கற்பழித்த படைவீரர்களை உடனடியாக விட்டுவிடுங்கள் -மகிந்த உத்தரவு - TK Copy கற்பழித்த படைவீரர்களை உடனடியாக விட்டுவிடுங்கள் -மகிந்த உத்தரவு - TK Copy

  • Latest News

    கற்பழித்த படைவீரர்களை உடனடியாக விட்டுவிடுங்கள் -மகிந்த உத்தரவு


    யாழ்ப்பாணத்தில் 11 வயது மற்றும் 9
    வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை வீரர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத வேண்டாம் என நாட்டின் ஜனாதிபதியும் முப்படைகளினதும் சேனாதிபதியுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அவரது பாராளுமன்ற விவகார இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான குமாரசிறி ஹெட்டிகே, காவல்துறையினருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

    கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் இரண்டு தடவைகள் குமாரசிறி ஹெட்டிகெ நெடுந்தீவு காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளார். குறித்த கடற்படை வீரர்களை விளக்க மறியலில் வைத்தால் படையினரின் மனோ திடத்திற்கு களங்கம் ஏற்படக் கூடுமெனத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். 

    யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் ஆர்.டி.பீ. விமலசேன மற்றம் நெடுந்தீவிற்குப் பொறுப்பான கவால்துறை அத்தியட்சகர் எஸ்.பீ.சேனாநாயக்க ஆகியோருக்கும் இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார்.

    காவல்துறை அத்தியட்சகர்களின் உத்தரவிற்கு அமைய நெடுந்தீவு காவல்நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பாளர் ஆர்.கே.பீ. சேனாரட்ன குறித்த கடற்படை வீரர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்துள்ளார்.

    2014ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி 18-2014 என்ற முறைப்பாட்டு இலக்கத்தில் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    “சிறுமியைக் கடத்திச் சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்” என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களின் போது சிறுமியை வைத்தியசாலைக்கு அனுப்பி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது என்ற போதிலும் அவ்வாறான அறிக்கை எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

    11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு கடற்படை உத்தியோகத்தர்களும் காரைநகா கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களாகும். 

    1. அஜித் குமார
    2. ருபசிங்க ஆராச்சிலாகே சாமர இந்திக்க
    3. நதீர தில்சான் ரத்நாயக்க
    4. குடாபாலகே ஜயவீர
    5. இந்திக்க குமார விதானாரச்சி
    6. ரணசிங்க சுமித் சுபாஸ்
    7. விகும் சேனாக பியசிறி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கற்பழித்த படைவீரர்களை உடனடியாக விட்டுவிடுங்கள் -மகிந்த உத்தரவு Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top