தமிழ் ஈழ ஆதரவுக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் ஏகப்பட்ட மாறுதல்களைச் செய்யப் போவதாக படத்தின் இயக்குநர் பிரவீண் காந்தி அறிக்கை விட்டுள்ளார்.
புலிப்பார்வை பட விழாவில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எங்களுக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. அதற்காக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் மதன் தெரிவித்துள்ளார்.
தெரியாம நடந்துடுச்சி.. அடிபட்ட மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! - வேந்தர் மூவீஸ் மதன் இன்னொரு பக்கம்,
படத்தின் இயக்குநரும், பிரபாகரன் வேடத்தில் நடித்துள்ளவருமான எஸ் மதன் செய்தியாளர்களைச் சந்தித்து, படத்தில் ஆட்சேபணைக்குரிய ஒரு காட்சி கூட இருக்காது என்று உறுதியளித்தார்.
"புலிப்பார்வை படத்தைப் பார்த்துவிட்டு அய்யா பழ நெடுமாறனும் அண்ணன் சீமானும் சொன்ன திருத்தங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம்.
அனைத்து வகையிலும் தலைவர் பிரபாகரனையும் அவர் மகன் பாலச்சந்திரனையும் இயக்கத்தையும் கௌரவப்படுத்தும் வகையில்தான் இந்தப் படத்தின் காட்சிகள் இருக்கும். தோழர் வேல்முருகன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் ஒரு உறுதி கூறுகின்றேன்.
நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு திருப்தியடைந்த பிறகே இந்தப் படத்தை வெளியிடுவேன். இல்லாவிட்டால் எத்தனை கோடி நஷ்டமானாலும் படத்தை வெளியிட மாட்டேன்.
புலிப்பார்வை நிகழ்ச்சியில் மாணவர்கள் தாக்கப்பட்டபோது, நாங்கள் மேடையில் இருந்தோம். என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனாலும் அடிபட்ட மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.