ஒரு முட்டையிட்டுவிட்டு கொக்கரித்து திரியாமல் ஆமைபோல அரசு செயற்பட வேண்டும் - TK Copy ஒரு முட்டையிட்டுவிட்டு கொக்கரித்து திரியாமல் ஆமைபோல அரசு செயற்பட வேண்டும் - TK Copy

  • Latest News

    ஒரு முட்டையிட்டுவிட்டு கொக்கரித்து திரியாமல் ஆமைபோல அரசு செயற்பட வேண்டும்


    வடக்கு மாகாண சபைக்கு ஐயாயிரம்
    மில்லியன் ரூபா ஒதுக்­கி­யுள்­ள­தாக அமைச்சர் ஒருவர் தெரி­வித்­துள்­ளமை உண்­மைக்குப் புறம்­பான விட­ய­மாகும். எமது மாகாண சபைக்கு ஊழி­யர்­க­ளி­னு­டைய சம்­பளம் உட்­பட 1,872 மில்லியன் ரூபா மட்­டுமே இது­வரை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

    எங்களைப் பொறுத்தவரையில் எமக்குக் கிடைக்கின்ற நிதியினைக் கொண்டு மக்களுக்கு எவ்வாறான சேவைகளை வழங்கலாம் என்பது தொடர்பாக மட்டுமே சிந்தித்து வருகின்றோம். எமக்கு ஐயாயிரம் மில்லியன் ரூபா வழங்கியுள்ளதாக தெரிவித்துக் கொண்டு நான்காயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் தனது கையில் வைத்துக்கொண்டு பல வேலைத்திட்டங்களை செய்துவருகின்றது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 

    கிளி­நொச்சி வட்டக்கச்சி மாய­வனூர் புழு­தி­யாற்று நீர்ப்­பா­சனத் திட்­டத்­திற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடை­பெற்ற போது இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், யாழ்ப்­பா­ணத்தில் பல இடங்­களில் நீர் மாச­டைந்­துள்­ளது. 

    இங்கே பல இடங்­களில் நீரில்லை. அவ்­வாறு நீரற்ற நிலை­யி­லுள்ள மூன்று கிராம சேவை­யாளர் பிரி­வு­க­ளுக்கு நீரை வழங்­கு­வ­தற்­காக புழு­தி­யாற்றுக் குளம் ஏற்று நீர்ப்­பா­சனத் திட்டம் ஆரம்­பித்து வைக்­கப்­ப­டு­கின்­றது. இப்­பொ­ழுது இங்கு ஏற்­பட்­டுள்ள வரட்­சியால் எம்மைச் சுற்றுப் பல­வி­த­மான பிரச்­சி­னைகள் இடம்­பெ­று­கின்­றன. 

    இந்த நீர் எமது வாழ்க்­கைக்கு எவ்­வ­ளவு தூரம் முக்­கி­ய­மா­னது என்­பதை தற்­பொ­ழுது உண­ரக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் நீர் இருந்தும் கூட அது மாச­டைந்­துள்­ளது. எனவே நீரைப் பாது­காத்து, வரை­ய­றுத்து மக்­க­ளுக்கு வழங்­க­வேண்டும் என்­ப­தற்­கா­கவே நாம் இது­போன்ற திட்­டங்­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்து வரு­கின்றோம். 

    இத்­த­கைய திட்­டங்­க­ளி­னூ­டாக பசுமை நிறைந்த சோலை­யாக விரைவில் எமது பிர­தே­சங்­களும் மாற­வேண்­டு­மென்­பதே எமது விருப்­ப­மாகும். இப்­பொ­ழு­தெல்லாம் அர­சி­யலில் கோழிக் கலா­சா­ரமே நடக்­கின்­றது. அதனை ஆமைக் கலா­சா­ர­மாக மாற்­ற­வேண்­டு­மென்­பதே எமது விருப்­ப­மாகும். கோழியைப் பொறுத்­த­வ­ரையில் ஒரு முட்­டையை இட்­டு­விட்டால் தான் முட்­டை­யிட்டு விட்டேன் எனக் கொக்­க­ரித்து ஊரையே கூட்டும். 

    ஆனால் ஆமை­யா­னது நூற்­றுக்­க­ணக்­கான முட்­டை­களை இட்ட பின்பும் அமை­தி­யாக இருக்கும். நாங்கள் என்­னத்தைச் செய்­கின்றோம் என்று எம்­மிடம் கேட்­கின்­றனர். எமது மக்­களில் பலர் தனிப்­பட்ட முறையில் எம்­மிடம் வந்து உத­வி­களை வழங்­கு­மாறு கோரு­கின்­றனர். தமக்­கான வாழ்­வா­தா­ரத்தை ஏற்­ப­டுத்தித் தரு­மாறும் கேட்­கின்­றனர். 

    இம்­மக்­க­ளுக்­கான வாழ்­வா­தா­ரத்தை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்­காக பல நிறு­வ­னங்­க­ளி­டமும் அமைப்­புக்­க­ளி­டமும் உத­வி­களைப் பெற்று வழங்கி வரு­கின்றோம். இவற்­றை­யெல்லாம் நாங்கள் வெளி­யிலே சொல்­லு­வ­தில்லை. ஆனால் இது­போன்ற விட­யங்­களை வெளி­யிலே சொல்­ல­வேண்டாம் என்­பதே தற்­போ­தைய அர­சியல் கலா­சா­ர­மாகும். 

