பத்திரிகைகளுக்கு எதிராக 1653 முறைப்பாடுகள் - TK Copy பத்திரிகைகளுக்கு எதிராக 1653 முறைப்பாடுகள் - TK Copy

  • Latest News

    பத்திரிகைகளுக்கு எதிராக 1653 முறைப்பாடுகள்

    இலங்கையில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளுக்கு எதிராக ஓராண்டு காலத்தில் மாத்திரம் 1653 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுகுமார் றொக்வூட் தெரிவித்துள்ளார்.   

    பத்திரிகைகளின் செயற்பாடுகள் மற்றும் தகவல் பெறும் உரிமை தொடர்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடாத்திய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

    கடந்த 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு எதிராகவே மேற்படி முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.    மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் ஊடகப்பிரிவு முறைப்பாட்டு பொறுப்பதிகாரி அமீன் உசைன் தெரிவிக்கையில்,   பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஊடகங்களுக்கு பாதுகாப்பான ஒன்றாக உள்ளது.

    ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திலும் முறைப்பாட்டு அலுவலகம் இருக்க வேண்டும்.   வரையறைக்கு உட்பட்ட அச்சு ஊடகங்கள் குறித்து அவற்றில் வருகின்ற தவறுகளை சுட்டிக்காட்ட முடியும் ஆனால் இணையத்தளங்களை அவ்வாறு உட்படுத்த முடியாது.      சரியான முறையில் செய்திகளை வெளியிட்டால் நல்ல வரவேற்பு ஏற்படுத்தும் என்றார்.  
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பத்திரிகைகளுக்கு எதிராக 1653 முறைப்பாடுகள் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top