சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மீறல்கள்
தொடர்பான விசாரணையில், பாகிஸ்தானிய அரசாங்கம் தன் மீது எத்தகைய தலையீடுகளையும் மேற்கொள்ள முடியாது என்று, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா விசாரணைக்குப் பரிந்துரை செய்த, கடந்த மார்ச் மாத ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை தோற்கடிக்கவும், அதனைத் தடுக்கவும் பாகிஸ்தான் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டது.
இத்தகைய நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.நா விசாரணை நிபுணர் அஸ்மா ஜஹாங்கீர் மீது, இந்த விசாரணை விவகாரத்தில் அந்த நாட்டு அரசாங்கம் செல்வாக்குச் செலுத்துமா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்குப் பதிலளித்துள்ள, அஸ்மா ஜஹாங்கீர், “ஒரு நிபுணர் என்ற வகையில் நான் சுதந்திரமானவள். எப்போதும் அவ்வாறு தான் இருக்கிறேன். எனது நாட்டு அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து இதுவரை என்னிடம் பேசவில்லை.
எந்த அரசாங்கமோ, நிறுவனமோ என் மீது தலையீடு செய்ய முடியாது.” என்று அவர்