கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் சட்டசபைக்காக
இன்று நடந்த தேர்தலில் லிபரல் கட்சி ஆட்சியை அமைக்கும் சாத்தியமே அதிகம் காணப்படுகிறது. பல ஊழல் குற்றச்சாட்டுக்களிற்கு இக் கட்சி உள்ளாக்கப்பட்டிருந்தாலும் ஏனைய கட்சிகளின் கொள்கைகளோ தலைவர்களோ உறுதியான நிலைப்பாட்டையுடையவர்களாக அடையாளப்படுத்தப்படத் தவறியமையால் லிபரல் கட்சியையே மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக முன்னேற்றகர கண்சவேட்டிவ் கட்சி இரண்டாம் நிலையைத் தக்கவைத்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக புதிய ஜனநாயகக் கட்சி மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளது. இதர சிறு கட்சிகளோ அல்லது சுயேட்சை வேட்பாளர்களோ எந்தவொரு தொகுதியிலும் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் இச் செய்தியெழுதப்படும் வரை இல்லாதவொரு சூழ்நிலையே காணப்படுகிறது. இந் நிலையில் லிபரல்கட்சி பெரும்பாண்மைப் பலத்தைப் பெறும் என்பது உறுதியாக்கப்பட்டுவிட்டது. இத் தேர்தலில் போட்டியிட்ட மூன்று தமிழர்களும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.
நீதன் சாண் போட்டியிட்ட தொகுதியின் மத்திய பாராளுமன்றத்திற்கான உறுப்பினராக ராதிகா சிற்சபைஈசன் தேர்வு செய்யப்பட்டதும் நீதனும் ராதிகாவும் புதிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராதிகா மத்திய தேர்தலில் வெற்றியீட்டிய போது 5,000 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றிருந்தார். தற்போது நீதன் சாண் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது இந்தத் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சிக்கான செல்வாக்கு குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.
முன்னேற்றகர கண்சவேட்டிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இரு தமிழர்களும் வெற்றி வாய்ப்பைத் மீண்டும் தவற விட்டுள்ளனர். இரண்டாம் இனைப்பு ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள 107 தொகுதிகளில் 58 தொகுதிகளை லிபரல்கட்சியும், 28 தொகுதிகளை முன்னேற்றகர கண்சவேட்டிவ் கட்சியும், 21 தொகுதிகளை புதிய ஜனநாயகக் கட்சியும் தக்க வைத்துள்ளன. இதன் பிரகாரம் அறுதிப் பெரும்பாண்மைக்குத் தேவையான 54 ஆசணங்களை விட மேலதிகமாக 4 ஆசணங்களைப் பெற்று லிபரல் கட்சி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது.
அநேகமான தருணங்களில் கருத்துக் கணிப்பின் பிரகாரமே ஆட்சியமையும் என்பதும் இம்முறைய கருத்துக் கணிப்பினைப் புறந்தள்ளி லிபரல் கட்சி அறுதிப் பெரும்பாண்மை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது