கண்டியில் பொதுபலசேனாவின் தாக்குதலில் இருந்து தப்பிய பொலிஸ் - TK Copy கண்டியில் பொதுபலசேனாவின் தாக்குதலில் இருந்து தப்பிய பொலிஸ் - TK Copy

  • Latest News

    கண்டியில் பொதுபலசேனாவின் தாக்குதலில் இருந்து தப்பிய பொலிஸ்


    எங்களுக்கு பாதுகாப்புத் தருவது தான்
    உன் வேலை, இல்லை பாதுகாப்புச் செயலாளரிடம் முறையிட வேண்டியிருக்கும் என்று ஞானசார தேரர் பொலிஸாரை அச்சுறுத்தியுள்ளார்.

    பொதுபலசேனாவின் ஏற்பாட்டில் நேற்று கண்டி தலதா மாளிகையில் உறுதிமொழி ஏற்பு (அதிர்ஷ்டான) பூஜை நடைபெற்றது.

    இதன்போது பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அம்பன்வெல, பொதுபல சேனாவின் பூஜையை பிறிதோர் இடத்தில் நடத்துமாறு ஞானசார தேரரைக் கேட்டுக் கொண்டார். அதற்குப் பதிலளித்த ஞானசார தேரர், நாங்கள் எதனைச் செய்வதாக இருந்தாலும் பாதுகாப்புச் செயலாளரிடம் சொல்லிவிட்டுத்தான் செய்கின்றோம்.

    எனவே எங்களுக்குப் பாதுகாப்புத் தருவது தான் உன் வேலை. ஒதுங்கிப் போய் உன் வேலையை மட்டும் பார்த்துக் கொள். இல்லை என்றால் பாதுகாப்புச் செயலாளரிடம் முறையிட வேண்டியிருக்கும் என்று கடுமையான தொனியில் எச்சரித்தார்.

    இதனையடுத்து பொலிசார் அவ்விடத்திலிருந்து விலகிச் சென்று பாதுகாப்புப் பணியில் மட்டும் ஈடுபட்டனர். பூஜைகள் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஞானசார தேரர், தமது அமைப்பு இனவாத அமைப்பு இல்லை என்றும், வன்முறையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார். 

    எனினும் ஊடகவியலாளர்கள் யாரையும் அனுமதிக்காத நிலையில் தலதா மாளிகைக்குள் நடைபெற்ற பூஜையின் போது அளுத்கம தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    மேலும் இனிவரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு மும்மணிகளின் ஆசி வேண்டியும் பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ளது. பௌத்தத்தைப் பாதுகாப்பதற்காக தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பதாக பூஜையில் கலந்துகொண்டவர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

    இதன் காரணமாகவே தகவல்கள் வெளியில் கசிவதைத் தடுக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் உள் நுழையாது தடுக்கப்பட்டிருந்தனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கண்டியில் பொதுபலசேனாவின் தாக்குதலில் இருந்து தப்பிய பொலிஸ் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top