மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா என்பன இணைந்து 17-06-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணியை அமைதியான முறையில் நடாத்தியது.
இக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர் பாதுகாப்பு அமைச்சரே பொது பல சேனாவை உடனடியாக தடை செய்,சிறு பான்மை மக்களை பாதுகாப்பது மஹிந்த சிந்தனையல்லவா ?, இனவாதிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்து,பாதுகாப்பு செயலாளரே சிறு பான்மை மக்களுக்கு பாதுகாப்பு தா?, ?, இனவாதிகளை கைது செய்,அரசே மத வன்முறையை உடனடியாக நிறுத்து போன்ற பல்வேறு தமிழ்,சிங்கள,ஆங்கில பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இதில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட அதன் உறுப்பினர்கள் ,நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் ஹாரூன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா ஆகியவற்றின் பிரதிநிதிகள் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ,உலமாக்கள் ,பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
மேலும் கிழக்கின் பல பகுதிகளில் ஹர்த்தால் இடம்பெற்றுள்ளது