பாலச்சந்திரன் படுகொலையை நியாயப்படுத்துகிறதா ‘புலிப்பார்வை‘ திரைப்படம் - TK Copy பாலச்சந்திரன் படுகொலையை நியாயப்படுத்துகிறதா ‘புலிப்பார்வை‘ திரைப்படம் - TK Copy

  • Latest News

    பாலச்சந்திரன் படுகொலையை நியாயப்படுத்துகிறதா ‘புலிப்பார்வை‘ திரைப்படம்


    ரட்சகன் படத்தை இயக்கிய பிரவீன் காந்த்தின்
    இயக்கத்தில் பாரி வேந்தர் வழங்க வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்க, புலிப் பார்வை என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு அண்மைக்காலமாக இரண்டு ரெயிலர்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் வகையில் படத்தில் சில காட்சிகள் உள்வாங்கப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரியது.

    இந்த திரைப்படத்தில் மிகவும் சிறிய வயதுடைய சிறுவர்கள் பயிற்சி எடுப்பது போன்ற காட்சிகளும் அந்த சிறுவர்களுள் நிராயுதபாணியாக சரணடைந்து சிங்களப்பேரினவாதிகளால் படுகொலைசெய்யப்பட்ட தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் இணைந்து பயிற்சி எடுப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
    இன்னொரு காட்சியில் மிகவும் சிரமமான பயிற்சிகளை பாலச்சந்திரன் எடுப்பதுபோலவும் கைத்துப்பாக்கியில் சுடுவது போன்றதும் கனரக துப்பாக்கியை வைத்திருப்பது போன்ற காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

    விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு விருப்பத்துடன் இணையும் வயதில் குறைந்த சிறுவர்களை புலிகளே அவர்களால் பாராமரிக்கப்பட்டுவந்த செஞ்சோலை,காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு கல்வி அறிவு போதிக்கப்பட்டு விரும்பினால் அவர்கள் குறிப்பிட்ட வயதை அடையும் போது இயக்கத்தில் இணையலாம் என்பது வழமை.

    ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகள் அப்பாவிச்ச சிறுவனான பாலச்சந்திரனை நிராயதபாணியாக கைது செய்து சுட்டுக்கொன்றமை சர்வதேச போர்க்குற்ற மீறல் எனத் தெரிவித்து அதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேளை.


    அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுபோல அந்த பாலகனையும் கைத் துப்பாக்கியும் விடுதலைப்புலிகளின் வரிச்சீருடையுடன் கைதுசெய்து அழைத்துவருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளமை மிகவும் ஆச்சரியப்பட வைப்பதோடு இறுதி இனவழிப்பு கொடுமையினை தமிழ்நாட்டிற்கு திரிபுபடுத்தி வைளியிட முயற்சிக்கிறார்களா என எண்ணத்தோன்றுகின்றது.

    அத்தோடு அதில் தோன்றும் போராளிகளில் சீருடை மற்றும் படையினரின் சீருடைகள் நியத்தில் அவர்கள் பயன்டுத்தும் சீருடைகளுடன் வேறுபடுகின்றன.

    ஒரு விடுதலைப்போராட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தியதாக கூறிக்கொண்டு யதார்த்தத்திற்கு புறம்பான வகையில் நிகழ்வுகளை சித்தரிப்பது மேலும் ஈழத்தமிழர்களை வேதனைப்படுத்துவதாக அமைவதோடு, போராட்டம் தொடர்பில் தவறான புரிதல்களையும் ஏற்படுத்திவிடும்.

    எனவே இது தொடர்பாக தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள்,ஆர்வலர்கள் விரைந்து செயற்பட்டு புலிப்பார்வை திரைப்படத்தின் ஆதாரமற்ற விடயங்களை நீக்குவதோடு உண்மையான போராட்ட நிகழ்வுகளை மையப்படுத்தும் காட்சிகளை தத்துருவமாக வெளிவருவதற்கு ஒத்துழைப்பும் ஆலோசனையும் வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.

    இதனை தயாரிப்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் இந்த திரைப்படம் மூலமாக போராட்டத்தை சிதைப்பதற்கும் அதன் உண்மைத்தன்மையை மூடிமறைப்பதற்கும் வேறு யாராவது  பின்னணியில் செயற்படுகின்றார்களா என்பதை அனைவரும் ஆராய வேண்டும்.

    இது தொடர்பான கருத்துக்களை வாசகர்களும் கீழ்க்குறிப்பிடும் முகநூல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் இந்த திரைப்படத்தை ஓர் வரலாற்று ஆவணமாக தயாரிப்பதற்கு உதவும் என நம்புகின்றோம்.
    https://www.facebook.com/pulipaarvai/info 


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பாலச்சந்திரன் படுகொலையை நியாயப்படுத்துகிறதா ‘புலிப்பார்வை‘ திரைப்படம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top