இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் பெண்கள்
எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் ஆகிய விவகாரங்கள் சிறிலங்காவுக்கு வியாழனன்று சவாலாக அமையவுள்ளது.
எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் ஆகிய விவகாரங்கள் சிறிலங்காவுக்கு வியாழனன்று சவாலாக அமையவுள்ளது.
போர் நெருக்கடி காரணமாக சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத பொதுமக்கள் விவகாரம் குறித்து ஐ.நாவின் மனித உரிமை மற்றும் இடம்பெயர் மக்களுக்கான விசேட பிரதிநிதி சலோகா பியானியின் இலங்கை பயணம் தொடர்பிலான அறிக்கை சபையில் சமர்பிக்கப்பட இருக்கின்றது.
இதற்கு சிறிலங்கா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சபையில் சூடான விவாதம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை லண்டனில் இடம்பெற்று வருகின்ற அனைத்துலக மோதற்களங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்த அனைத்துலக மாநாட்டிற்கு வலுவூட்டும் வகையில் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையிலும் இதே கருப்பொருளிலான உபமாநாடாக இந்நாளில் இடம்பெறுகின்றது.
லண்டன் மாநாட்டில் 140 வரையான நாடுகள் பங்கேற்கின்ற போதும், சிறிலங்கா இதனைப் புறக்கணித்தமை ஒருபுறமிருக்க போரின் போது, சிறிலங்காவில் பாலியல் வன்முறைகள் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளமை குறித்து இந்த மாநாட்டில், விவாதிக்கப்படாமை குறித்து பலரும் விசனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஜெனீவாவில் சிறிலங்கா விவாகாரம் பேசப்படலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்ர் வில்லியம் ஹேக் மற்றும் ஐ.நாவின் சிறப்பு தூதுவர் ஏஞ்சலினா ஜொலி மற்றும் ஐ.நாவின் உயர்மட்ட பிரதிநிதிகளும் ஜெனீவாவில் பங்கெடுக்கின்றனர்.