சுதந்திர ஊடக அமைப்பு மைத்திரிபாலவிடம் 10 கோரிக்கைகளை முன்வைத்தது - TK Copy சுதந்திர ஊடக அமைப்பு மைத்திரிபாலவிடம் 10 கோரிக்கைகளை முன்வைத்தது - TK Copy

  • Latest News

    சுதந்திர ஊடக அமைப்பு மைத்திரிபாலவிடம் 10 கோரிக்கைகளை முன்வைத்தது

    எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு சுதந்திர ஊடக அமைப்பு 10 கோரிக்கையை  முன்வைத்தது. 


    குறித்த கோரிக்கைகளின்  பிற்பாடு ஊடக சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்காக குரல் கொடுக்க பேனாவும் அன்பளிப்பு செய்யப்பட்டது. ஊடகவியலாளர் தேசிய மாநாடு நேற்று கொழும்பு தர்ம விஜய மன்றத்தில் இடம்பெற்ற வேளையில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

    மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையில் 
    வடக்கு கிழக்கு உட்பட ஏனைய ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் கடத்தல் போன்றவற்றிற்கு துரித விசாரணையை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

    அத்தோடு ஊடகவியலாளர்களின் நலன் கருதி புதிய தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுடன் குறித்த தொழில்நுட்ப கருவிகளுக்கான வரியை குறைத்தல். 

    மேலும் இணையத்தள ஊடகவியலாளர் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதுடன் குறித்த நபர்களுக்கு தொழில் சார் அங்கீகாரம் வழங்கல் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவை ஒழுங்கு மயப்படுத்தல் ஊடக கல்லூரியின் செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருதல். 

    ஊடக அடக்கு முறையை நீக்கும் முறை கொண்டு வருவதுடன் பிராந்திய மற்றும் ஏனைய ஊடகவியலாளர் சமூக காப்புறுதி திட்டமொன்றை உருவாக்கல் மேற்படி 10கோரிக்கை பொது எதிரணி பொது வேட்பாளர் உட்பட ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நேற்று முன்வைக்கப்பட்டது. 
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சுதந்திர ஊடக அமைப்பு மைத்திரிபாலவிடம் 10 கோரிக்கைகளை முன்வைத்தது Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top