மலேசியாவில் ஈழத்தமிழர்கள் வாழ்ந்துவரும்
பகுதிகள் காவல்துறையினராலும் மற்றும் சிறப்பு அதிகாரிகளாலும் விசேடதேடுதல் வேட்டை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா புலனாய்வுதுறை கொடுத்த மேலதிக தகவல்களின் அடிப்படையில் இந்த தேடுதல் வேட்டை அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா புலனாய்வுதுறையினரால் ஏற்கனவே மலேசிய அரசிற்கு தமக்கு தேவையானோரின் பெயர் விபரங்களை அறிவித்துள்ளதாகவும் அதனை அடுத்து மலேசிய அரசும் அவர்களின் முகவரியை பெற்றுள்ளதாகவும் விரைவில் இவ்வாறானவர்களை தேடி கைதுசெய்யும் நடவடிக்கை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிய வருகின்றது.
அரசாங்கத்திற்கு சொந்தமான சிங்கள பத்திரிகையொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வேறு பெயர்களில் மலேசியாவில் தங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய பாதுகாப்பு தரப்பினர் எதிர்வரும் நாட்களில் விரிவான தேடுதல் வேட்டைகளை முன்னெடுக்க உள்ளதாக சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.கடந்த 5ம் திகதி நான்கு போ் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.