பெண் பொலிஸாருக்கென புதிய சீருடை அறிமுகம்! - TK Copy பெண் பொலிஸாருக்கென புதிய சீருடை அறிமுகம்! - TK Copy

  • Latest News

    பெண் பொலிஸாருக்கென புதிய சீருடை அறிமுகம்!

    பெண் பொலிஸாருக்கென புதிய சீருடையை அறிமுகப் படுத்த
    பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
    இது தொடர்பில், பொலிஸ் மா அதிபர் முன்வைத்த பரிந்துரைக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    தற்பொழுது பெண் பொலிஸார் பயன்படுத்தும் சீருடைக்கு மேலதிகமாக புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய சீருடை தற்பொழுது பயன்படுத்தும் காக்கி நிறத்தைக் கொண்டதாக தயாரிக்கப்பட உள்ளதோடு பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் பதவியிலுள்ள பெண்களுக்கு நீண்ட காற்சட்டையுடன் கூடியதாக புதிய சீருடை இருக்கும்.
    உதவிப் பொ லிஸ் அத்தியட்சகர் தரம் மற்றும் பொலிஸ் பரிசோதகர் தரம் உள்ள பெண் பொலிஸாருக்கும் நீண்ட காற்சட்டையுடன் புஷ் கோட்டும் வழங்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
    பெண் பொலிஸாரின் அலுவலக உத்தியோகபூர்வ கடமைகளையும் மற்றும் வசதிகளையும் கருத்திற்கொண்டு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது.இது தவிர பொலிஸ் சேவையில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் புதிய சீருடையொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பெண் பொலிஸாருக்கென புதிய சீருடை அறிமுகம்! Rating: 5 Reviewed By: Bagalavan