சீனா - இலங்கையுடனான உறவை பலப்படுத்துகிறது - TK Copy சீனா - இலங்கையுடனான உறவை பலப்படுத்துகிறது - TK Copy

  • Latest News

    சீனா - இலங்கையுடனான உறவை பலப்படுத்துகிறது

    இலங்கையில் சீனா பாரிய நீர் விநியோக திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த ‘மென்மையான வலு’ திட்டத்தின் மூலம் சீனா, இலங்கையுடனான உறவை ஆழமாக்கவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

    சீனாவின் இயந்திர பொறியியல் கூட்டுத்தாபனம், சுமார் 230 மில்லியன் டொலர்கள் செலவில் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது.இந்த நிறுவனம் ஏற்கனவே 1.2 பில்லியன் செலவிலான நுரைச்சோலை லக்விஜய அனல் மின்சார திட்டத்தில் ஈடுபட்ட நிறுவனமாகும்.இந்தநிலையில் குறித்த நிறுவனத்தின் புதிய நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் கொழும்பின் புறநகர் பகுதிகளில் உள்ள 600,000 மக்கள் சுத்தமான குடிநீரை பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 54,000 கியூபிக் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.நீர் விநியோகத்துக்காக சுமார் 1000 கிலோ மீற்றர் நீர்குழாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன.இதேவேளை, புதுடில்லியில் உள்ள ஆய்வாளர்கள், சீனா -  இலங்கையுடனும், மாலைதீவுடனும் தீவிமான உறவைப் பேணுவதற்காகவே இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சீனா - இலங்கையுடனான உறவை பலப்படுத்துகிறது Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top