது­ந­ல­வாய கொழும்பு சூழலில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டுள்ள அழுத்­தத்தை மேலும் பலப்­ப­டுத்­தவே அந்தத் தரப்­புக்கள் முனையும் என்றும் அர­சாங்கம் உறு­தி­யாக நம்­பி­யி­ருக்க வேண்டும்.

    எனவே, இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண வேண்டும் என்று முயற்­சிப்­ப­வர்­களின் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டாத ஒரு சூழலில் தானே முயற்­சிக்­கின்ற அர­சியல் தீர்வு முயற்­சி­க­ளுக்கு அதிக கவனம் அவர்கள் தரப்­பி­லி­ருந்து வர­மாட்­டாது என்­பதை அரசு நன்கு அறிந்து வைத்துக் கொண்டு இந்த முயற்­சியை சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை தனக்கு சார்­பான வகையில் ஈர்ப்­ப­தற்­காக மேற்­கொண்­ருந்­தது என்ற முடி­வுக்கு வர­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

    தென்­னா­பி­ரிக்­காவின் அனு­ச­ரணை கோரிக்­கை­யை­யடுத்து அங்கு சென்­றி­ருந்த அரச குழு­வினர் அர­சியல் தீர்வு பற்றி பேச்­சுக்கள் நடத்­தாமல், அப்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் கொண்டு வரப்­ப­ட­வி­ருந்த இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணைக்கு எதி­ராகச் செயற்­பட வேண்டும், வாக்­கெ­டுப்பு ஒன்று இடம்­பெற்றால், இலங்­கைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்க வேண்டும் என்று கோரி­யி­ருந்­தனர்.

    அர­சியல் தீர்­வுக்­கான தென்­னா­பி­ரிக்­காவின் அனு­ச­ரணை என்ற போர்­வையில் ஐக்­கிய நாடுகள் சபையில் ஏற்­பட்­டி­ருந்த நெருக்­க­டியைத் தளர்த்­து­வ­தற்­காக அந்த நாட்­டி­னதும், அதன் நட்பு நாடு­க­ளி­னதும் ஆத­ரவைப் பெறு­வ­தற்கே அர­சாங்கம் முயற்­சித்­தி­ருந்­தது. உண்­மை­யா­கவே அர­சாங்கம் அர­சியல் தீர்­வுக்கு விரும்­பி­யி­ருந்தால், மனப்­பூர்வ­மாக முயற்­சித்­தி­ருந்தால், தென்­னா­பி­ரிக்­கா­விடம் அனு­ச­ரணை குறித்து விரி­வாகப் பேச்­சுக்கள் நடத்­தி­யி­ருக்கும். அது­பற்­றிய உத்­தேச செயல்­வ­டிவம் ஒன்றை கைய­ளித்து அதற்­கான நிகழ்ச்சி நிரல் ஒன்­றையும் தயா­ரித்­த­ளித்­தி­ருக்கும்.

    இது நடை­பெ­ற­வில்லை. மாறாக, தனது கடும்­போக்கு ஆத­ர­வா­ளர்­களைக் கொண்டு தென்­னா­பி­ரிக்­காவின் விசேட தூதுவர் சிறில் ரம­போ­ஸாவின் வரு­கைக்கு அரசு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­ததைக் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. எனவே, நடை­பெற்ற சம்­ப­வங்கள், அவற்றின் பின்­ன­ணிகள் என்­ப­வற்றை வைத்துப் பார்க்­கும்­போது, அர­சாங்கம் தென்­னா­பி­ரிக்க அனு­ச­ரணை என்ற போலி நாட­கத்தை நடத்­தி­யி­ருப்­பதை உணர்ந்து கொள்ள முடியும்.

    தென்­னா­பி­ரிக்­காவின் விசேட தூது­வரின் வரு­கையை எதிர்க்கச் செய்த அரச தரப்பு இருந்து அவ­ரு­டைய வருகை, அவ­ருடன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தைகள் பற்றி வாயைத் திறக்­கவே இல்லை. இறுக்­க­மான ஒரு மௌளத்தைக் கடைப்­பி­டித்­தி­ருக்­கின்­றது. அரசின் இந்தச் செயற்­பா­டும்­கூட, அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் அதன் அக்­க­றை­யற்ற நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

    எனவே, அர­சியல் தீர்வு காண வேண்டும் என்ற விட­யத்தில் கிடைக்­கின்ற துரும்பைப் பிடித்­துக்­கொண்டு கரை­யேறத் துடிக்­கின்ற தமிழர் தரப்­பினர் நிலை­மை­களை சீர்தூக்கிப் பார்த்து தமது தமது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்துவது நல்லது. நிலைப்பாடுகளைக் கொள்வதும் நல்லது. அவ்வாறில்லாவிட்டால் வீணாக எதிர்பார்த்து, மோசமான முறையில் ஏமாற்றமடையவே நேரிடும் என்பதில் ஐயமில்லை. Close
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: போலி நாடகம் - அரசியல் தீப்பொறி Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top