தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு மறக்கமுடியாத நிகழ்வு தொடர்-9 - TK Copy தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு மறக்கமுடியாத நிகழ்வு தொடர்-9 - TK Copy

  • Latest News

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு மறக்கமுடியாத நிகழ்வு தொடர்-9


    புலேந்திரன் _ குமரப்பா குழுவினரின் வீரச்சாவில்
    இந்திய படையின் கறை பட்ட கரங்கள் எப்படி விளையாடின என்பதற்கு நான் இங்கு கூறும் சம்பவம் ஒரு நல்ல உதாரணம் ஆகும். இதை முன்னர் ஒரே முறைதான் நான் குறிப்பிட்டு உள்ளேன்.

    அதைத்தவிர வேறு யாருமே இதை இதுவரை குறிப்பிடவில்லை என்பது எனக்கு நன்கு தெரியும். அவர்களின் வீரச்சாவு பற்றிய செய்தி ஈழம் முழுதும் பரவியதும் புலிகளும் மக்களும் கொதித்தார்கள் அப்போது மாத்தயாவிடம் இருந்து எனக்கு அவசர அழைப்பு வந்தது மருத்துவ மனையில் இருந்துசென்று அவரை சந்தித்தேன்.

    அப்போதுதான் அங்கே என்ன நடந்ததது என்பதை நான் அவரிடம் இருந்து முழுமையாக அறிந்தேன் எல்லோரின் வீர உடல்களையும் பலாலியில் இருந்து கொண்டு வருவதற்கான ஆயத்தங்களை உடனே செய்யும்படி கூறினார் அவர் அப்போது நேரம் பகல் ஒருமணி! இரண்டுமணிக்குள் எல்லோருக்கும் வேண்டிய பெட்டிகள் மற்றும் ஆயத்தங்களுடன் பலாலிக்கு இரண்டு மணிக்குள் போய்விடவேண்டும்.

    அப்படித்தான் இந்திய ராணுவ தளபதி கூறி இருந்தாராம் உடனே நான் தலை தெறிக்க ஓடினேன் என் உதவியாளர்களுக்கும் சில வேலைகளை சொல்லிவிட்டு போய் எல்லோருக்கும் உரிய பெட்டிகளை தயார் செய்து உரிய வாகனங்களை தயார் செய்து,பலாலி ராணுவ முகாம் எல்லைக்குள் நாம் போனபோது நேரம் சரியாக இரண்டு மணி! எனக்கே என்னை நம்ப முடியாமல் இருந்தது.

    என்வாழ்வில் எப்போதுமே நான் நேரம் தவறியது கிடையாது நான் பின்னாளில் அரசியல் துறையின் பேச்சாளன் ஆக இருந்தபோது இந்த நேரம் தவறாத குணமே பலதடவை என் உயிருக்கு உலை வைக்க கூடிய சம்பவங்களை ஏற்படுத்தியது என்பதையும் நான் மறக்கவில்லை சாவகச்சேரி பஸ்நிலையத்தில் நடந்த கிட்டண்ணா நினைவுக்கூட்டத்தில் சரியாக கூட்டம் தொடங்கும் நேரத்தில் 'புக்காரா' வந்து அடிக்கதொடங்கி விட்டான்.

    கிட்டண்ணாவின் தாயும் அங்கேதான் இருந்தார் எனது போராளிகள் இருவர் இல்லையென்றால் நான் இல்லை அதை நினைத்தால் இன்றும் சிரிப்பாகவே இருக்கிறது பம்பரை கண்டதுமே அவர்கள் "அண்ணே படுங்கள் படுங்கள்" என்று கூறவே நான் அதை பொருட் படுத்தாமல் இருக்கவே அவர்கள் என்னை தள்ளிவிட்டு எனக்குமேல் படுத்தபோதுதான் 'பம்பர்' குண்டின் சத்தம் என் காதுகளை துளைத்ததை கேட்டேன் பக்கத்தில் பார்த்தேன்.

