மன்னார்: தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 33 பேரை
சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி தடைகாலம் முடிந்து, நேற்று இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 33 பேர் 7 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை மீனவர்களை சுற்றிவளைத்து கைது செய்தது.முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்ஷே பங்கேற்க வந்த போது தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் அவர்களது அச்சுறுத்தலும், மீனவர்களை கைது செய்வதும் தொடர்கிறது. நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு ஜுன் 16 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து அனுராதபுரம் சிறையில் மீனவர்கள் அடைக்கப்பட்டனர்.