இன்றையநாள் எப்படி 21.07.2014 - TK Copy இன்றையநாள் எப்படி 21.07.2014 - TK Copy

  • Latest News

    இன்றையநாள் எப்படி 21.07.2014

    இன்றையநாள் எப்படி

    மாலை 3.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
    குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உதவிக் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 3.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
    சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதிற்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வாகனத்திலிருந்து வந்த பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
    இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியுண்டு. அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
    இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
    மாலை 3.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
    கணவன்-மனைவிக்குள் ஆரோக்‌கியமான விவாதங்கள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மாலை 3.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
     விருச்சிகம்
    வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
    இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
    எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. வெளிவட்டாத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
    திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வேற்று மதத்தினரால் நன்மைக் கிட்டும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். தாயாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

    சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பழைய கடனையை பைசல் செய்யும் அளவிற்கு பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல் நீங்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: இன்றையநாள் எப்படி 21.07.2014 Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top