படகுப்பயணத்தில அவுஸ்ரேலியாவுக்குப்
போகத்துடிக்கிற ஆட்களைப் பற்றி என்ன நினைக்கிறியள்? படிப்பை இடையில நிப்பாட்டிப்போட்டு ஊர்சுத்திற பெடியளைப்பற்றி உங்கட அபிப்பிராயம் என்ன?
ஒண்டுக்கு மூண்டு நாலு மோட்டார்ச்சயிக்கிள் எண்டு வைச்சுக்கொண்டிருக்கிற குடும்பங்களைப்பற்றி என்ன சொல்லிறியள்?
அரச ஆதரவு அரசியல் வாதிகளின் பின்னாலும் புலனாய்வுப்பிரிவுக்கு பின்னாலும் திரிந்து காவலிகளாகி குடு குடுமி கடுக்கன் கத்தி பொல்லு என்று இத்தியாதிகளுடன் அலையும் வேம்பல்களைப்பற்றி எண்ண சொல்லுறியள்?
ஏட்டிக்குப்போட்டியாக டிப்பர் எடுக்கிறது. இல்லாட்டிக்கு ஓட்டோ றிக்ஷா வாங்கிறது. அதுமில்லாட்டில் ஹார்ட்வெயர்க் கடைபோடுறது எண்டு திட்டமில்லாமல் தொழிலைத் தொடங்கி வில்லங்கப்படுகிற ஆட்களைப்பற்றி உங்கட கருத்தென்ன?
இருக்கிற வீட்டை இடிச்சுப் பெருப்பிச்சுக் கட்டிறது, இல்லாட்டிக்கு தோட்டக்காணியையோ வயற்காணியையோ மண் நிரப்பிக் கடைகட்டுகிறவையைப்பற்றி என்ன சொல்லுவியள்?
ஊருக்கு ஊர் ஒழுங்கைக்கு ஒழுங்கை எண்டு போட்டி போட்டுக்கொண்டு கலியாண மண்டபங்களைக் கட்டிக் காயவிடுகிற ஆட்களைப்பற்றி என்ன சொல்லப்போறியள்? வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேணும்.
இஞ்ச உள்ள பெடியங்கள் வேண்டாம் எண்டு அடம்பிடிச்சுக்கொண்டு தாய் தகப்பனுக்குத் தலையிடியைக்குடுக்கிற பெண்பிள்ளையளைப்பற்றிச் சொல்லுங்கோ. ‘வெளிநாட்டுக்குப் போனால்தான் வெள்ளைப் பெட்டையளைக் கட்டலாம்.
இஞ்ச இருந்தால் கறுத்துக் காய்ஞ்ச பெட்டையளைத்தான் கட்டோணும்’ எண்டு செய்த வேலையையும் படிச்ச படிப்பையும் விட்டுப்போட்டு ஏஜென்ஸிக்குக் காசைக்கட்டிப்போட்டு அலையிற பெடியளைப்பற்றி என்ன நினைப்பியள்?
தமிழீழம் கேட்டு போராட்ட இயக்கங்கள் தொடக்கி தமிழினத்தை அழிக்க வெளிக்கிடவை தண்டனைக்குப் பயந்தும் தமது சகாக்களுக்குப் பயந்தும் நாட்டை விட்டோடி சீமையில சிங்காரமாய் இருந்துவிட்டு அனைத்தும் முடிந்தவுடன் அண்ணனில்லா காலத்தில் திண்ணை சுகம்தேடி மத்தியில கூட்டு மாகாணத்தில் வறுவல் எண்டு கூளுக்காக கோவணத்தை இழக்கும் தோழர்களைப்றி என்னதான் எண்ணுறியள்?
பள்ளிக்கூடங்களில பெடியளோட சேர்ந்து தண்ணிடிக்கிற வாத்திமாரைப்பற்றி என்ன சொல்லுறீங்கள்? வாத்திமாருக்கு சாராய பாருக்கு பேமிற்று வாங்கி கொடுக்கும் அமைசரின் மாமாக்கள் பற்றி உங்கள் அவிப்பிராயம் என்ன ரியூட்டறிக்கு வாற பெடியளிட்ட அரசியல் பாடங்கள் நடத்துகிற வாத்திமாரைப்பற்றியும் நிர்வாகிகளைப்பற்றியும் உங்கட கருத்தென்ன?
