உச்சரிப்புடன் செய்தி வாசிக்கும் பெண் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஜப்பானைச் சேர்ந்த இஷ்கியுரோ என்ற விஞ்ஞானி தனது குழுவினருடன் சேர்ந்து ரோபோ ஒன்றை உருவாக்கினார். தற்போது டோக்கியோ தேசிய அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ பெண் உருவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரோபோவை செய்தி வாசிக்க வைத்து விஞ்ஞானிகள் அசத்தினர்.
அழகான பெண் போன்ற தோற்றத்தில், தெளிவான உச்சரிப்பில் செய்தி வாசித்த அந்த ரோபோவை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். தற்போது, கோடோமொராய்டு என்ற குழந்தை ரோபோ ஒன்றையும், ஓட்டோனாராய்டு என்ற வயது வந்தவரைப் போன்ற பெண் ரோபோ ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
குழந்தை ரோபோ மழலை மொழியில் செய்திகள் வாசிக்கிறது. இந்த ரோபோக்களில் செய்திகளின் டேட்டாக்களை பதிவு செய்து விட்டால், அந்த ரோபோக்கள் தெளிவான உச்சரிப்பில் செய்திகள் வாசிக்கும். வருங்காலத்தில் இன்னும் புத்திசாலித்தனமான முறையில் செய்தி வாசிக்கும் ரோபோக்களை உருவாக்க இருப்பதாக விஞ்ஞானி இஷ்கியுரோ கூறியுள்ளார்
மேலும் இது தொடர்பான காணொளி