    கிட்டு அண்ணாவின் அம்மாவும் படுத்திருந்தார் அவரை நான் எப்போது எங்கே கண்டாலும் கிட்டண்ணா இறந்தபின் கேட்கும் ஒருவார்த்தை "புலிகிடந்த குகை எங்கே போகுது?" அவரின் வீட்டுக்கு போனால் குழையல் சோறு கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன் அத்தனை ருசியாக இருக்கும் அவரின் கைக் குழையல் சாப்பாட்டுக்கு!..என்றுதான்.

    உடனே சிரிப்பார் உங்களுக்கு அது புரியும் என்று நினைக்கிறன்..புற நானூறை நினைத்து பாருங்கள் ..புரியும்.. இன்று அதே குகை எனக்கு பக்கத்தில்.....கிட்டம்மா வீட்டு சமையலை ருசி பார்க்காத போராளிகளே அந்த நேரம் இல்லை என்று சொல்லலாம் ..ஆகா!.அது என்ன சமையலா? எத்தனை வகை கறிகள்?..என்ன ருசி?..மகன் சண்டையில் புலி...இந்த அம்மாவோ சமையலில் புலி.. பொட்டம்மானை அடிக்கடி கிட்டம்மா வீட்டில் சந்திக்கலாம்...

    பொட்டம்மானைதானா விட்டது கிட்டம்மா சமையல்? எல்லோரயும்தான்..அனால் மகன் இறந்து சிலகாலத்தில் அம்மாவும் அவரை பின் தொடர்ந்தபோது நான் வருந்தியது, எனக்குமட்டும்தான் புரியும். கிட்டம்மா சாப்பாட்டை குழைத்து ஒவ்வொரு கையாக தரும் அழகுஇருக்கிறதே அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும்.

    சரி அன்பர்களே!வாருங்கள் நான் விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன் ....

    நீங்கள் நம்பவே மாட்டீர்கள் ....பிற்பகல் இரண்டு மணிமுதல் எழுமணி வரை பலாலியில் உள்ள ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் நானும் மாத்தயாவும் எங்களோடு வந்தவர்களும் காத்து கொண்ட இருந்தோம் அவர்கள் இன்னும் வித்து உடல்களை தரவில்லை. ஒரு ராணுவ கப்டன் 'அங்கே வந்தான் நான் அவரிடம் கேட்டபோது "வரும்"என்றே பதில் சொன்னார்........

    மணி சரியாக 7ஆகியது அப்போதுதான் வந்தார்கள்....அந்த இடத்தில் ஒரு வெளிச்சம் கூட இல்லை ஒருமேஜர் வந்து மாத்தயாவிடம் உடல்களை பொறுப்பு எடுக்கும்படி கூறினார்...மாத்தயா, என்னை பொறுப்பு எடுக்கும்படி சொல்ல....நான் அங்கே போனபோது அடையாளம் காண முடியாதவாறு இருட்டாக இருந்தது எனது பையில் இருந்த டோர்ச் வெளிச்சத்தின் மூலம் அங்கிருந்து கொண்டுவந்த உடல்களை அடையாளம் கண்டு குறித்துகொண்டது மட்டுமல்ல........

    அவர்களின் உடலையும் பரிசோதனை செய்தபோதுதான் எனது இரத்த நாளங்கள் உறைந்து போனது...புலேந்திரன் ,கரன் போன்றவர்களின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதை அவதானித்தேன் அவர்களின் உடைகளை களைந்து நல்லபடி பரிசோதிக்க முயன்றபோது அந்த ராணுவ மேஜர் எதோ ஹிந்தியில் சொல்லி சத்தம் போட்டான்....ஏன் இப்போது சத்தம் போடுகிறாய்? என்று ஆங்கிலத்தில் கேட்டேன் தனக்கு நேரமில்ல என்றும், உடனே தனது பொறுப்பாளர் வரும்படி பணித்திருப்பதாகவும் கூறினார்.....

    எனக்கு அவனது பேச்சில் சந்தேகம் வரவே....அவனை எண்ணி கவலை படாமல் புலேந்திரனின் உடைகளை களைந்து அங்கே பார்த்தபோது .அவரது ...மர்ம உறுப்புகளிலும் அதை சுற்றி இருந்த இடங்களிலும் 'பயோ நைட்டால் ' குத்தி கிழிக்கபட்ட காயங்களை கண்டேன் உடனே அவற்றை குறிப்பு எடுத்துகொண்டு மாத்தயாவிடம் போய் நடந்தவைகளை சொன்னேன்.