கல்லூரிகளின் பழையமாணவர்களும்நலன் விரும்பிகளும் பிச்சைஎடுத்து விளையாட்டுத்திடலும் சிறுவர் பூங்காவும் அமைத்தாலும் தன்ரகையால் திறந்தால்தான் அடுத்த அமைச்சரவை ஒதுக்கீடு என்று அதிகாரம் செலுத்தும் அடிவருடிகளைப்ப்றி அளவீடு என்ன அரசாங்கம் ஒதுக்கிற நிதியை வைச்சுச் செய்த வேலைகளுக்கு தாங்கள்தான் வந்து திறக்கவேணும் எண்டு அடம்பிடிக்கிற அரச அரசியல்வாதிகளைப்பற்றி என்ன சொல்லப்போறியள்?
தலையை நிமிர்த்தி நிக்க முடியாத நெருப்பெட்டி மினிபஸ்சுக்குள்ள, அடை அடையெண்டு அடைஞ்சு போட்டு அந்தப் பக்கம் திரும்பி நில்லுங்கோ, இந்தப்பக்கம் பாருங்கோ, முன்னுக்குப்போங்கோ, பின்னால வாங்கோ எண்டு கொமாண்ட் குடுக்கிற மினிபஸ்காரரைப்பற்றி உங்கட அபிப்பிராயம் என்ன?
மருந்தடிச்சுப் பழுக்க வைச்ச பழங்களை எல்லாம் ‘தானாய்க்கனிஞ்சு பழுத்த பழங்கள்தான் இது. வாங்கிக்கொண்டு போங்கோ’ எண்டு வலியக் கூப்பிட்டு வில்லங்கமாக விற்கிற பழக்கடைக்காரரைப்பற்றி என்ன சொல்லுறியள்? நாறல் மீனையும் ஐஸ் போட்ட மீனையும் இப்பதான் தூண்டில்ல இருந்த கழட்டிக்கொண்டு வந்த மீன் எண்டு சொல்லிக் கண்ணைப்பொத்தி அடிக்க நினைக்கிற மீன் வியாபாரியை என்ன செய்யலாம் எண்டு சொல்லுங்கோ?
‘ஆளுநர் ஒரு கெட்ட ஆள். ஆளுநரின்ரை செயலாளர் ஆளுநருக்குப் போட்டுக்குடுக்கிற ஆள்’ எண்டெல்லாம் வெளியில பகிரங்கமாகக் கதைச்சுப்போட்டு, தனியாகப் போன் எடுத்து, ஹி ஹி எண்டு வளைஞ்சு குளைஞ்சு தங்கட சொந்தத்தேவைகளைப்பற்றி ரகசியமாகக் கதைக்கிற – கோரிக்கை விடுகிற – மாகாணசபை உறுப்பினர்களைப்பற்றி என்ன சொல்லுவியள்?
நடக்காத ஒண்டையும் இல்லாத ஒண்டையும் ஊதிப்பெருப்பிச்சு கை கால் கண் வாய் மூக்கு எல்லாம் வைச்சு பொய்ச்செய்தி எழுதி ஊரில விக்கிற பேப்பர்காரைப்பற்றி என்ன நினைக்கிறியள்?
சண்டை நடக்கேக்க, வெளிநாடுகளில இருந்து வந்து இஞ்ச இருந்த சொத்துகளை எல்லாம் வித்துக் காசாக்கிக்கொண்டு போன ஆட்கள் இப்ப வந்து, ‘புலிகள் வெருட்டித்தான் எல்லாத்தையும் வாங்கினவை. புலிகளை வைச்சு வெருட்டித்தான் சொத்தையெல்லாம் பறிச்சவையள்’ எண்டு இப்ப கதைவிட்டு, திரும்பவும் விற்ற காணியையே விலையில்லாமல் திரும்பவும் எடுக்க அலையிற ஆட்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கோ.
வெளியில இருந்து வந்து குடும்பமாகப் பிக்னிக் போய் கண்டி, நுவரெலியா, கதிர்காமம், திருகோணமலை, நல்லூர், நயினாதீவு, முள்ளிவாய்க்கால், சாடடி, கசூரினா பீச் எண்டு உலாத்திறவை, போற வாற இடங்களில எடுக்கிற கொட்டில், குடிசை வீடுகளைப் பேஸ் புக்கில போட்டு நாட்டுப்பற்றையும் தேசிய விசுவாசத்தையும் அரச எதிர்ப்பையும் காட்டுறதைப்பற்றி என்ன நினைக்கிறியள்?
இந்த மாதிரியான ‘அந்த மாதிரி’க் கேஸ்களோடதான் நாங்கள் எல்லாம் வாழவேண்டியிருக்கு. இவயளுக்கெல்லாம் எப்பதான் இ ……..டி ..,,,,விழுமோ அந்த மகிந்தானந்தாவுக்கே வெளிச்சம் …………
நன்றி-இணையம்