சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டதாக வழக்குத் தொடுனரால் குற்றஞ்சாட்டப்பட்டு, அதற்காக குற்றங்காணப்பட்டு, மூன்று செய்தியாளர்களான ஆஸ்திரேலியாவின் பீட்டர் கிறீஸ்ட், எகிப்தின் முஹமட் பஃமி மற்றும் பஹீர் முஹமட் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பரில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டது முதல் சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்த வழக்கு, பெரும் கண்டனத்தையும் எழுப்பியுள்ளது. இது தொடர்பில் இறுதி நேரத்தில் ஆஸ்திரேலிய பிரதமரால் எகிப்திய அதிபருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையும் தோல்வியில் முடிந்துள்ளது. இவை குறித்த காணொளி.