    இந்த வகையில் இந்த ஏற்று நீர்ப்­பா­சனத் திட்­டத்தை வெளி­யிலே சொல்­லக்­கூ­டிய வகையில் தம்பி ஐங்­க­ர­நே­சனும் அவ­ரு­டைய அமைச்சின் செய­லா­ளரும் வகுத்து கொடுத்­துள்­ளனர். எம்மைப் பொறுத்­த­வ­ரையில் எமக்கு வழங்­கப்­ப­டு­கின்ற பணத்­தி­லி­ருந்து சரி­யான முறையில் திட்­டங்­களை வகுத்து மக்­க­ளுக்கு திருப்­தி­யான சேவை­களை வழங்­கு­வ­தற்­கா­கவே நாங்கள் முயற்­சித்து வரு­கின்றோம். 

    எமக்கு ஐயா­யிரம் கோடி ரூபா உத­விகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ஒருவர் தெரி­வித்­துள்ளார் என பத்­தி­ரி­கை­களில் செய்­திகள் பிர­சு­ர­மா­கி­யுள்­ளன. இத்­த­கவல் எனக்கே விசித்­தி­ர­மாக இருந்­தது. இவ்­வாறு எமக்கு ஐயா­யிரம் கோடி ரூபா தரப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ஒருவர் தெரி­வித்­துள்ள விடயம் தொடர்­பாக நான் எமது அலு­வ­லர்­க­ளிடம் கேட்டேன். 


    எமக்குத் தரப்­பட்­டி­ருப்­பது ஆயி­ரத்து 872 கோடி ரூபா என அவர்கள் என்­னிடம் தெரி­வித்­தார்கள். எமது சபைக்­குட்­பட்ட அலு­வ­லர்­க­ளுக்கு வழ­மை­யாக வழங்­க­வேண்­டிய சம்­பளம் உள்­ளிட்ட 80 சத­வீ­த­மான பணத்­துடன் மேல­தி­க­மாக 20 சத­வீ­த­மான பணம் மட்­டுமே இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் எமக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இப் பணம் எங்­க­ளு­டைய கையில் இருக்­கின்­றது. 


    இதனைக் கொண்டு உங்­க­ளுக்கு வேலை­களைச் செய்­து­த­ர­வுள்ளோம். ஆனால் ஐயா­யிரம் கோடி ரூபா எனத் தெரி­வித்துக் கொண்டு 4 ஆயிரம் கோடி ரூபாவை அர­சாங்கம் தனது கையில் வைத்துக் கொண்டு பல வேலைத்­திட்­டங்­களை செய்து வரு­கின்­றது. இப்­ப­ணத்­தினை எமக்குத் தந்து நாம் என்­னத்தைச் செய்தோம் எனக் கேள்­வி­களைக் கேட்­கின்­றார்கள். 

    இப்­ப­ணத்தை எங்­க­ளிடம் தந்து விட்டோம் எனவும் நீங்கள் என்ன செய்­கின்­றீர்கள் எனவும் எம்­மிடம் கேள்வி கேட்­கின்­றார்கள். எங்­களைப் பொறுத்­த­வ­ரையில் எமக்குக் கிடைக்­கின்ற நிதி­யினைக் கொண்டு மக்­க­ளுக்கு எவ்­வா­றான சேவை­களை வழங்­கலாம் என்­பது தொடர்­பாக மட்டும் சிந்­தித்து வரு­கின்றோம். இவ்­வா­றான பிரச்­சி­னை­களை கூறி பெரி­து­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் விரும்­ப­வில்லை. 

    எனவே எதிர்­கா­லத்தில் அர­சாங்­கத்­தினை முழு­மை­யாக நம்­பி­யி­ருக்­காது எங்­க­ளு­டைய மாகாண சபை அர­சாங்­கத்­துடன் இணைந்து எவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்­ள­மு­டியும் என்­பது தொடர்­பாக மக்கள் சிந்­திக்­க­வேண்டும். தற்­பொ­ழுது மக்கள் மக்­களே ஆளு­கின்ற காலம் ஒன்று வந்­துள்­ளது. அந்­த­வ­கையில் நாங்கள் மக்­க­ளுடன் இணைந்து உங்­களில் ஒரு­வ­ரா­கவே இப்­ப­ணி­களில் ஈடு­பட்டு வரு­கின்றோம். 

    எனவே மக்­க­ளா­கிய நீங்கள் எங்­க­ளுக்கு ஒத்­தா­சை­யாக இருக்­க­வேண்டும். நாங்கள் உங்­க­ளுக்கு ஒத்­தா­சை­யாக இருக்­கின்றோம். அந்த வகையில் நாம் யாழ்ப்­பா­ணத்தில் சில இளை­ஞர்­களை ஒன்­றி­ணைத்து மக்­க­ளுக்கு சேவை­களை வழங்­கு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். இந்தப் பணியில் எங்­க­ளு­டைய ஊர்­களில் நாங்கள் எவ்­வா­றான பணி­களைச் செய்­ய­மு­டி­யுமோ அவற்றைச் செய்துகொண்டு அரசாங்கம் தருகின்ற உதவிகளையும் பெற்று எமக்குரிய நன்மைகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது அவாவாகும். 


    அந்த வகையில் எதிர்காலத்தில் எமக்கு நல்லதொரு வாழ்க்கை அமையும். அதற்கு யார் எந்ததெந்த வழிகளில் தடைகளை விதித்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி முன்னேறிச் செல்வோம் என்றார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், வடமாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ. ஐங்கரநேசன் ஆகியோருடன் மாகாண சபை உறுப்பினர்களான சு. பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் ஆகியோரும் அரசாங்க அதிகாரிக-ளும் பொது மக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஒரு முட்டையிட்டுவிட்டு கொக்கரித்து திரியாமல் ஆமைபோல அரசு செயற்பட வேண்டும் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top