ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமருக்கும்
இடையில் அண்மையில் இடம்பெற்றிருந்த சந்திப்பின் போது அவர்களுக்கு இடையிலான உரையாடலின் சிறிய பகுதி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பெயர் குறிப்பிடாத இந்திய அதிகாரி ஒருவரின் உதவியுடன் இந்த உரையாடல் பெறப்பட்டது.
இந்த சந்திப்பின் ஒரு கட்டத்தில், நரேந்திரமோடி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கேட்கிறார்.
மோடி: மறுசீரமைப்பு சம்பந்தமான திட்டங்கள் எந்த அளவு அமுலாக்கப்பட்டிருக்கிறது?
மகிந்த: கட்டம் கட்டமாக செய்து வருகிறோம்.. அனைத்தையும் ஒரே இரவில் செய்துவிட முடியாதே
மோடி: யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன இதற்கு மேலும் உங்களுக்கு காலம் தேவைப்படுகிறதா?
(மகிந்த மௌனமாக சிரிக்கிறார், அருகில் இருந்து வெளிவிவகார செயலாளர் சுஜாத்தா சிங்கை பார்த்து மோடி கேட்கிறார்..)
மோடி : மகிந்த, மன்மோகன் சிங்கிடம் என்னென் உறுதி மொழிகளை வழங்கி இருக்கிறார்?
சுஜதாசிங்: நிறைய விடயங்களை கூறி இருந்தார். முக்கியமாக 13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
மோடி: அதனை உடனடியாக செய்யுங்கள் நீங்கள் வழங்கிய உறுதிமொழியை நீங்கள் மறந்திருக்கலாம். மன்மோகன் சிங் ஒரு கனவான் (ஜென்டில்மென்). அவர் உங்களை மீண்டும் மீண்டும் இந்த விடயத்தில் தொல்லை செய்திருக்கமாட்டார். ஆனால் என்னையும் அவரை போல பொம்மை என்று நினைக்காதீர்கள்.
(மகிந்த முகத்தை துடைத்துக் கொண்டு சிரிக்கிறார்)












