பாரிஸ் நகரில் நடைபெற்ற முதலாவது உலக மக்கள் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் பிரான்சு நாட்டின் தமிழீழ உதைபந்தாட்ட அணி, இறுதி போட்டியில் தென் சஹாரா அணியை 6 க்கு 3 என்ற இலக்கில் வெற்றியீட்டி முதலாவது மக்கள் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.
காலனித்துவ ஆட்சியால் பாதிக்கப்பட்ட நாடுகள், காலனித்துவ ஆட்சியால் பாதிப்புக்கு உள்ளான மக்களின் பாதுகாப்புக்கு போராடும் அமைப்புடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, குர்திஸ்தான் மக்கள் அமைப்பு ஒன்று சேர்ந்து நடாத்திய இந்த முதலாவது உலக மக்கள் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் பிரான்சை சேர்ந்த குர்திஸ்தான்,
புதிய கலிடோனியாவின் உரித்துடைய மக்கள் அணி, தென் சஹாரா அணி, பிரேசில் சிக்க மண்டோஸ் மக்கள் அணி, அபிரிக்க காலனி ஆட்சியால் பதிக்கப்பட்ட மக்கள் அணி, ரோம் அணி ஆகியவற்றுடன் பிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணியும் இந்த முதலாவது உலக மக்கள் கிண்ண போட்டியில் கலந்து கொண்டன.
பிரான்சில் தமிழ் மக்கள் இடைய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க செயல் படும் தமிழீழ விளையாட்டுத்துறை, உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கும் எமது பாராட்டை நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.
செய்தி: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு