விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத் தளபதி வசந்த கரணகொடவிற்கும் தனக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.
கடற்படைத் தளபதி விடுத்த வேண்டுகோள் ஒன்றினால் தரைப்படையின் முன்னேற்றம் பாதிக்கப்படும் நிலை இருந்தது.இதனால் தான் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் என அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் விடுதலைப் புலிகளுடன் நேரடி மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதிக்கு அருகில் தனது கடற்படைப் படகுகளை நிறுத்த கடற்படை தளபதி அனுமதியை கோரினார் எனவும் இராணுவம் கடற்படைப் படகுகள் மீது தவறுதலாக தாக்குதலை மேற்கொள்ளலாம் என்பதால் தான் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார் எனவும் அவர் மேலும் கூறினார்.
விடுதலைப்புலிகளை தோற்கடிக்க நிறைவேற்று அதிகார முறை தேவைப்படவில்லை தானே அனைத்து முடிவுகளையும் எடுத்ததார் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்