யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987ம் ஆண்டு
இந்திய அமைதிகாக்கும் படையினரால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு யாழ். குடாநாட்டில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையினர் வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட சுமார் 21பேரை படுகொலை செய்தனர். இவர்களின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நிகழ்வு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் திரண்டு இறந்தவர்களின் நினைவாக தீபங்களை ஏற்றியதுடன், அவர்களுக்கான மலரஞ்சலிகளும் செலுத்தினர்.