வடமாகாணத்தில் படையினரால் கையகப்படுத்தியுள்ள நிலங்களை மீண்டும் கையளிப்பதோடு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை அரசு உடன் தொடங்க வேண்டுமென அமைச்சர் வாசுதேவ நானயக்கார அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
வட மாகாணத்திற்கு சரியான முறையில் அதிகாரங்களை அரசு வழங்க வேண்டும். ஆளுனரைக் கொண்டு வடமாகாண சபையை கட்டுப்படுத்தும் நிலையை மாற்ற வேண்டும் சிவில் நிர்வாகத்தில் படையினர் தலையிடக்கூடாது.
மஹிந்தவின் அரசின் ஊடாகவே அபிவிருத்தி சகலவற்றையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் சந்திரிக்கா மைத்திரியால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது எனவும் கூறினார்.