இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை
விடுவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி கடந்த இரண்டு தினங்களில் கைது செய்யப்பட்டிருந்த 82 மீனவர்களையும் விடுவிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் வலியுறுத்தலின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக அவர் இந்த வலியுறுத்தலை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நேற்று இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடற்படையினர் எம்மை மோசமாகத் தாக்கினர்- விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஐனாதிபதி பணித்துள்ள நிலையில், தாம் கைது செய்யப்பட்டபோது கடற்படையினர் தம்மை மிகமோச மாக தாக்கியதுடன், தம்மைக் கொண்டு மீன்பிடித்து கடற்படைப் படகுகளில் ஏற்றிச் சென்றதாக கைதான இந்திய மீனவர்கள் இன்று காலை ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றனர்.
நேற்று முன்தினம் 7ம் திகதி இரவு 10 மணியளவில் குறித்த மீனவர்கள் யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
எனினும் அவர்கள் 8ம் திகதி காலை 11மணிக்கே யாழ்.காங்கேசன்து றை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
இந்நிலையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்துக் கூறுகையில்,
இந்நிலையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்துக் கூறுகையில்,
7ம் திகதி இரவு 10 மணிக்கு எம்மை கடற்படையினர் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். ஆனால் ஐீபிஎஸ் வேலை செய்யவில்லை. மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது
அதனால் இடம் தெரியாமல் நாங்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டோம். அப்போதே கடற்படையினர் எம்மை பிடித்தனர். பிடித்தவுடன் எங்களுடைய ஒரு படகை தங்கள் படகால் இடித்து சேதப்படுத்தினர்.
அது பின்னர் கடலில் மூழ்கிய நிலையில் மீதமாக இருந்த 8 படகுகளிலும் கடற்படையினர் ஏறிக்கொண்டு எம்மை கடுமையாக தாக்கினார்கள். அதில் ஒரு மீனவரின் முன்பக்க பல் உடைந்துள்ளதுடன், பலருக்கு தற்போதும் தழும்புகள் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் தாம் கடற்படை உயர் அதிகாரியின் உத்தரவிற்கமைவாகவே அடிப்பதாக கூறியதுடன்,
எம்மிடமிருந்து மீன்களை பறித்துக் கொண்டு மீண்டும் மீன் பிடிக்குமாறு கூறினார்கள். அதனை நாங்கள் பிடித் துக் கொடுத்த பின்னரே எங்களை கரைக்கு கொண்டுவந்தார்கள் என மீனவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றர்.