தெல்லிப்பழை கிழக்கு சிற்றியம்புளியடி கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக அப்பகுதி கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர். அதனை அடுத்து நேற்று சுகாதார பரிசோதகர் சுகாதார தொண்டர்களுடன் சென்று கிணறுகளை பார்வையிட்டபோது எண்ணைக் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து இப்பகுதியில் குடிநீர் வழங்குவதற்காக வலி. வடக்கு பிரதேச சபைக்கு அறிவித்து உள்ளதாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளதாகவும் சுகாதார வைத்தியஅதிகாரி தெரிவித்தார்.