பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற தமிழன் - TK Copy பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற தமிழன் - TK Copy

  • Latest News

    பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற தமிழன்


    பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள்
    பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர்.

    இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புை அமைப்பை வடிவமைத்திருந்தார்.

    அதனால் இவரது பாடசாலை முதலாவது இடத்தைப் பெற்று 150,000 பெறுமதியான பரிசினைத் தட்டிக்கொண்டது. இளைய தலைமுறையினரிடையே எரிவாயு சேமிப்பு, பசுமை பேணல் என்பன சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

    இங்கு ஐந்நூறுக்கு மேற்ப்பட்ட பாடசாலைகள் பங்கு பங்குபற்றியிருந்தன . ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முழுமையாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

    அவர்களில் ஆறு பேர் முதற்சுற்றில் தெரிவு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் இவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது இச்சாதனையால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதன் காரணமாக எம்தமிழ் சமூகமும் பெருமைகொண்டு குறிஞ்சிகனை வாழ்த்துகின்றது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற தமிழன் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top