24 மணிநேரத்தில் 131 தமிழக மீனவர்கள் கைது - TK Copy 24 மணிநேரத்தில் 131 தமிழக மீனவர்கள் கைது - TK Copy

  • Latest News

    24 மணிநேரத்தில் 131 தமிழக மீனவர்கள் கைது

    நேற்று இரவு மீன்பிடிப்பதற்காக 8 படகுகளில் வந்த 32 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீரியல் வள துறையினரிடம் கேட்டபோது,
    கைது செய்யப்பட்டவர்களை தற்போது கடற்பரப்பில் இருந்து காங்கேசன்துறைக்கு கடற்படையினர் கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
    எனவே நண்பகல் அளவில் அனைவரையும் பொறுப்பேற்கவுள்ளதாகவும் யாழ். மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
    இதேவேளை, நேற்று சனிக்கிழமை மாலை தலைமன்னார் கடற்பரப்பில் 8 படகுகளில் வந்த 42பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    அத்துடன் நேற்று முன்தினம் எல்லை தாண்டிச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 12பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    24 மணிநேரத்தில் 131 தமிழக மீனவர்கள் கைது:  53 மீனவர்களை விடுவித்தது இலங்கை!
    இலங்கை கடற்படையினரால் கடந்த 24 மணி நேரத்திற்குள் 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 53 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளனர்.
    இராமேஸ்வரத்திலிருந்து நேற்று அதிகாலை 750 விசைப்படகுகளில் 900க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
    தனுஷ்கோடி - தலைமன்னாருக்கு இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை படையினர் 45 மீனவர்களை கைது செய்தனர்.
    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
    இந்நிலையில், இன்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் நாகையைச் சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    மேலும், தலைமன்னார் பகுதியில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த 54 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 131 மீனவர்களும், 26 விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
    53 மீனவர்கள் விடுவிப்பு
    இந்நிலையில், 53 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளனர். எஞ்சிய 78 மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள இலங்கை காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மன்னாரில் 46 மீனவர்களிடமும், யாழ்ப்பாணத்தில் 32 மீனவர்களிடமும் இலங்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறலால் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: 24 மணிநேரத்தில் 131 தமிழக மீனவர்கள் கைது Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top