    எலோரையும் பரிசோதித்தே எடுக்கவேண்டும் அதுமட்டுமல்ல அவர்களின் உடலில் உள்ள காயங்களை குறிப்பிட்டு அங்கே அவைகளை கொண்டுவந்த மேஜர் கையொப்பம் போடடபின்தான் உடல்களை அப்புற படுத்த வேண்டும் அவர்கள் சயனைட் அடித்து இறந்து இருந்தால் இந்த காயங்கள் எப்படி வர முடியும்.?. என்று கேட்டேன்.

    நான் போர்குணம் கொண்டால் யாரையும் பார்க்கமாட்டேன் என்பது மாத்தயாவுக்கு தெரியும். ஆனால் அந்த மேஜரோ எம்மை மிரட்டுவதுபோல் பொறுப்பு எடுக்காவிட்டால் நாங்கள் திருப்பி கொண்டு போகிறோம் என்று சத்தம் போட்டான். நானும் சத்தம் போட்டேன்....இவை என்ன வன்னிக்காட்டில் நீங்கள் வேட்டை ஆடிய மிருகங்களா....எங்கள் போராளிகள் ......

    ஆறுமணி நேரமாக நாம் இந்த உடல்களை பெற காத்திருக்க... அதன்பின் இருட்டில் கொண்டுவந்து எமக்கு நாடகம் ஆடுகிறீர்கள்....என்றேன். எமக்குள் வாக்குவாதம் வருவதை கண்ட மாத்தையா "சரி விடுங்க எப்பிடியாவது போகட்டும் பொறுப்பெடுங்கள்".. என்றார். எனது கோபம் அடங்கவில்லை. அவரின் கட்டளையை எப்படி மீறினேன் என்பது எனக்கே தெரியாது. "நீ ங்களே எடுங்கள் என்னால் முடியாது.." என்று சொன்னேன். அவர் அதன் பின் எந்த பேச்சும் பேசாமல் வந்து உடல்களை எண்ணிவிட்டு அவர்கள் கொடுத்த படிவத்தில் கையொப்பமிட்டார்.


    அன்பர்களே...பார்த்தீர்களா?.. இந்திய ராணுவம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடூரங்களுக்கு எப்படி துணை போனதென்று புலேந்திரனின் வீரம் என்ன சாதாரண வீரமா? சிங்கள் படைகளுக்கு ஒருகாலத்தில் திருகோணமலையில் சிம்ம சொப்பனமாக விளங்கிய தனிக்காட்டு புலியல்லவா அவன்? அவனை இப்படி சின்னாபின்னமாக்கி குதறியிருக்கிரார்களே அந்த ஓநாய்கள் ?அதற்கு துணை நின்றார்களே இந்திய படை?..இவர்களா எம்மை காக்க வந்தவர்கள்?

    "திருகோணமலையின் ஒவ்வொரு மரம், செடி கொடி கூட புலேந்திரனின் வீர சாவு கேட்டு அழுதது..அந்த மண் எமது தமிழ் ஈழத்தின் தலை நகரமாக ஒருகாலத்தில் எமது தேசிய தலைவரால் பிரகடனம் செய்யபட்டது.

    "மயில் ஆட..குயில்பாட....
    மந்திகள் மத்தளம் போடும் .
    மானோட...மரையோட....
    மைனாக்கள் கவிபாடும்...

    தேனூறும் மலர்தேடி
    வண்டுகள் இசை பாடும்...
    கரையோடு அலைபேசும் ...
    கடல்நண்டு.. மணல்மீது

    படம் கீறும்...! மலையோடு
    முகில்வந்து கதைபேசும்..
    கோணேசர் தலம் எங்கள் தமிழ் ஈழ தாகம்"..!

    -மு.வே.யோகேஸ்வரன்-

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு மறக்கமுடியாத நிகழ்வு தொடர்-9 Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top