குற்றவாழிகளை தெரியேல்லையாம் மக்களிடம் உதவி கேட்கும் பொலீஸ் - TK Copy குற்றவாழிகளை தெரியேல்லையாம் மக்களிடம் உதவி கேட்கும் பொலீஸ் - TK Copy

  • Latest News

    குற்றவாழிகளை தெரியேல்லையாம் மக்களிடம் உதவி கேட்கும் பொலீஸ்


    கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சுக்குள்
    அத்துமீறி நுளழந்த பௌத்த துறவிகளை அடையாளம் காணமுடியவில்லை என்றும் அதற்கு பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர். கடந்த ஏப்பிரல் 23 ஆம் திகதி அமைச்சு அலுவலகத்திற்குள் வட்டரக்க விஜித தேரர் இருப்பதாக கூறி அவரை தேடிவந்த சிங்கள துறவிகள் தாம் பொது பல சேனா அமைப்பினர் எனப்பிரஸ்தாபித்திருந்தனர். இருந்தும் தற்போது பொலிஸார் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்துள்ளமை வியப்பளித்துள்ளது. 
    முன்னர் விசாரணைகளில் அமைச்சின் சி.சி.ரி.வி கமராக்களும் செயற்படவில்லை எனப் பொலிஸார் பொய்கூறியிருந்தனர். இருந்தும் இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட காணொளிகள் வெளியாகியிருப்பதனால் அதில் தோன்றும் முகங்களையும் அடையாளம் காணமுடியாதா? என பொதுமக்கள் விசனமடைந்துள்ளனர்.

    அண்மையில் தாக்கப்பட்ட விஜித தேரரும் தானே விழுந்து படுத்திருந்ததாக கூறிய் பொலிஸார் தேரரை மிரட்டி பொய் வாக்குமூலம் பெற்றதாக அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்தார். இதே போற்று அண்மையில் வத்தளையில் சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்திருந்த மேவின் சில்வா பின்னர் விசாரணையில் அவரே மரத்தில் கட்டபட்டு கிடந்தார் என பொலிசாரால் விசாரணை திசை திருப்பபட்டது என்ாது குறிப்பிடத்தக்கது.
    அமைச்சுக்குள் நுழைந்த பொதுபல சேனாவின் காணொளி

    முன்னைய செய்தி (23.04.2014)
    அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்குள் பொது பல சேனா அமைப்பின் பிக்குமார் இன்று புதன்கிழமை (2014-04-23) காலை 11.30 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
    அமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைந்த பொதுபலசேனா அமைப்பின் பிக்குமார் இவ்வமைச்சில் வட்டரக விஜித தேரரை மறைத்து வைப்பதாகவும் அவரை உடனடியாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
    அமைச்சின் முற்றத்தில் ஊடகவியலாளரை சந்தித்த பொதுபலசேனாவின் பிக்குமார் பின்னர் அமைச்சுக்குள் நுழைந்து வட்டரக தேரருக்கு அமைச்சர் ரிசாத் ஆதரவு வழங்குவதாகவும் அவரை இங்கு ஒழித்து வைத்துள்ளார் எனவும் அதிகார தொணியில் பேசினர்.
    அமைச்சின் ஒவ்வொரு அறையாக தேடுதல் நடத்திய இவர்கள். இதன் போது கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம்களின் பிரச்சினையை முஸ்லிம்களிடம் வைத்துக்கொள்ளுங்கள் பௌத்த பிக்குகளிடம் இதனை குறிப்பிட வேண்டாம் என தெரிவித்தனர்.
    பொதுபல சேனா இறுதியாக கைத்தொழில் வனிகத்துறை அமைச்சின் செயலாளரை சந்தித்து பேசியுள்ளனர். இதன் போது அமைச்சின் செயலாளர் வந்த பிக்குமாரை இருந்து ஆகாரம் அருந்தி செல்லுமாறு கூறிய போது வரும்நாட்களில் ஒரு மரணம் விழும் அப்பொழுது வந்து சாப்பிடுகிறோம் என கூறி இவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    bodu balasena visit to risad office1bodu balasena visit to risad office1.jpg2bodu balasena visit to risad office1.jpg3  bodu balasena visit to risad office1.jpg5bodu balasena visit to risad office1.jpg6bodu balasena visit to risad office1.jpg7    bodu balasena visit to risad office1.jpg11bodu balasena visit to risad office1.jpg12
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: குற்றவாழிகளை தெரியேல்லையாம் மக்களிடம் உதவி கேட்கும் பொலீஸ் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top