பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இருவர் கடத்தப்பட்டனர் - TK Copy பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இருவர் கடத்தப்பட்டனர் - TK Copy

  • Latest News

    பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இருவர் கடத்தப்பட்டனர்

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

    சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம்
    ஆண்டில் பயின்று வந்த யோகராஜா நிரோஷன் மற்றும் அதே ஆண்டில் பயிலும் மற்றுமொரு தமிழ் மாணவன் நேற்று பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

    இந்த மாணவர்கள் இருவரும் நேற்று முற்பகல் 11 மணி மற்றும் 12 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் கடத்தச் செல்லப்பட்டுள்ளதாகவும், இதனை பல்கலைக்கழக நிர்வாகம் அறிந்து வைத்திருந்ததாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

    கடத்தப்பட்ட மாணவர்களின் அடையாள அட்டைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தனது பொறுப்பில் எடுத்து கொண்டுள்ளது. இதன் பின்னர் நிர்வாகத்திடம் கேள்விகளை எழுப்பியதை தொடர்ந்தும் மேற்படி இரு மாணவர்களும் சமனல கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    கடந்த காலங்களில் குறித்த பல்கலைக்கழகத்திற்கு ஓரிரு தமிழ் மாணவர்களே கற்று வந்திருந்த நிலையில் கடந்தாண்டு மட்டும் 20 தமிழ் மாணவர்கள்பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தனர்.

    இதனால் கடந்த பல மாதங்களாக சிங்கள காடையர்களால் தொடர்ந்தும் தமிழ் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும் தற்போது அது மேலும் விரிவடைந்திருப்பதாகவும் முன்னைநாள் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் எமது செய்தித்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

    சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் கைது செய்யப்பட்ட மாணவர்கள் குறித்து சமனலகந்த பொலிஸார் தகவல் கேட்ட போது அது பற்றி கேட்க வேண்டாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

    இதனையடுத்து சங்கத்தின் உறுப்பினர்கள் பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் மாணவர்கள் பற்றி விசாரித்த போது, அவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.







    மாணவர்கள் கைது செய்யப்பட்ட 24 மணிநேரம் கடந்துள்ள நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதுடன் மாணவர்களுக்கோ, பெற்றோருக்கோ அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் பற்றி அறிவிக்கவில்லை என்றும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

    சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் யாழ். முகமாலை பிரதேசத்தை சேர்ந்த ஒரு தமிழ் மாணவர் அண்மையில் மாணவர் விடுதியில் தங்கியிருந்த போது தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிறுவனை நலன் விசாரித்தார் ஜனாதிபதி!

    இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்ட சிறுவன், அவரது பெற்றோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்தார்.

    இன்றைய சந்திப்பில் ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்‌ஷ மற்றும் பொலிஸ்மா அதிபர் இலங்ககோன் ஆகியோர் உடனிருந்தனர். சிறுவனின் நலன் குறித்து அவரது பெற்றோரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

    மீகலெவ - குணுபொலகம பிரதேச வியாபாரியின் 4 வயது மகனான டனிது யசீன் என்ற சிறுவன் கடந்த 28ஆம் திகதி கடத்தப்பட்டார்.

    இந்தச் சிறுவன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இருவர் கடத்தப்பட்டனர் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top