நீண்டபலகாலமாக மண்ணை மீட்பதற்காகவும்,
மீட்ட மண்ணைப்பாதுகாப்பதற்காகவும் தொடர்ச்சியாக போராடிவரும் ஓர் பரம்பரையைச்சார்ந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் அந்தப்போராட்டம் பல்வேறு வகைகளிலும் தொடர்ச்சியாகத்தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. ஏற்கனவே நீர்வளம் குறைவான எமது தீவகப்பிரதேசத்திலே இன்று அதிகாரத்தரப்பினரது அனுசரணையுடன் சட்டவிரோத மண்ணகழ்வு, மரம் தறிப்பு என்பன தாராளமாக இடம்பெற்று வருகின்றன். இது கடலரிப்பு, கடல்நீர் ஊருக்குள் வருதல் முதலிய பல அழிவுகளுக்கு காரணமாக அமைந்து வருகின்றது எனத்தெரிவித்தார்.
மீட்ட மண்ணைப்பாதுகாப்பதற்காகவும் தொடர்ச்சியாக போராடிவரும் ஓர் பரம்பரையைச்சார்ந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் அந்தப்போராட்டம் பல்வேறு வகைகளிலும் தொடர்ச்சியாகத்தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. ஏற்கனவே நீர்வளம் குறைவான எமது தீவகப்பிரதேசத்திலே இன்று அதிகாரத்தரப்பினரது அனுசரணையுடன் சட்டவிரோத மண்ணகழ்வு, மரம் தறிப்பு என்பன தாராளமாக இடம்பெற்று வருகின்றன். இது கடலரிப்பு, கடல்நீர் ஊருக்குள் வருதல் முதலிய பல அழிவுகளுக்கு காரணமாக அமைந்து வருகின்றது எனத்தெரிவித்தார்.
உலக சூழல் தினத்தை முன்னிட்டு வடமாகாண விவசாய, கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடத்திய உலக சூழல் தின விழா இன்று 05.06.2014 வியாழக்கிழமை மண்டைதீவு, தெருவழிப்பிள்ளையார் கோயில் அருகில் அமைச்சின் செயலாளர் எம்.ஹால்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
இன்று இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் மற்றும் பல ஆசிரியர்கள் கலந்துகொண்டிருக்கிறீர்கள். இன்றைய ஜூன் 05 ஆம் திகதி தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத, மறக்கக்கூடாத ஒரு நாளாகும். தன்னுடைய 24 ஆவது வயதில் தமிழினத்துக்காக முதன் முதலில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட வீரப்போராளி பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுநாளாகும். அம்மாணவப்போராளி அழிக்கப்படும் தன் இனத்தின் மீதான பற்றினால் இனத்தைக்காக்க செயற்பட்டதைப்போல, இங்குள்ள மாணவர்கள் தம் கண்முன்னே அழிக்கப்படும் இயற்கை வளங்களை காக்கும் பணியில் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும் என நான் அழைப்பு விடுக்க விரும்புகின்றேன்.
எந்தவொரு சமுதாய மாற்றத்துக்கும் மாணவர் சக்திதான் மிகப்பெரிய தூணாக இருந்திருக்கிறது என்பதனால் தான், நான் நம்புகிறேன், இங்கே அதிகமான மாணவர்கள் கூடியிருக்கிற காரணத்தினால் இன்றைக்கு நாங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி வெற்றியளிக்கும். இன்றைக்கு இந்த மண்ணிலே நாங்கள் நாட்டியிருக்கும் இந்த விதை நாளை மிகப்பெரும் விருட்சமாக வடமாகாணம் முழுவதும் விரிவடைந்துதொடர்ச்சியான ஒரு செயல்திறன் மிக்க ஒரு இயக்கமாக இயற்கைவளத்தைப்பாதுகாக்கும் ஒரு உறுதிப்பாட்டோடு எமது அமைச்சர் சூழலியலாளர் ஐங்கரநேசன் அவர்களின் தலைமையின் கீழ் முன்சென்றிடவேண்டும் என இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன். எனத்தெரிவித்தர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மற்றும் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வேலணைப்பிரதேசசபைத்தலைவர் சி.சிவராசா, யாழ்.பல்கலைக்கழக விவசாய பீட பேராசிரியர் கு.மிகுந்தன், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப்பணிப்பாளர் திருமதி .வி.சத்தியகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர். யாழ்.மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிரைவுற்றது. இவ்விழாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.